»   »  கம்பீர குரலில் பேசும் 'பிக் பாஸ்' யார் தெரியுமா?

கம்பீர குரலில் பேசும் 'பிக் பாஸ்' யார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிக் பாஸாக வரும் குரலுக்கு சொந்தக்காரர் யார் என தெரிய வந்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி அறிவிப்பு வெளியிட்ட உடன் அதை தொகுத்து வழங்கும் கமல் ஹாஸன் தான் பிக் பாஸ் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் பிக் பாஸ் வேறு ஒருவர்.

பிக் பாஸை இதுவரை யாரும் பார்த்தது இல்லை. அவரின் குரலை மட்டுமே கேட்க முடிகிறது.

பிக் பாஸ்

பிக் பாஸ்

பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் அம்புலி கோகுல்நாத் என்று கூறப்படுகிறது. அம்புலி, ஜம்புலிங்கம் 3டி, மகளிர் மட்டும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் கோகுல்நாத்.

டிவி நிகழ்ச்சிகள்

டிவி நிகழ்ச்சிகள்

கிராபிக் டிசைனரான கோகுல்நாத் டிவி நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அசத்தி புகழ் பெற்றுள்ளார். அதன் பிறகு அவர் பெரிய திரை பக்கம் சென்றுவிட்டார்.

பிரபலங்கள்

பிரபலங்கள்

திரையுலகில் அவ்வளவாக மார்க்கெட் இல்லா ஆட்களாக பார்த்து தேர்வு செய்து பிக் பாஸ் வீட்டில் வைத்துள்ளனர். இந்நிலையில் பிக் பாஸும் வளர்ந்து வரும் நடிகர் என்பது தெரிய வந்துள்ளது.

திட்டு

திட்டு

பிக் பாஸ் நிகழ்ச்சியை நிறுத்துமாறு நெட்டிசன்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அடேய் பிக் பாஸு என்று நெட்டிசன்கள் திட்டுவது கோகுல்நாத்தை தானா?

English summary
Buzz is that actor Ambuli Gokulnath is the one who is giving voice over for Big Boss in the TV reality show.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil