»   »  கல்யாணத்தை நிறுத்துவது எப்படி? கற்றுக்கொடுக்கும் சீரியல்கள்

கல்யாணத்தை நிறுத்துவது எப்படி? கற்றுக்கொடுக்கும் சீரியல்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : டிவி சீரியல்களில் சில காட்சிகளை பார்ப்பதற்குக் கூட இப்போது பயமாக இருக்கிறது. கல்யாணத்தை நிறுத்துவது எப்படி? கர்ப்பிணி பெண்களின் கர்ப்பத்தை கலைப்பது எப்படி என்றுதான் பெரும்பாலான சீரியல்கள் கற்றுக்கொடுக்கின்றன.

காலை 11 மணியில் இருந்து இரவு 10 மணி வரைக்கும் சீரியல் வில்லிகளின் ஆதிக்கமாகவே இருக்கிறது. ஹீரோயின்களுக்கு அழுகைதான் வசனமாக இருக்கிறது.

சன்டிவியில் பிற்பகலில் மதிய உணவு சாப்பிடும் நேரத்தில் ஒளிபரப்பாகும் இரண்டு சீரியல்கள் சந்திரலேகா, கல்யாணப் பரிசு. இந்த இரண்டு சீரியலிலுமே கல்யாணத்தை நிறுத்துவது எப்படி என்றுதான் கற்றுக்கொடுக்கின்றன.

சந்திரா மூலம் தன் மகள் கடத்தப்பட்டதை அறிந்து தன் மாமனார் அன்பரசை தேடி கோயம்பத்தூர் செல்லும் போது கூட போகும் சந்திராவிடம் சித்தார்த் கதை துவங்குகிறது. அன்பரசுவின் முத்த மகள் மங்கையர்க்கரசி, இளையவள் லாவண்யா,

மங்கையர்கரசியை சித்தார்த் திருமணம் செய்து கொள்ள, அபி பிறக்கிறாள். அபி பிறந்த சில வருடங்களுக்கு பிறகு சித்தார்த்தை கொல்ல வரும் குண்டுக்கு மங்கை பலியாகிறாள்.

சந்திராவின் குடும்பம்

சந்திராவின் குடும்பம்

அபியை லாவண்யாதான் அடைத்து வைத்திருக்கிறாள். சித்தார்த் உடன் கோவை சென்றுள்ள சந்திரா சாட்சி சொல்ல வருவதாக கூற, இதை தடுப்பதற்காக சந்திராவின் அப்பாவின் மீது கார் ஏற்றுகிறான் விக்னேஷ்.

சந்திராவின் திருமணம்

சந்திராவின் திருமணம்

சந்திராவின் அப்பா கோமா நிலைக்குப் போக சந்திராவின் திருமணம் நடக்காதா என்று சந்தோசப்படுகிறாள் சந்திராவின் அத்தை புவனேஸ்வரி.

சித்தார்த்தை சந்திரா திருமணம் செய்து விடாதவாறு நிறுத்த வேண்டும் என்று லாவண்யாவும் திட்டமிடுகிறாள்.

அப்பா பிழைப்பாரா?

அப்பா பிழைப்பாரா?

அப்பாவின் நிலை தெரிந்து வந்து அழும் சந்திராவிற்கு மிரட்டல் போன் வருகிறது. கடைசியில் சந்திராவின் அப்பா பிழைத்தாரா? அபி வழக்கு என்னவாகும் என்ற சஸ்பென்ஸ் உடன் பயணிக்கிறது சந்திரலேகா.

வில்லி புவனேஸ்வரி

வில்லி புவனேஸ்வரி

சீரியல் வில்லிகள் எல்லோரும் இப்போது கவர்ச்சி வில்லிகளாகவே இருக்கின்றனர். அதுவும் சந்திரலேகா வில்லி புவனேஸ்வரியின் காய் நகர்த்தல்கள், வில்லத்தனங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்டவை. இதைப் பார்த்தால் பலருக்கும் சாப்பாடு கூட இறங்காது.

கல்யாண பரிசு

கல்யாண பரிசு

கல்யாண பரிசு பேருதான் நல்ல பேர்... ஆனால் சீன் பை சீன் வில்லத்தனம்தான். இருதார கதை... குழந்தை கடத்தல், என போன கதை இப்போது கணவரின் தங்கையின் கல்யாணத்தை எப்படி நிறுத்துவது என்று கற்றுத்தருகிறது.

முத்தையாவை தேடி

முத்தையாவை தேடி

முத்தையாவை தேடி கிராமத்திற்கு வரும் தம்பதியை அடைத்து வைக்கிறது ஒரு கும்பல். அவர்களை தேடி வீராவும், அவரது மாமனாரும் வர, சிக்கல் ஏற்படுகிறது. இன்னும் எத்தனை நாட்களுக்கு இவர்கள் மயக்க நிலையில் இருப்பார்களோ?

நகைப் பெட்டி

நகைப் பெட்டி

நாத்தனார் மல்லிகாவின் திருமணத்தை நிறுத்த முத்தையாவின் மனைவி, வீட்டில் இருந்த நகைப் பெட்டியை எடுத்துக்கொண்டு போய் கிணற்றில் போடுகிறாள். எப்பாடு பட்டாவது திருமணத்தை நிறுத்தியே தீருவேன் என்று சபதம் போடுகிறாள் அண்ணி. திருமணம் நடக்குமா? திங்கட்கிழமை தெரியவரும்.

ரிந்தியாவின் வில்லத்தனம்

ரிந்தியாவின் வில்லத்தனம்

கல்யாணப் பரிசு சீரியலில் சுப்புலட்சுமியின் வில்லத்தனத்தை எப்படி கொண்டு போவது என்று தெரியாமல் யோசித்த இயக்குநர் திடீரென்று முத்தையாவை களமிறக்கினார். இப்போது முத்தையாவின் மனைவி ரிந்தியாவை களமிறக்கியிருக்கிறார். இன்னும் எத்தனை வில்லிகள் வருவார்களோ? எத்தனை தடவை கல்யாணத்தை நிறுத்துவாங்களோ தெரியலையே.

Read more about: television, sun tv, marriage, tv serial
English summary
Sun TV serials telecast Kalayana parisu and Chandraleka Villies Bhuvaneswari and Ridhiya.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil