»   »  பிக் பாஸ் வீட்டில் இருந்து கிளம்பும் முன்பு சொன்னதை செய்துகாட்டிய ஹரிஷ் கல்யாண்

பிக் பாஸ் வீட்டில் இருந்து கிளம்பும் முன்பு சொன்னதை செய்துகாட்டிய ஹரிஷ் கல்யாண்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது சொன்னதை செய்து காட்டிவிட்டார் ஹரிஷ் கல்யாண்.

பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களுடன் அகம் டிவி மூலம் பேசி வந்தார் கமல் ஹாஸன். திடீர் என்று ஒரு நாள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற கமல் ஹரிஷ் கல்யாணின் கன்னத்தை பிடித்து இழுத்தார்.

Harish Kalyan does what he said

அப்போது ஹரிஷ் டென்ஷனில் இருந்ததால் அதை அவரால் ரசிக்க முடியவில்லை. இதை கூறி வருத்தப்பட்ட ஹரிஷ் பிக் பாஸ் கிராண்ட் பினாலேவின் போது கமலை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க ஆசைப்படுவதாக அவரிடமே கூறினார்.

இதை கேட்ட கமலோ அனைத்து ஆம்பளைங்களும் இதையே ஆசைப்படாதீர்கள் என்றார். இந்நிலையில் நேற்று இரவு நடந்த கிராண்ட் பினாலேவின்போது ஹரிஷ் கமல் கன்னத்தில் முத்தமிட்டார்.

சொன்னபடி செய்து தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்டார் ஹரிஷ்.

English summary
Actor Harish Kalyan kissed Kamal Haasan before leaving Bigg Boss house.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil