வில்லியாக ஆசைப்படும் இன்னொரு டிவி நடிகை 'வாணி ராணி' பூஜா
சென்னை: ஹீரோயினாக நடிப்பதை விட வில்லியாக நடிக்கத்தான் இன்றைக்கு பல சீரியல் நடிகைகள் ஆசைப்படுகின்றனர். காரணம் ஹீரோயினை விட வில்லிதான் அதிக அளவில் ரசிகர்களை கவர்கின்றனர்.
எத்தனையோ பேர் வில்லிக்காகவே சீரியல் பார்ப்பதாக கூறி வரும் நிலையில் சன் டி.வி 'வாணி ராணி' சீரியலில், 'பூஜா' கேரக்டரில் அமைதியான, அன்பான மருமகளாக அசத்திக்கொண்டிருக்கும் நவ்யாவும் வில்லியாக நடிக்க ஆசை என்கிறார்.
தமிழ், தெலுங்கு கன்னடம் என மூன்று மொழிகளிலும் நடித்து அசத்தி வரும் பூஜாவின் சொந்த பெயர் நவ்யா. சொந்த ஊர் பெங்களூரு. மீடியா மீதான ஆசையால் பி.பி.எம் படித்துக்கொண்டே கன்னட சேனல்களில் நிகழ்ச்சி தொகுப்பாளர் வேலை செய்துள்ளார்.
கல்லூரியில் டிகிரி முடிந்த உடன் கன்னட, தெலுங்கு சீரியல்களில் ஹீரோயின் கேரக்டரில் நடித்துள்ளார் சினிமாவில் நடிக்க பிஸியாகி விட்டாராம்.

கன்னடத்தில் துளசி
‘தென்றல்' சீரியலோட கன்னட வெர்ஷனான ‘துளசி'யில் நவ்யாதான் ஹீரோயின். விகடன் டெலிவிஸ்டாஸ் நிறுவனத்தில் பணியாற்றியது தனி அனுபவம் என்கிறார் நவ்யா.

வாணி ராணி
ராதிகாவின் ராடான் நிறுவன தயாரிப்பான‘வாணி ராணி' சீரியலில் இளைய மருமகள் பூஜாவாக நடித்து வருகிறார். கௌதம் உடனான ரொமான்ஸ் காட்சிகளில் அசத்துகிறார்.

பறந்து பறந்து நடிக்கும் நவ்யா
தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகள்ல எட்டு சீரியல்கள்லயும், நிறைய கன்னடப் படங்களிலும் நடித்திருக்கும் பூஜா, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை என பறந்து பறந்து நடித்து வருகிறார்.

வில்லியாக நடிக்க ஆசை
இப்படிப் பறந்து பறந்து நடிக்கிறது, ரொம்பப் பிடிச்சிருக்கு. ஆரம்பத்தில் தமிழ் சுத்தமா தெரியாது. இப்போ சூப்பரா பேசுவேன் என்கிறார். காமெடி, அன்பான நாயகியாக நடித்து விட்டேன், இனி மிரட்டல் வில்லியாக நடிக்க ஆசை என்கிறார் நவ்யா.


Click it and Unblock the Notifications











