»   »  தோழிகள் இனி சகோதரிகளாய்... உற்சாகம் பொங்கும் கங்கா யமுனா

தோழிகள் இனி சகோதரிகளாய்... உற்சாகம் பொங்கும் கங்கா யமுனா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ராஜ் டிவியில் 'கங்கா யமுனா' என்ற புதிய மெகா சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. வெவ்வேறு தாய்களுக்குப் பிறந்த கங்காவும் யமுனாவும் வேறு வேறு சமுதாயத்தைச் சேர்ந்த குடும்பத்திற்குள் செல்கின்றனர். எதிரும் புதிருமாய் இருந்த இவர்கள் எப்படி தோழிகளாகி சகோதரிகளாக மாறுகின்றனர் என்பதை சுவாரஸ்யமாக கூறுகிறது இந்த கங்கா யமுனா.

ராஜ் டிவியில் டப்பிங் சீரியல்கள் அதிகம் ஒளிபரப்பாகி வருகிறது. சிந்து பைரவி தொடர் ரசிகர்களை கவர்ந்தது. தற்போது அந்த சீரியல் முடிவடைந்ததை அடுத்து அதே நேரத்தில் ஒளிபரப்பாகிறது கங்கா யமுனா தொடர்.

எதிரெதிர் வீட்டில் வசிக்கும் இரு பெண்களை பற்றிய கதை. அவர்களுக்குள் பெரியதாக நட்பு என்று ஏதும் இல்லை என்றாலும் ஒரே இசை கல்லூரியில் படிப்பதால் தோழிகளாகின்றனர். ஆனால் அவர்களது பாட்டிகள் இருவரும் எதிரிகளாய் உள்ளனர்.

கங்கா யமுனா

கங்கா யமுனா

கங்காவின் அப்பாவும், யமுனாவின் அம்மா சம்யுத்தாவும் பார்த்துக் கொண்டாலும் பேசிக்கொள்ளாது மொளனமாக நகர்வதை பார்க்கும் கங்கா யமுனாவிற்கு சந்தேகம் வருகிறது.

சின்ன சின்ன பிரச்சினைகள்

சின்ன சின்ன பிரச்சினைகள்

யமுனாவின் அம்மா வேலை செய்யும் நகை கடையில் வேண்டும் என்றே பிரச்சினை செய்கிறார் கங்காவின் பாட்டி. இதனால் மிகவும் மனவேதனை அடைகின்றனர் யமுனா வீட்டினர். பதிலுக்கு யமுனா குறும்பாக மீனை கொண்டு அவர்களது வீட்டில் போட்டுவிடுவேன் என மிரட்ட, பிரச்சினை முடிகிறது.

தோழிகள்

தோழிகள்

நாட்கள் செல்ல செல்ல கங்கவும் யமுனாவும் நல்ல தோழிகள் ஆகின்றனர். தனக்கு வரன் பார்த்திருப்பதான கங்கா, யமுனாவிடம் கூறவும், வருங்கால கணவரை பற்றி தெரிந்து கொண்டு வருவதாக யமுனா செல்கிறாள்.

மாட்டிக்கொண்ட யமுனா

மாட்டிக்கொண்ட யமுனா

கங்காவின் குடும்பத்தார் வரனின் வீட்டில் எல்லோரிடமும் பேசிக்கொண்டிருக்கின்றனர். அங்கு உள்ளவர்களுக்கு தெரியாமல் பார்த்து கொண்டிருந்த யமுனா கை தவறி ஜாடியை உடைத்துவிடுகிறாள். இதனால் மாட்டிக்கொள்கிறாள்.

பாட்டியின் சாபம்

பாட்டியின் சாபம்

கங்காவின் பாட்டி, யமுனாவின் பாட்டி தான் யமுனாவை வேவு பார்க்க சொல்லியும் பிரச்சினை பண்ண சொல்லியும் அனுப்பியிருப்பாள் என பழியை போட்டு மேலும் யமுனாவின் குடும்பத்தை பற்றி தரக்குறைவாக பேசுகிறாள்.

கங்காவின் அப்பா

கங்காவின் அப்பா

யமுனாவை அடிக்க முற்படும் போது அவள் தடுத்தாதால் தனது கையில் காயம் ஏற்பட்டது என நாடகம் ஆட, கங்காவின் அப்பா யமுனாவை அறைந்துவிட்டு மோசமாக திட்டிவிடுகிறார்.

வெடிக்கும் யமுனா குடும்பம்

வெடிக்கும் யமுனா குடும்பம்

அழுகையுடன் கிளம்பிய யமுனா, தனது வீட்டிற்கு வந்து தனது தாய் சம்யுத்தாவிடம் நடந்த விசயங்களை கூறுகிறாள். இதனால் ஆத்திரம் அடைந்த யமுனாவின் பாட்டி அரிவாள் எடுத்துக்கொண்டு வெட்டுவதற்கு கிளம்புகிறாள்.

அதிர்ச்சியில் யமுனா

அதிர்ச்சியில் யமுனா

இதை பார்த்த சம்யுத்தா தன்னை களங்கமாக பேசியதால் தானே இதற்கு ஒரு முடிவுகாட்டுகிறேன் என கிளம்பி செல்கிறாள். பின்னால் அவளை தொடர்ந்து சென்ற யமுனாவின் அம்மா சம்யுத்தா, கங்காவின் அப்பாவிடம் பேசுவதை கேட்டு அதிர்ச்சி அடைகிறாள்.

சகோதரிகளான தோழிகள்

சகோதரிகளான தோழிகள்

கங்காவின் அப்பாவும் தனது அப்பாவும் ஒருவரே என்பதை தெரிந்து கொண்ட யமுனா இதை கங்காவிடம் கூற அவளும் அதிர்கிறாள்.
இதனால் இரு தோழிகளும் இனி சகோதரிகளாக வலம் வருவார்கள். கங்கா யமுனா தொடர் திங்கள் முதல் சனி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

English summary
Raj TV Ganga Yamuna Serial started on 6th June 2016 and the serial replaced the time slot of Sindhu Bhairavi Serial.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil