For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  விரைவில் முடிய போகுதா பாண்டியன் ஸ்டோர்ஸ்...பிரபல நடிகை கொடுத்த சூப்பர் அப்டேட்

  |

  சென்னை : விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான, அதிகமான ரசிகர்களை கவர்ந்த சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டுக் குடும்ப உறவுகளை பற்றி சொல்லும் கதை. தங்களின் யதார்த்தமான நடிப்பால் இந்த சீரியலில் வரும் கேரக்டர்களை தங்கள் வீட்டில் ஒருவராகவே பார்க்க துவங்கி விட்டனர் ரசிகர்கள்.

  2018 ம் ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கப்பட்ட இந்த சீரியல், தற்போது 550 எபிசோட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கிட்டதட்ட ஆனந்தம் படத்தின் கதை தான் என்றாலும், அதில் பல சுவாரஸ்யங்களை கலந்து சொல்லி வருகின்றனர்.

  நண்பர்கள் தினத்துக்கு நச்சுன்னு பாட்டுப் போட்ட ராஜமெளலி.. மரகதமணி இசையில் அசத்தும் அனிருத்!நண்பர்கள் தினத்துக்கு நச்சுன்னு பாட்டுப் போட்ட ராஜமெளலி.. மரகதமணி இசையில் அசத்தும் அனிருத்!

  மூர்த்தி, ஜீவா, கதிர், கண்ணன் ஆகிய 4 அண்ணன்-தம்பிகள் பாசத்தை மிக அழகாக காட்டி உள்ளனர். திருமணமான புதிதில், தம்பிகளை வளர்க்க வேண்டிய பொறுப்பு தனக்கு உள்ளதால் தங்களுக்கு குழந்தை வேண்டாம் என தனத்திடம் சொல்கிறார் மூர்த்தி. இதை தனமும் ஏற்றுக் கொண்டு, 3 தம்பிகளையும் வளர்த்து ஆளாக்குகிறார்கள்.

  கலைகட்டிய வளைகாப்பு திருவிழா

  கலைகட்டிய வளைகாப்பு திருவிழா

  இந்நிலையில் 15 ஆண்டுகள் கழித்து கர்ப்பமாகிறார் தனம். அவரின் வளைகாப்பு வைபவம்,ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் கோலாகலமாக நடக்கிறது. இந்த வளைகாப்பு விழாவிற்கு விஜய் டிவி பிரபலங்கள் பலர் வந்து கலந்து கொள்வதாக காட்டி, ஒரு வார எபிசோட்டையும் என்டர்டைன்மென்ட் நிகழ்ச்சியாக மாற்றி விட்டனர்.

  சோஷியல் மீடியாவிலும் பிரபலம்

  சோஷியல் மீடியாவிலும் பிரபலம்

  இந்த சீரியலில் வரும் நடிகர்கள் நடிகைகள் அனைவரும் சின்னத்திரை ரசிகர்களுக்கு நன்கு பரிட்சியம் ஆனவர்கள் என்பதால், சோஷியல் மீடியாக்களிலும் இவர் பிரபலமாக உள்ளனர். இதில் சுஜிதா, ஹேமா, காவ்யா அறிவுமணி போன்றோர் சோஷியல் மீடியாக்களில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தவறாமல் பதிலளித்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

  பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிய போகுதா

  பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிய போகுதா

  அப்படி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் ஒருவர், மீனா கேரக்டரில் நடிக்கும் ஹேமாவிடம், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விரைவில் முடிய போகிறதாமே...அது உண்மையா என கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த ஹேமா, பாண்டியன் ஸ்டோர்ஸ் இது போல் எந்த தகவலையும் சொல்லவில்லை. அதனால் இந்த தகவல் தவறானது என கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

  லேட்டஸ்ட் ப்ரோமோ

  லேட்டஸ்ட் ப்ரோமோ

  இதற்கிடையில் லேட்டஸ்ட் ப்ரோமோவில், கண்ணன் வீட்டில் இருந்து பணத்தை திருடியதை குடும்பத்தில் அனைவரிடமும் போட்டு உடைக்கிறார் முல்லை. இதனால் கண்ணனை அடித்து, வீட்டை விட்டு துரத்துகிறார் மூர்த்தி. கண்ணன் வீட்டை விட்டு வெளியேற்றப்படும் அதே சமயத்தில், பிரசாந்த் உடனான திருமணம் பிடிக்காத ஐஸ்வர்யாவும் வீட்டை விட்டு வெளியேறுகிறார். வழியில் சந்திக்கும் இருவரும் கை கோர்ப்பது போல் காட்டுகிறார்கள்.

  அடுத்து என்ன நடக்கும்

  அடுத்து என்ன நடக்கும்

  இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸில் அடுத்து என்ன நடக்கும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். கண்ணனும் ஐஸ்வர்யாவும் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்வார்களா? இதனால் இரு குடும்பத்திற்கு இடையே பிரச்சனை வந்து தனத்தை பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இருந்து கட்டாயப்படுத்தி பிரித்துச் செல்வார்களா? திருமணம் நின்று போன கோபத்தில் பிரசாந்த் வில்லனாக மாறி, கண்ணனை பழி வாங்குவாரா? என கேள்விகள் நீண்டு கொண்டே செல்கிறது.

  கண்ணன் - ஐஸ்வர்யா சேருவார்களா

  கண்ணன் - ஐஸ்வர்யா சேருவார்களா

  இல்லை கண்ணன் - ஐஸ்வர்யா பிரிக்கப்படுவார்களா ? ஐஸ்வர்யாவிற்கு பிரசாந்த்துடன் கட்டாய திருமணம் நடக்குமா என்று மற்றொரு விதமாகவும் கேள்வி எழுகிறது. இப்படி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.

  English summary
  One of the fans asked Hema, who plays the character of Meena, has asked if the Pandian Stores serial is going to end soon . Hema replied that Pandian Stores did not say anything like this. So she has put an end to the rumors claiming that this information is false.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X