»   »  2016 பிளாஷ்பேக்: இல்லற பந்தத்தில் இணைந்த சின்னத்திரை நட்சத்திரங்கள்

2016 பிளாஷ்பேக்: இல்லற பந்தத்தில் இணைந்த சின்னத்திரை நட்சத்திரங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பேச்சிலர்களாக இருந்த சின்னத்திரை நட்சத்திரங்கள் சிலர் தன்னுடன் பணியாற்றியவர்களையே காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சிலர் பெற்றோர் பார்த்து வைத்த வரனை திருமணம் செய்து கொண்டனர்.

இந்த ஆண்டு அமித்பார்க்கவ், ஸ்ரீரஞ்சனி , நிஷா கிருஷ்ணன், கயல் சந்திரன் அஞ்சனா ஆகியோருடன் இயக்குநர் ராஜூ முருகன் தொகுப்பாளினி ஹேமா சின்ஹா, மைனா நந்தினி ஆகியோர் இந்த ஆண்டு இல்லற பந்தத்தில் இணைந்தவர்கள்.

கயல் சந்திரன் - அஞ்சனா

கயல் சந்திரன் - அஞ்சனா

கயல் பட நாயகன் சந்திரனும், சன் டி.வி நிகழ்ச்சித் தொகுப்பாளினி அஞ்சனாவும் காதலித்து கடந்த மார்ச் 10ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். 2016ம் ஆண்டு இவர்களுக்கு உற்சாக கொண்டாட்ட ஆண்டாக அமைந்தது.

அமித்பார்க்கவ் - சிவரஞ்சனி

அமித்பார்க்கவ் - சிவரஞ்சனி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கல்யாணம் முதல் காதல்வரை ஹீரோ அமித் தொகுப்பாளினி ஸ்ரீ ரஞ்சனியுடன் காதலில் விழுந்தார். இந்த ஆண்டு ஜூன் 16ம் தேதி கல்யாண பந்தத்தில் இந்த ஜோடி இணைந்தது. இப்போது ஜோடி நடன நிகழ்ச்சியில் நடனமாடி வருகிறது.

சன் டிவி தியா மேனன் - கார்த்திக்

சன் டிவி தியா மேனன் - கார்த்திக்

சன் டிவி தொகுப்பாளினி தியா மேனன் சிங்கப்பூர் தொழிலதிபர் கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சிங்கப்பூர் போனாலும் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியை தொடருகிறார்.

ராஜூ முருகன் - ஹேமா சின்ஹா

ராஜூ முருகன் - ஹேமா சின்ஹா

குக்கூ, ஜோக்கர் பட இயக்குநர் ராஜுமுருகன், டி.வி நிகழ்ச்சித் தொகுப்பாளினி ஹேமா சின்ஹா என்பவரைக் காதலித்து செப்டம்பர் 4ம் தேதி கரம்பிடித்தார். சுஜிதா என்ற பெயரில் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய சுஜிபாலா - பிரனேஷ் திருமணமும் நடந்தது.

மைனா நந்தினி - கார்த்திக்

மைனா நந்தினி - கார்த்திக்

சரவணன் மீனாட்சி சீரியல் தோழி நடிகை மைனா நந்தினிக்கு இந்த ஆண்டு சொந்தக்கார மாப்பிள்ளை கார்த்தியுடன் திருமணம் நடைபெற்றது. சரவணன் மீனாட்சி சீரியலில் நடிப்பை தொடர்ந்து வருகிறார்.

English summary
Television anchors and Actors who tied knot on 2016.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil