புதுவீட்டில் குடியேறும் கதிர் - முல்லை...அடுத்து கதிர் எடுக்க போகும் முடிவு...அந்த சீன் இதுக்கு தான்

சென்னை : விஜய் டிவி சீரியல்கள் அனைத்துமே தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றன. இதில் பாக்யலட்சுமிக்கு பிறகு விறுவிறுப்பில் பஞ்சமில்லாமல் நகர்வது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான்.

தனத்தின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக உறவினர்கள் ஒன்றாக குடி இருக்கையில் மும்லையின் மருத்துவ செலவிற்காக வாங்கிய பணத்தை கேட்டு கடன்காரர் வர, அவசரத்திற்காக மீனாவிடம் இருந்த பணத்தை வாங்கி கொடுக்கிறார் ஜீவா. இதனால் ஏற்பாடும் பிரச்சனை, வாக்குவாதம் முற்ற, வீடே கலவரமாகிறது.

இதன் முடிவாக கதிர், முல்லையை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார். இந்த அதிர்ச்சியில் முத்திக்கு ஹார்ட்அடாக் ஏற்படுகிறது. ஆப்பரேஷனுக்கு பிறகு வீடு திரும்புகிறார். தனது நகைகளை அடகு வைத்து ஜனார்த்தனனிடம் பெற்ற கடனை அடைக்கிறார் தனம்.

புதுவீட்டில் குடியேறும் கதிர் -முல்லை

புதுவீட்டில் குடியேறும் கதிர் -முல்லை

அதே சமயம் முல்லையும் தனது நகையை கொடுக்க, அதை வைத்து புதிய வீடு பார்த்து குடியேறுகிறார்கள் கதிரும், முல்லையும். புது வீட்டில் சாமி படங்களுக்கு பதில் அண்ணன் - அண்ணி போட்டோவை வைக்கிறார் கதிர். அவர்களுக்கு துணி வாங்கிக் கொண்டு வரும் தனம், போட்டோவை பார்த்து கண்கலங்கி செல்கிறார். இதுவரை தான் எபிசோட்கள் காட்டப்பட்டுள்ளது.

கதிருக்கு உதவும் முல்லை

கதிருக்கு உதவும் முல்லை

கதிர் புதிதாக வேலையில் சேர்ந்திருப்பதாக முல்லையிடம் சொல்கிறார். ஆனால் என்ன வேலை என்று இதுவரை சொல்லவில்லை. கதிர், ஓட்டல் ஒன்றில் தான் வேலைக்கு சேர போகிறார். இது பற்றி மிக விரைவிலேயே முல்லைக்கு தெரிய வர உள்ளது. இதனால் மன வேதனையில் இருக்கும் முல்லை, கதிருக்கு உதவி செய்வதற்காக அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு ஜாக்கெட் தைத்து கொடுத்து, வருமானம் பார்க்கிறார். இதில் நல்ல வரவேற்று இருப்பதால் கதிர்- முல்லை இருவருமே தையல் தொழில் செய்ய முடிவு செய்கிறார்கள்.

கதிர்-முல்லையின் அடுத்த அதிரடி

கதிர்-முல்லையின் அடுத்த அதிரடி

தையல் தொழில் துவங்கி, அதில் சம்பாதித்து, முல்லையின் ட்ரீட்மென்டிற்காக வாங்கிய கடனை அடைக்கிறார் கதிர். இது தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்தடுத்த சீரியல்களில் நடக்க போகிறது. இதுவைர சோகமாக இருந்த கதிர் -முல்லை இனி சாதித்து, ஜெயிக்க போகும் காட்சிகள் தான் இடம்பெற போகிறது. இதனால் இவற்றை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

இதுக்கு தான் அந்த சீனா

இதுக்கு தான் அந்த சீனா

பாண்டியன் ஸ்டோர்ஸ் புதிய கடை திறக்கும் போது, வீட்டில் உள்ள பெண்கள் ஜாக்கெட் தைக்க என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருக்கையில், முல்லை தனக்கு தையல் தெரியும் என சொல்லி சுப்பராக ஜாக்கெட் தைத்து கொடுப்பார். அப்படியே கதிருக்கும் ஒரு சட்டை கொடுப்பார். பல வருடங்களுக்கு முன் பழகியது, தற்போது அதை பயன்படுத்துவதாக சொல்லுவார்கள். அந்த தையல் தொழில் தான் பின்னாடி அவர்களை கைகொடுத்து, முன்னேற்ற போகிறது என்பதை மறைமுகமாக சொல்வதற்கு தான் அப்படி ஒரு சீன் முன்பே வைத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X