twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Kalyana Veedu Verial: கோபி சார் அந்த முக்காடு போட்ட பெண்ணை எங்களுக்கு காமிக்கக் கூடாதா?

    |

    சென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியலில் எப்போ பார்த்தாலும் ஏதாவது பிரச்சனை.அந்த பிரச்சனையை நோக்கி பரபரப்பா எல்லாரும் ஓடறது இப்படியே கதையும் ஒடிகிட்டு இருக்கு.

    கோபின்னு பேரை வச்சுக்கிட்டா இத்தனை பெண்கள் சுத்தி வருவங்களா? கோகுலத்தில் கண்ணன் மாதிரி கோபி கிருஷ்ணனை சுத்தி எப்போதும் பெண்கள் கூட்டம். மனுஷன் உண்மையிலேயே மத்தவங்களை பொறாமைப்பட வச்சுருவார் போல.

    ஏற்கனவே சூர்யா, ஸ்வேதான்னு ரெண்டு பொண்ணுங்க.. இப்போ புதுசா முக்காடு போட்டுக்கிட்டு, முகத்தை காமிக்காம ஒரு பொண்ணு, கோபியை இங்கே அங்கே நகர விட மாட்டேங்குது.

     முக்காடு போட்ட பெண்ணால்

    முக்காடு போட்ட பெண்ணால்

    மகாபலிபுரத்தில் கல்யாண வீடு குடும்பமே ராஜாவால் கடத்தி செல்லப்பட்டு, முகாமிட்டு இருந்த நேரத்தில்தான் கோபியும் அந்த முக்காடு போட்ட பெண்ணும் அங்கு இருந்திருக்கிறார்கள். சூர்யாவின் அப்பாவும், ஸ்வேதாவின் அண்ணனும் கோபியையும், அவனுடன் இருந்த பெண்ணையும் பார்த்துடறாங்க. இதுக்கு நடுவுலதான், செல்வம் கும்பலையும், ராஜாவையும் பிடித்த சம்பவம் அரங்கேறியது.

     எங்கே போயிருந்தே

    எங்கே போயிருந்தே

    எல்லாரும் கூடி நிற்கையில், இத்தனை நாள் எங்கே கோபி போயிருந்தேன்னு சூர்யா அப்பா கேட்கறாங்க. அது என்னோட பெர்சனல்.அதை எங்க குடும்பத்தை வச்சு அவங்க கிட்ட எப்போ, எப்படி சொல்லணுமோ அப்படி சொல்லிடுவேன். இதுக்கு மேல என்னை யாரும் எதுவும் கேட்காதீங்கன்னு சொல்லிடறான் கோபி.தங்கச்சி கல்யாணத்தை விட அது முக்கியமான காரியமான்னு மறுபடியும் கேட்க, கல்யாணத்துக்கு கண்டிப்பா வருவேன். அது என்னோட பெர்சனல்னு சொல்லிட்டேன்.மறுபடியும் இங்கிதம் தெரியாம கேட்கறீங்கன்னு கோபி கேட்கறான்.

     ஊருக்கு கிளம்பலாமா

    ஊருக்கு கிளம்பலாமா

    சரி, உன்னோட பெர்சனல்.. விட்டுடுவோம்.இப்போ நாம ஊருக்கு கிளம்பலாமான்னு கேட்கறார்.எனக்கு இங்க கொஞ்சம் வேலை இருக்கு.நீங்க போங்க, அந்த வேலையை முடிச்சுட்டு காலையில வரேன்னு சொல்லிட்டு கிளம்பறான் கோபி.பின் தொடர்ந்து சூர்யா,அவளோட அப்பா , ஸ்வேதா அண்ணன் மூணு பேரும் போறாங்க.ஒரு கடையில், இட்லி பொட்டலங்கள் ரெண்டு வாங்கிகிட்டு லாட்ஜுக்கு போறான்.அங்கு போனவுடன் கதவை சாத்திக்கறான். இவங்க சைடில் போயி பார்க்க, திரையின் மறைவில் நிழலில் இந்த பெண் இவன் மார்பு மீது சாஞ்சுக்குது. .

     கோபியிடம் மறுபடியும்

    கோபியிடம் மறுபடியும்

    கோபி மறுபடியும் ,எல்லாரும் தங்கி இருக்கும் காட்டேஜுக்கு வர, அங்கு இருந்தவர்கள் எங்கே தங்கி இருக்கேன்னு கேட்கறாங்க.ஃபிரண்டோட வீட்டிலேன்னு சொன்னதும் ,சூர்யாவின் அப்பா தாங்கள் பார்த்தது எல்லாத்தையும் சொல்லிடறார். கோபி கேட்கறான்... அம்மா உங்களுக்கு என் மேல நம்பிக்கை இருக்குல்லேன்னு. உன்னை நம்பாம வேற யாரை நம்பப் போறேன்னு அம்மா சொல்ல, நீங்க கிளம்பி கல்யாண வேலையை பாருங்க. கல்யாணம் முடிஞ்சதுமே எல்லாத்தையும் சொல்றேன்னு சொல்றான். எல்லாரும் நம்பி கிளம்பிடறாங்க.

     டபுள் கேம் அண்ணன்

    டபுள் கேம் அண்ணன்

    ஸ்வேதாவின் அண்ணனிடம் சூர்யா அழுதுகிட்டே போயி, அண்ணா அவரை இன்னும் நான் நம்பறேன். என்னை அப்பா வெளியூர் அழைச்சுக்கிட்டு போகப் போறேன்னு சொல்றார். எந்த ஊருக்கு போனாலும், என் நம்பர் அதேதான் .அவர் தரப்பு நியாயத்தை எனக்கு சொல்லணும்னு நினைச்சார்னா எப்ப வேணாலும் என் கூட பேச சொல்லுங்கன்னு அழுதுகிட்டே சொல்லிட்டு போறா.

    கோபி நண்பனிடம் வந்து சூரியா உங்க கிட்ட என்னமோ சொன்னாங்களே அது என்னன்னு கேட்கறான். அது ஒண்ணுமில்லை கோபி, என் வாழ்க்கையில கோபி சேப்டர் க்ளோஸ் ஆயிருச்சு. அவரை எனக்கு போன் செய்ய வேணாம்னு சொல்லுங்க.அப்படி போன் செய்தா நான் தூக்கு மாட்டிகிட்டு செத்துருவேன்னு சொன்னதா பொய் சொல்றான்.

     முக்காடு போட்ட பெண்

    முக்காடு போட்ட பெண்

    மறுபடியும் லாட்ஜுக்கு வர, அவள் முக்காடு போட்டு முகத்தை மறைச்சுக்கிட்டு பேசறா. என்னைத் தனியா விட்டுட்டு எங்கேயும் போயிறாதீங்க. இந்த ஊரில் நான் என்ன செய்வேன்னு கேட்கறா. என் தங்கச்சி கல்யாண வேலையை கூட வேற ஒருத்தனை வச்சு அங்க நடத்திக்கிட்டு இருக்கேன்.இத்தனை நாளும் கூடத்தான் இருந்தேன். இப்பவும் இருந்துட்டு, காலையில போறேன்னு சொல்லிட்டு, தரையிலப் படுத்துக்கறான்.

    கோபி சார் அந்த பொண்ணோட முகத்தை எங்களுக்கு காமிக்க கூடாதா?

    English summary
    Sun TV's kalyana veedu in the serial is something of a problem.supar fast all the way to the problem of the story.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X