For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பிக்பாஸ் சீசன் 5... இவர் தான் முதல் கன்ஃபார்ம் போட்டியாளரா ?

  |

  சென்னை : விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகும் பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்கு சீசன்கள் நிறைவடைந்து விட்டது. நான்காவது சீசனின் இறுதிப் போட்டி ஜனவரி மாதம் தான் நடத்தி முடிக்கப்பட்டது.

  Bigg Boss Tamil season 5 Promo 2 | Kamal Hassan

  நான்காவது சீசன் முடியும் போதே, ஐந்தாவது சீசன் ஜுன் - ஜுலை மாதத்தில் துவக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக திட்டமிட்டபடி நிகழ்ச்சியை துவக்க முடியவில்லை.

  கூகுள் குட்டப்பா படத்தில் தர்ஷனுடன் ரொமான்ஸ் காட்சி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த லாஸ்லியா! கூகுள் குட்டப்பா படத்தில் தர்ஷனுடன் ரொமான்ஸ் காட்சி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த லாஸ்லியா!

  இருந்தாலும் பிக்பாஸ் பற்றிய எதிர்பார்ப்பை குறைய விடாமல் செய்வதற்காக கடந்த 4 சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்களை வைத்து பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியை விஜய் டிவி நடத்தி வருகிறது. நெட்டிசன்களும் வழக்கம் போல் தங்கள் பங்கிற்கு, பிக்பாஸ் போட்டியாளர்கள் பட்டியல் என அவ்வப்போது சில பெயர்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி வந்தனர்.

  முறையான அறிவிப்பு

  முறையான அறிவிப்பு

  இப்படி போட்டியாளர்கள் பட்டியல் என்ற பெயரில் ஏதாவது ஒன்று வெளிவருவதும், அதை சம்பந்தப்பட்டவர்கள் மறுப்பதும் தொடர்ந்து நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு முடிவு கட்டும் விதமாக பிக்பாஸ் சீசன் 5 பற்றிய முறையான அறிவிப்புக்கள் வர துவங்கின.

  2 அசத்தல் ப்ரோமோ

  2 அசத்தல் ப்ரோமோ

  சமீபத்தில் பிக்பாஸ் லோகோவை மாற்றி வெளியிட்டனர். அதைத் தொடர்ந்து அசத்தலாக அடுத்தடுத்து இரண்டு ப்ரோமோக்களை வெளியிட்டு, நிகழ்ச்சி எப்போது துவங்கும் என்ற ஆர்வத்தை தூண்டி விட்டுள்ளனர். அக்டோபர் 3 ம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதனால் போட்டியாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

  இவர் தான் ஃபஸ்டா

  இவர் தான் ஃபஸ்டா

  லேட்டஸ்ட் தகவலாக, நடிகை ஷகீலாவின் மகளும், திருநங்கையுமான மிலா, பிக்பாஸ் சீசன் 5 ல் போட்டியாளராக பங்கேற்பது உறுதி செய்யப்பட்டு விட்டதாம். இறுதிப் பட்டியல் வெளியீட்டிற்காக தான் காத்திருக்க வேண்டி உள்ளது. ஆனால் பிக்பாஸ் சீசன் 5 தமிழில் முதல் போட்டியாளராக தான் உள்ளே சென்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

  வெளிச்சத்திற்கு வந்த உறவு

  வெளிச்சத்திற்கு வந்த உறவு

  சமீபத்தில் விஜய் டிவி,யில் நடந்த குக் வித் கோமாளி சீசன் 2 ல் போட்டியாளராக ஷகீலா கலந்து கொண்ட போது தான் மிலா பற்றிய விஷயங்கள் வெளிச்சத்திற்கு வந்தது. சிறு வயதாக இருந்த போதே மிலாவை தத்தெடுத்து வளர்த்து வருகிறாராம் ஷகீலா. தனது மகளாகவே மிலாவை வளர்த்து வருகிறார் ஷகீலா. இந்த அம்மா - மகள் பாச பிணைப்பு மிகவும் பிரபலம்.

  வைரலான ஃபோட்டோ

  வைரலான ஃபோட்டோ

  பிக்பாஸ் வீடு அமைக்கப்பட்டு வரும் ஈவிபி ஃபிலிம் சிட்டிக்கு வெளியே நின்று ஷகிலாவும், மிலாவும் எடுத்துக் கொண்ட ஃபோட்டோக்கள் சமீபத்தில் வைரலாகின. அப்போது முதலே மிலா, பிக்பாஸ் சீசன் 5 ல் கலந்து கொள்வது உறுதியாகி விட்டதாக தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கிறது. இதே போல் ஜி.பி.முத்துவின் பெயரும் போட்டியாளர்கள் பட்டியலில் அடிபட்டது.

  பிக்பாஸ் ரூல்ஸ் வேறப்பா

  பிக்பாஸ் ரூல்ஸ் வேறப்பா

  ஆனால் பிக்பாஸ் விதிகளின் படி, ஒரு போட்டியாளராக பங்கேற்பது உறுதியாகி விட்டாலே, அவர்கள் வெளி உலகிற்கு தலை காட்டாமல் இருக்க வேண்டும். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, பேட்டி அளிப்பது போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். அதனால் தற்போது கூறப்படும் பெயர்கள் இறுதி போட்டியாளர்கள் பட்டியலில் இடம்பெறுமா என்பது கேள்விக்குறி தான்.

  டிஆர்பி ரொம்ப முக்கியம்

  டிஆர்பி ரொம்ப முக்கியம்

  அதோடு சீசன் 4 ஐ விட இந்த சீசன் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக மிக கவனமாக போட்டியாளர்கள் தேர்வு நடைபெற்று வருகிறதாம். வழக்கம் போல் டிஆர்பி.,யை உச்சத்தில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக போட்டியாளர்கள் தேர்வு, விதிகள், போட்டிகள் உள்ளிட்டவைகள் தீவிரமாக ஆலோசனை செய்த பிறகு அமைக்கப்பட்டு வருகிறதாம்.

  English summary
  Latest buzz says Actress Shakeela's daughter and transgender Mila has been confirmed as a contestant in Big Boss Season 5. Photos of Shakila and Mila standing outside the EVP Film City where the Big Boss house is being set up have recently gone viral.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X