»   »  டிவி ரசிகர்களை விடாது மிரட்டும் பேய் சீரியல்கள்... இனியாவது நிறுத்துவார்களா?

டிவி ரசிகர்களை விடாது மிரட்டும் பேய் சீரியல்கள்... இனியாவது நிறுத்துவார்களா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவி, புதுயுகம், ஜீ தமிழ் என பல தமிழக தொலைக்காட்சிகளிலும், பிரபல இந்தி தொலைக்காட்சிகளிலும் ஆவி, பேய், பூதம் என மூட நம்பிக்கைகளை அதிகரிக்கும் டிவி சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றனர். இரவு நேரங்களில் இந்த சீரியல்களை பார்த்து விட்டு சின்னஞ்சிறுவர்களுக்கு சற்றே அச்சம்தான் ஏற்படுகிறது.

அழுகை, ஒப்பாரி, குடும்பத்தை கெடுக்க செய்யும் வில்லத்தனம் என ப்ரைம் டைம் நேரங்களில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருவதோடு பேய், ஆவி சீரியல்களும் ஒளிபரப்பாகி அச்சுறுத்துகிறது. இதுபோன்ற மூட நம்பிக்கையை ஏற்படுத்தும் டிவி சீரியல்களை நிறுத்திக்கொள்ளுமாறு டிவி சேனல்களுக்கு ஒளிபரப்பு புகார்களுக்கான கவுன்சில் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இனியாவது இந்த டிவி சீரியல்களை நிறுத்திக்கொள்வார்களா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

விடாமல் தொடரும் பைரவி

விடாமல் தொடரும் பைரவி

சன் டிவியில் கடந்த சில ஆண்டுகளாவே ஞாயிறு இரவு நேரங்களில் பைரவி தொடர் ஒளிபரப்பாகிறது. இறந்து போனவர் ஆவியாக வந்து தனது ஆசையை, பழிவாங்கும் எண்ணத்தை கதாநாயகியிடம் கூறி நிறைவேற்றிக்கொள்வதுதான் கதை. சில வருடங்களாகவே இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

அச்சுறுத்தும் ஆதிரா

அச்சுறுத்தும் ஆதிரா

இரவு பத்துமணியாகிவிட்டாலே ஆதிரா பேய் வந்து அச்சுறுத்துகிறது. பூனை சத்தம்... வேகமாய் வீசும் காற்று... வெள்ளை புடவை கட்டிய பெண்(பேய்) என ஆரம்பம் என்னவோ வழக்கமான பேய் கதையாகத்தான் தொடங்கியது. இப்போது அமானுஷ்ய தொடராக போய்க்கொண்டிருக்கிறது.

பூமிகா பேய்

பூமிகா பேய்

வம்சம் தொடரில் சில எபிசோடுகள் பூமிகாவை கொலை செய்து விட்டு பேயாக உலாவ விட்டார்கள். அது அச்சத்தை தருவதற்குப் பதில் வாசகர்களுக்கு சிரிப்பையே வரவழைத்தது. நல்லவேளை பூமிகாவை பேயாக உலாவ விட்டது சும்மா டூப்புக்கு என்று சொல்லி விட்டார்கள்.

பழிவாங்க வந்த பேய்

பழிவாங்க வந்த பேய்

பாசமலர் என்று பெயர் வைத்து விட்டு பேய்கதையை ஒளிபரப்பினார்கள். அதுவும் வில்லி புவனேஸ்வரி ஒரு விபத்தில் இறந்துவிட அவர் பேயாக வந்து மல்லிகா என்ற பெண்ணின் உடம்புக்குள் புகுந்து கொஞ்சகாலம் அட்டகாசம் செய்தார்.

புதுயுகத்தில் திகில் சீரியல்

புதுயுகத்தில் திகில் சீரியல்

மர்ம சக்திகள் ஆத்மா, ஆவி, பேய், பிசாசு போன்ற கண்ணுக்குத் தெரியாத சக்திகள் மனித வாழ்க்கையில் குறுக்கிடுவது மட்டுமின்றி, சில மரணங்களுக்கும் பேரழிவுக்கும் காரணமாக இருக்கின்றன. இதுபோன்ற திகில் சம்பவங்களை மையப்படுத்தி, 'திக்... திக்... திகில்' என்ற அமானுஷ்ய தொடர் புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

ஜீ ஹாரர் ஷோ

ஜீ ஹாரர் ஷோ

ஜீ டிவியில் ஹாரர் ஷோ கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பப்படுகிறது. இது மக்களை அதிகமாகவே அச்சுறுத்தி வருகிறது. தஷ்தக் என்ற ஹாரர் நிகழ்ச்சி அதிகமாகவே அச்சுறுத்துகிறது.

ஃபியர் பைல்ஸ்

ஃபியர் பைல்ஸ்

ஜீ டிவியில் ஃபியர் பைல்ஸ் நிகழ்ச்சியில் ஆவிகளின் கோர தாண்டவமும், அதன் பயங்கர பிடியில் சிக்கி உயிருக்கு போராடியவர்களின் உண்மை சம்பவங்களும் வாரவாரம் திகில் காட்சிகளுடன் ஒளிபரப்பாகின்றன. இது ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானது. ஆவிகள், பேய், பூதம் பற்றிய நம்பிக்கைகள் பலருக்கு இருப்பதில்லை. இருப்பினும் இதய பலவீனம் உள்ளவர்கள் மற்றும் குழந்தைகள் இத்தொடரை பார்ப்பதை தவிர்ப்பது நல்லது என மனநல மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

7ம் உயிர்

7ம் உயிர்

வேந்தர் டிவியில் இப்போது இளம் பெண்களின் உயிரை பறிக்க வந்துள்ளது ஓரு அமானுஷ்ய சக்தி. 7ம் உயிர் என்ற பெயரில் இப்போது ஒளிபரப்பாகி வருகிறது. ஆவி, பேய், பூதம் என்று அச்சுறுத்துகிறது இந்த சீரியல்

எல்லாத்தையும் நிறுத்துங்க

எல்லாத்தையும் நிறுத்துங்க

இப்படி பேய் சீரியர்களையும் மூட நம்பிக்கையை அதிகரிக்கும் நிகழ்ச்சிகள் டிவி சீரியல்களை நிறுத்திக்கொள்ளும்படி பிசிசிசி உத்தரவிட்டுள்ளதோடு சன்டிவி, ஜீ டிவி, மா தொலைக்காட்சிகளுக்கு சுற்றறிக்கையும் அனுப்பியுள்ளது. ஆனால் நிறுத்துவார்களா பார்க்கலாம்.

English summary
Indian television never fails to amaze. Here is the list of horror TV serials.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil