»   »  கங்கா, நந்தினி, நீலி, காக்க காக்க, பைரவி: டிவியில் தொடரும் அமானுஷ்ய தொடர்கள்

கங்கா, நந்தினி, நீலி, காக்க காக்க, பைரவி: டிவியில் தொடரும் அமானுஷ்ய தொடர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இச்சாதாரி பாம்புகள் நாகமணியை காக்க வந்து கல்யாணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டன. இப்போது புற்றுக்குள் இருக்கும் பாம்பு ஒன்று விஷத்தை கக்க தயாராகி வருகிறது.

சாப்பாடு என்னவோ ஒன்றுதான் அரிசியில் சமைத்ததுதான் ஆனால் அதை பரிமாறும் பாத்திரம்தான் வேறு வேறாக இருக்கிறது. டப்பிங் சீரியல் பாம்பை பழகிப் போனவர்களுக்கு இப்போது பாம்பு, பேய், பழிவாங்கும் சூனியாக்காரி என இப்போது 9 மணிக்கே வந்து பயமுறுத்துகிறது நந்தினி சீரியல்.

மாமியார், மருமகள், அண்ணி, நாத்தனார் குடும்ப சண்டைகளை விட பாம்பு, பேய்களை பார்க்க வைக்கலாம் என்று தயாரிப்பாளர்கள் யோசித்ததன் விளைவே இது போன்ற சீரியல்கள் அதிகரித்த காரணம். டிஆர்பிக்காக குடும்ப சீரியல்களை எடுப்பதை விட குட்டிச்சாத்தான்கள், பாம்புகள், பேய்களை வைத்து கல்லா கட்ட ஆரம்பித்து விட்டன சேட்டிலைட் சேனல்கள்.

மூட நம்பிக்கை தொடர்கள்

மூட நம்பிக்கை தொடர்கள்

தொலைக்காட்சிகளில் வரும் தொடர்கள், நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகள் மீதான புகார்களில் பெரும்பாலும் ஆபாசம் மற்றும் கலவரம் தொடர்பான புகார்கள் இதுவரை அதிகம் இருந்தன. ஆனால் தற்போது திகில், மந்திர தந்திரங்கள், பேய், பில்லி சூனியம், பாம்புக் கதைகள் என மூடநம்பிக்கையை வளர்க்கும் தொடர்கள் மீது தற்போது புகார்கள் குவியத் தொடங்கியுள்ளன.

நடவடிக்கையில்லை

நடவடிக்கையில்லை

இப்புகார்கள் மீது சம்பந்தப்பட்ட தொலைக்காட்சிகளுக்கு அறிவுறுத்தி பிசிசிசி அமைப்பு பொதுவான அறிவிக்கை மட்டுமே வெளியிட்டுள்ளது.பிசிசிசி சார்பில் இதுபோன்று இதுவரை பத்துக்கும் மேற்பட்ட அறிவிக்கைகள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், யார் மீதும் இதுவரை கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

அதிகரிக்கும் சீரியல்கள்

அதிகரிக்கும் சீரியல்கள்

இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த நாகினிக்கு கிடைத்த வரவேற்பையும், டிஆர்பி ரேட்டிங்கையும் பார்த்து பகல் 12 மணிக்கு மறு ஒளிபரப்பு செய்தது சன் டிவி. பைரவியை 5 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது. பிசிசிசி அறிக்கை விட்ட பின்னர்தான் இதுபோன்ற சீரியல்கள் அதிக அளவில் ஒளிபரப்பாகி வருகின்றன.

பல சீரியல்கள்

பல சீரியல்கள்

கங்கா, நாகினி, நந்தினி, பைரவி என வரிசை கட்டுகின்றன. இதேபோல நாகராணி, நீலி, மாயமோகினி, என பிற சேனல்களிலும் போட்டி போட்டுக்கொண்டு பேய், பாம்பு ஆவி என அமானுஷ்ய சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன.

நல்ல சக்தி கெட்ட சக்தி

நல்ல சக்தி கெட்ட சக்தி

நல்ல சக்திக்கும் கெட்ட சக்திக்கும் இடையேயான போட்டி, பேய்க்கும் பேய்க்கும் சண்டை அதை உலகமே டிவியில வேடிக்கை பார்க்குது, இதனால டிஆர்பியும் எகிறுது. இரவெல்லாம் பல சின்னஞ்சிறுசுகள் இதைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள். சாப கதை, பேய் கதை, பாம்பு கதை, நல்லவர்களை கொல்ல வரும் பேயை தடுக்க ஒரு நல்ல பேய், நல்ல பாம்பு என சீரியல்கள் இப்போது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக தொடங்கிவிட்டன.

சரியான போட்டி

சரியான போட்டி

டப்பிங் சீரியல்களுக்கு போட்டியாக அழகான கதாநாயகிகள், விலை உயர்ந்த ஆடைகள், பிரம்மாண்ட பங்களாக்கள் என ரிச் லுக்கில் தற்போது தமிழ் டிவி சீரியல்கள் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளன. சினிமா போல இந்தி டிவி சீரியல்களுக்கு போட்டியாக தமிழ் டிவி சீரியல் தயாரிப்பாளர்களும் தற்போது மெனக்கெட தொடங்கிவிட்டனர்.

English summary
Nowadays more TV serials based on Amanushyam are topping in various channels.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil