»   »  அழுகாச்சி ஒரு பக்கம்... காமெடி என்ற பெயரில் மறுபக்கம்.. ''கடுப்பேத்துறாங்க மை லார்ட்''

அழுகாச்சி ஒரு பக்கம்... காமெடி என்ற பெயரில் மறுபக்கம்.. ''கடுப்பேத்துறாங்க மை லார்ட்''

Posted By:
Subscribe to Oneindia Tamil

அழுகாச்சி காவியங்களையும், பேய், பிசாசு, அமானுஷ்ய தொடர்களையும் டிவிகளில் பார்த்து மந்திரித்து விட்டது போல் காணப்படும் மங்கையர் குல திலகங்களை சிரிக்க வைக்க சில சீரியர்களும், காமெடி நிகழ்ச்சிகளும் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகிறது.

தூர்தர்சன் மட்டுமே கோலோச்சிய காலத்தில் எஸ்.வி.சேகர், கிரேஸி மோகன் நாடகங்கள் மக்களை சிரிக்க வைத்து சிந்திக்கவும் தூண்டியது. இப்போது பொதுமக்கள் பங்கேற்கும் காமெடி நிகழ்ச்சிகள், பிரபல நட்சத்திரங்கள் நடிக்கும் காமெடி சீரியல்கள் ஜீ தமிழ் டிவி, விஜய் டிவி, சன் டிவி, கலைஞர் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகிறது.

சில நிகழ்ச்சிகள் சிரிப்பை வரவழைத்தாலும் சில காமெடி சீரியல்களில் சிரிப்பு மூட்டுகிறேன் என்ற பெயரில் வெறுப்பை ஏற்படுத்தி கடுப்பேற்றுகின்றனர்.

கலக்கப்போவது யாரு?

கலக்கப்போவது யாரு?

விஜய் டிவியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான நிகழ்ச்சி கலக்கப்போவது யாரு? இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மதுரை முத்து, ஈரோடு மகேஷ், சிவகார்த்திக்கேயன், ரோபோ சங்கர் என பலரும் பிரபலமடைந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியைப் பார்த்து பல சேனல்களில் இதேபோல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானது. தற்போது மீண்டும் விஜய் டிவியில் புத்தம் புது பொலிவுடன் கலக்கப்போவது யாரு ஒளிபரப்பாக உள்ளது. சிரிக்க தயாராகுங்கள்

வருத்தப்படாத வாலிபர் சங்கம்

வருத்தப்படாத வாலிபர் சங்கம்

இது படத்தோட பேரு இல்லைங்க... விஜய் டிவியில ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியோட பேரு. ஏன் இந்த பேரு வச்சாங்கன்னு தெரியாது. ஆனா காமெடிக்கு நாங்க கேரண்டி அப்படின்னு நாலு ஜட்ஜ் சொல்றாங்க. கோவைசரளா, மனோபாலா, ஊர்வசி, ரமேஷ் கண்ணா ஆகியா நான்கு பேரும் பங்கேற்பாளர்களுடன் இணைந்து பார்வையாளர்களை சிரிக்க வைக்கின்றனர்.

கோவை சரளா

கோவை சரளா

750க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள கோவை சரளா பல்வேறு டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். காமெடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். ஜீ தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் மனோபாலா உடன் சேர்ந்து அடிக்கும் லூட்டி செம காமெடி மச்சி என்கின்றனர்.

மனோபாலா

மனோபாலா

திரைப்பட இயக்குநரான மனோபாலா தற்போது பிரபல நடிகராக வலம் வருகிறார். ஆதித்யா சேனலின் நிகழ்ச்சி தொகுப்பாளர், தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பதோடு திரைப்படமும் தயாரிக்கிறார். தற்போது ஜீ தமிழ் சேனலில் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் நடுவராக வந்து அனைவரையும் சிரிக்க வைக்கிறார்.

ரமேஷ் கண்ணா - ஊர்வசி

ரமேஷ் கண்ணா - ஊர்வசி

திரைப்பட இயக்குநர், நகைச்சுவை நடிகர் ரமேஷ் கண்ணா, நடிகை ஊர்வசி ஆகியோரும் நடுவர்களாக இருப்பதோடு தங்களின் திரைப்படங்களில் வந்த நகைச்சுவை நிகழ்வுகளை பங்கேற்பாளர்களிடம் பகிர்ந்து கொள்கின்றனர். சனி ஞாயிறுகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம்.

சின்னப்பாப்பா பெரியபாப்பா

சின்னப்பாப்பா பெரியபாப்பா

சன்டிவியில் சனிக்கிழமை இரவில் நளினி, நிரோஷா, மதுமிதா சித்ராவின் ஆதிக்கம்தான். காமெடி என்ற பெயரில் சில நேரங்களில் கடுப்பேற்றத்தான் செய்கின்றனர். அதுவும் பள்ளி யூனிபார்ம் போட்டு நளினி கொஞ்சம் பயமுறுத்தத்தான் செய்கிறார். மதுமிதாவின் நடிப்பும் டயலாக்கும் கொஞ்சம் ஓவர் ஆக்டிங்தான். சித்ராவும் நிரோஷாவும் பார்வையாளர்களை சிரிக்க வைக்க முயற்சி செய்கின்றனர். ஆனாலும் காமெடிக்கு பதில் கடுப்புதான் வருகிறது. உ

மடிப்பாக்கம் மாதவன்

மடிப்பாக்கம் மாதவன்

காலைஞர் டிவியில் "மடிப்பாக்கம் மாதவன்' என்ற தொடர், மாமியார் - மருமகள் பிரச்னைகளைப் பிரதானப்படுத்தாமல் நாட்டு நடப்புகளையும், சமூகக் கருத்துகளையும் இணைத்து நகைச்சுவையாக சொல்கிறார்கள். இதனால் இந்த தொடரில் மாமியாராக நளினியும், மருமகளாக மதுமிதாவும் நடித்துள்ளனர். சின்னப்பாப்பா பெரிய பாப்பா உடன் ஒப்பிடும் போது மடிப்பாக்கம் மாதவன் கொஞ்சம் பரவாயில்லை. இத்தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

English summary
Here is your master list for all the comedy shows on television that will tickle your funny bones!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil