Don't Miss!
- Sports
சாப்பாடு இருக்காது.. உபகரணங்கள் இல்லை.. தந்தை காட்டிய வழி இது.. கண் கலங்கிய மொயின் அலி
- Technology
நோக்கியா 2.4 ஸ்மார்ட்போனுக்கு கிடைத்தது புதிய அப்டேட்.!
- Automobiles
97,000 ரூபாவுக்கே 150கிமீ பயணிக்கும் இ-ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வந்தது ஒடிசி... ஓலாவுக்கு ஆப்பு ரெடி!
- Finance
ரத்தன் டாடா பெயரில் பேஸ்புக்கில் மோசடி..!
- Lifestyle
பெண்கள் அவர்களின் வயதிற்கேற்ப என்னென்ன உணவுகளை அவசியம் சாப்பிடணும் தெரியுமா?
- News
மகிந்த ராஜபக்சே மே 9-ல் விதைத்த வன்முறை விதையில் தாமே சிக்கினார்- நாடாளுமன்றத்தில் சரத் பொன்சேகா
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சர்வைவர் ஷோவுக்கு பிறகு வேறமாறி மாறிட்டேன்.. காயத்ரி ரெட்டி ஷேர் செய்த லேட்டஸ்ட் புகைப்படம்!
சென்னை: மூன்றாம் உலகத்து ராணியாகவே சர்வைவர் ஷோவில் ஜொலித்துக் கொண்டிருந்த காயத்ரி ரெட்டி கடைசியாக அந்த ஷோவில் இருந்து வெளியேறி விட்டார்.
நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கும் சர்வைவர் தமிழ் ஷோ ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது.
டாஸ்க் ரீதியில் பிக் பாஸை அந்த நிகழ்ச்சி தூக்கி சாப்பிட்டு வருகிறது.
பிரைவசி
கேட்கக்
கூடாது..
பிடிக்கலைன்னா
வெளியே
போ..
சர்வைவர்
போட்டியாளர்களை
மிரட்டுகிறாரா
அர்ஜுன்?

ஆப்பிரிக்கா காட்டுக்குள்
வெளிநாடுகளில் சர்வைவர் ஷோக்கள் பல பெயர்களில் அரங்கேறி வருகின்றன. நிர்வாணமாக ஆணும் பெண்ணும் ஒரு காட்டுக்குள் வசிக்கும் ஷோக்களும் உருவாக்கப்பட்டு டிஆர்பி ரேட்டிங்கை எகிற வைத்து வருகின்றன. இந்நிலையில், தமிழ் ரசிகர்களுக்காக வெளியான முதல் சர்வைவர் தமிழ் ஷோ ரசிகர்களின் கவனத்தை முதல் சீசனிலேயே வெகுவாக கவர்ந்துள்ளது.

வேறலெவல் அர்ஜுன்
தடவி கொடுப்பது என்கிற சீனே கிடையாது என்கிற ரேஞ்சுக்கு நடிகர் அர்ஜுன் சர்வைவர் தமிழ் ஷோவை செம பயங்கரமாக ஹோஸ்ட் செய்து வருகிறார். தப்பு பண்ணா அது யாரா இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் ரோஸ்ட் செய்து விடுகிறார் அர்ஜுன். அவரது ஹோஸ்டிங்கிற்காகவே பல ரசிகர்கள் சர்வைவர் தமிழ் ஷோவை பார்த்து வருகின்றனர்.

மூன்றாம் உலகத்து ராணி
காடர்கள் அணியின் கேப்டனாக இருந்த காயத்ரி ரெட்டியையே அந்த அணியினர் ஆரம்பத்திலேயே வெளியே அனுப்ப மூன்றாம் உலகத்தில் பல வாரங்களாக தொடர்ந்து போராடி எப்படியாவது மறுபடியும் காடர்களை போய் சந்திக்க வேண்டும் என காத்திருந்த அவர் கடைசியாக அம்ஜத் கானுடன் நடந்த போட்டியில் தோல்வியை தழுவி வெளியேறினார்.

சர்வைவருக்கு பின்
சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய காயத்ரி ரெட்டி தனது லேட்டஸ்ட் புகைப்படம் மற்றும் சர்வைவர் ஷோவில் இருந்த புகைப்படத்தையும் ஷேர் செய்துள்ளார். Before and After என அவர் போட்டுள்ள கேப்ஷனை பல ரசிகர்களும் பாராட்டி காயத்ரி ரெட்டி தான் ரியல் சர்வைவர் என புகழ்ந்து வருகின்றனர்.

ரியல் சர்வைவர் நீங்கதான்
நீங்க தான் ரியல் சர்வைவர். உங்களை நினைத்து ரொம்பவே பெருமையா இருக்கு.. நீங்க தான் மூன்றாம் உலகத்து ராணி. . நல்ல ஷோவை எங்களுக்கு அளித்ததற்கு நன்றி.. தொடர்ந்து பல வெற்றிகளை அடைய வாழ்த்துக்கள் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேக்கப் மேஜிக்
இந்த புகைப்படத்தை பார்த்தால் மேக்கப் போடுவதற்கு முன் மேக்கப் போட்ட பின் மாதிரி தான் இருக்கு காயத்ரி.. என சில நெட்டிசன்கள் காயத்ரி ரெட்டியின் Before and After சர்வைவர் தமிழ் ஷோ என அவர் ஷேர் செய்த புகைப்படத்தை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

லிப்ட் பேய்
தளபதி விஜய்யின் பிகில் படத்தில் கால்பந்தாட்ட வீரங்கனையாக நடித்த காயத்ரி ரெட்டி நடிகர் கவின் மற்றும் அம்ரிதா அய்யர் நடிப்பில் சமீபத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான லிப்ட் திரைப்படத்தில் காயத்ரி ரெட்டி தான் பேயாக நடித்திருப்பார். பிளாஷ்பேக் காட்சியில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய காயத்ரிக்கு மேலும், பல படங்கள் கிடைக்க வாழ்த்துக்கள்.

ஒரே ரெட்டியா இருக்கே
ரியாலிட்டி ஷோக்களான சர்வைவர் தமிழ் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் என்ன ஒரே ரெட்டி பெயரா இருக்கே என்றும் நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். காயத்ரி ரெட்டி, பாவனி ரெட்டி மற்றும் அக்ஷரா ரெட்டி என ரெட்டி லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறதே? என்றும் கிண்டல் செய்து வருகின்றனர்.