»   »  கேமராக்களை தூக்கிப் போட்டு உடைச்சுடுவேன்: கொடுத்த காசுக்கு மேல கூவிய கஞ்சா கருப்பு

கேமராக்களை தூக்கிப் போட்டு உடைச்சுடுவேன்: கொடுத்த காசுக்கு மேல கூவிய கஞ்சா கருப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருக்கும் கேமராக்களை எல்லாம் தூக்கிப் போட்டு உடைத்துவிட்டு வெளியேறிடுவேன் என கஞ்சா கருப்பு ஓவராக கூவியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் எழுதி அதில் பங்கேற்றுள்ள 15 பேரிடம் கொடுத்து நடத்தப்படுகிறது என்று நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள்.

பிக் பாஸ் வீட்டில் நடப்பதை அனைவரும் கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

பரணி

பரணி

பரணியை பாத்ரூமை சுத்தம் செய்ய சொன்னதற்கு அவரோ நான் குளிக்கப் போகிறேன் கஞ்சா கருப்பை சுத்தம் செய்ய சொல்லுங்கள் என்றார். அங்கே ஆரம்பித்தது நாடகம்.

கஞ்சா கருப்பு

கஞ்சா கருப்பு

பரணி சொன்னதை கேட்ட கஞ்சா கருப்புக்கு கோபம் வந்து என்னைய வேலை செய்யச் சொல்ல அவன் யாரு என்று சண்டைக்கு பாய்ந்தார். அப்ப தான பாஸ் டிஆர்பி ஏறும்.

தாக்குதல்

தாக்குதல்

பரணியுடனான சண்டையை அடுத்து கஞ்சா கருப்பு அவரை அடிக்கப் பாய்ந்தார். மேலும் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் கேமராக்களை எல்லாம் உடைத்துவிட்டு வெளியேறிவிடுவேன் என்றார். கொடுத்த காசுக்கு மேலயே கூவுகிறாரே கருப்பு என மீம்ஸ்கள் பறக்கின்றன.

கேமராக்கள்

கேமராக்கள்

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அனைவரும் ஒரு இடத்தில் கூடியபோதும் கஞ்சா கருப்பு பரணியை திட்டினார். உனக்கு அப்படி என்ன தான் பிரச்சனை என்று கேட்டார். கஞ்சா கருப்பு, பரணி சண்டை எதிர்பார்த்த அளவுக்கு ஒர்க்அவுட் ஆகவில்லை பாஸ்.

English summary
Ganja Karuppu threatened to break all the cameras in the Big Boss house. He said so after fighting with fellow contestant Bharani.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil