Just In
- 3 hrs ago
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்... பழிவாங்குதல்..அன்பின் காவியம்.. ‘நாகினி 5’
- 3 hrs ago
ரெட்ரோ லுக்கில் அசத்தும் ரன்வீர் சிங்.. அசந்து போன ரசிகர்கள்!
- 4 hrs ago
ஜித்தன் ரமேஷின் அறியப்படாத பக்கங்கள்... ரகசியம் சொல்லும் மலையாள இயக்குநர் அபிலாஷ்!
- 5 hrs ago
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
Don't Miss!
- News
இன்றைய தேதியில் இந்தியாவில் தேர்தல் நடந்தால்.. என்டிஏ கூட்டணி 321 இடங்களை வெல்லும்.. அதிரடி சர்வே..!
- Automobiles
அதிக சத்தம் வந்ததால் கைது செய்த போலீஸ்... நியாயம் கேட்டு யூ-டியூப்பில் வீடியோ வெளியிட்ட சூப்பர் பைக் ரைடர்...
- Sports
அண்ணனுக்கு ஒரு ராபின் உத்தப்பா.. "யூத்" வீரரை விலைக்கு வாங்கிய சிஎஸ்கே.. இதுதான் அந்த ஸ்பார்க்கா தல?
- Finance
ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..!
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நடனம் ஆடுவதற்காக நடிக்க வந்தவள் நான்… நடிகை ராதா
சினிமாவில் 80 களில் பிரபலமாக இருந்த நடிகைகள் எல்லாம் சீரியலில் கதாநாயகிகளாக வலம் வருகின்றனர். ஆனால் நடிப்பிற்குப் பின்னர் திருமணம் குழந்தைகள் என்று செட்டில் ஆன ராதா தன்னுடைய மகள்கள் நடிக்க வந்த பின்னர் சின்னத்திரை நடுவராக களம் இறங்கியுள்ளார்.
விஜய் டிவியின் ஜோடி நம்பர் 1 நடன நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களை விட ராதாவின் நடனம்தான் ரசிகர்களை அதிகம் கவர்கிறது.

தென்னிந்திய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகை ராதா.80களில் ஒவ்வொரு தமிழ் ரசிகனையும் தன் அழகால் கட்டிப்போட்டவர். தென்னிந்திய சினிமாவில் பத்து ஆண்டுகள் அசைக்க முடியாத கனவு கன்னியாக வலம் வந்தவர்.
வாரிசு நடிகைகள்
ராதாவின் வாரிசுகள் துளசியும், கார்த்திகாவும் நடிக்க ஆரம்பித்து விட்டார்கள். ராதாவுக்கு அம்மா, அத்தை கேரக்டர்கள் வரிசை கட்டி நிற்கிறது.
ஜோடி நம்பர் 1 நடுவர்
சினிமா வாய்ப்புகளை ஒப்புக்கொள்ளாத நடிகை ராதா வாரத்திற்கு மூன்று நாட்கள் மும்பையிலிருந்து பறந்து வந்து நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்து விட்டு மீண்டும் மும்பைக்கு பறந்து விடுகிறார்.
நடனம்தான் உயிர்
நடனத்தின் மீது உள்ள ஈர்ப்பின் காரணமாகவே நடன நிகழ்ச்சிகளில் நடுவராக வந்துள்ளதாக கூறுகிறார் நடிகை ராதா. அந்த வேகமும், ஆர்வமும் இப்போதும் குறையவில்லை. அதனால்தான் நடிப்பதை விட இந்த நிகழ்ச்சியில் என்னால் முழுமனதோடு ஈடுபட முடிகிறது.
நடிக்க வந்தது நடனமாடத்தான்
நடிக்க வர்றதுக்கு முன்னாடியே டான்சுன்னா எனக்கு வெறி. பைத்தியம் பிடிக்கிற அளவுக்கு ஈர்ப்பு. சினிமாவில் நடிக்க வந்ததே பாட்டுக்கு டான்ஸ் ஆடலாமே என்பதற்காகத்தான் என்கிறார் ராதா.
பழைய நினைவுகள்
நிகழ்ச்சியில் என்னை விட பிரமாதமான டான்சர்களை என் கண்முன்னால் பார்க்கிறேன். நான் நடித்த பாடல் காட்சிகளை அவர்கள் ஆடும்போது பழைய நினைவுகளில் மூழ்கிவிடுகிறேன்.
சந்தோசமான உணர்வு
நடனம் பற்றிய அடிப்படையான விஷயங்களோடு உள்ளே வந்து நல்ல டான்சர்களாக வெளியேறும் அற்புத நிகழ்ச்சி இது. அவர்களின் வளர்ச்சிக்கு என்னோட விமர்சனமும், மதிப்பீடும் ஒரு காரணமாக இருக்கிறது என்பதால் உளப்பூர்வமான சந்தோஷம் கிடைக்கிறது.
சொந்த ஊருக்கு வருகிறேன்
மும்பையிலிருந்து இந்த நிகழ்ச்சிக்காக கிளம்பி வரும்போது சொந்த ஊருக்கு வருவதைப்போல உணர்கிறேன்" என்கிறார் ராதா. நிகழ்ச்சியில் மார்க்போடுவதோடு மட்டுமல்லாது உற்சாகமாக நடனமாடும் ராதா நடன நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களுக்கு சிறந்த டிப்ஸ்களையும் அள்ளித் தருகிறார்.