TRENDING ON ONEINDIA
-
காஷ்மீர் தாக்குதல்... அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டனம்.. மவுனமாக இருக்கும் பாக், சீனா
-
திடீரென நடத்தப்பட்ட ரெய்டில் நடிகை நயன்தாராவின் சொகுசு வேன் பறிமுதல்... அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்...
-
கார்த்தி வெள்ளத்தில் சிக்கி கஷ்டப்பட்டு நடித்த தேவ் படம் எப்படி இருக்கு?: ட்விட்டர் விமர்சனம்
-
தலைவர் முதல் தளபதி வரை - வாழ்க்கையில் நடந்த காதல் முதல் கசமுசாக்கள் வரை
-
வேற லெவல் பிளான் உடன் மீண்டும் நிலவிற்கு செல்லும் நாசா; பின்னணி என்ன?
-
ரிஷப் பண்ட் இந்திய அணிக்கு ஏன் முக்கியம் தெரியுமா? “நச்”சுன்னு நாலு காரணம் சொன்ன ஆஷிஷ் நெஹ்ரா
-
ஜியோவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு சலுகை... பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் போராட முடிவு
-
ஓரிரு மாதத்தில் திருமணம் நிச்சயம்! இந்த கோவிலுக்கு சென்று வழிபடுங்கள்!
வில்லியாக நடிக்க ஆசை… 'பாண்டவர் பூமி' ஷமீதா
பாண்டவர் பூமி படத்தில் அறிமுகமாகி... இப்போது சின்னத்திரையில் அழகான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் ஷமீதா.
சன் டிவியில் பிள்ளை நிலா, ஜீ தமிழ் சேனலில் புகுந்த வீடு சீரியல்கள் மூலம் இல்லத்தரசிகளின் உள்ளங்களில் இடம் பிடித்துள்ளார்.
சீரியலில் நடிக்க வந்து இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ் வீட்டு மருமகளாகிவிட்டார். நிறைய அழுகை, கொஞ்சம் அமைதியான கதாபாத்திரம் என கலந்து நடிக்கும் சமீதாவின் ஆசை சினிமாவில் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதுதானாம். நிஜத்தில் பயங்கர கோபக்காரி என்கிறார் ஷமீதா.
ராஜேஸ்வரியின் தங்கை
சேரனின் பொற்காலம் படத்தில் நடித்த ராஜேஸ்வரியின் தங்கை தான் ஷமீதா. நடிக்க வந்தது எதிர்பாராமல் வந்தது. பாண்டவர் பூமியில் சேரன் வாய்ப்பு கொடுத்தார். அந்த படம் நன்றாக போனது ஆனாலும் தொடர்ந்து நடித்த நான்கு படங்கள் வெளிவரவில்லை. அதனால் சீரியலுக்கு நடிக்க வந்து விட்டேன் என்கிறார்.
ஆபிஸ் போற மாதிரி
சீரியல் போவது ஆபிஸ் போவது மாதிரி ஜாலியாக இருக்கும் என்கிறார். அதனால் சினிமாவை விட சீரியலில் நடிக்கப் பிடித்திருக்கிறது என்கிறார்.
வாணி ராணி பார்ப்பேன்
ராதிகாவில் நடிப்பு ரொம்ப பிடிக்கும் என்பதால் டிவியில் வாணி ராணி சீரியல் மட்டும்தான் பார்ப்பாராம்.
ஸ்ரீ யுடன் காதல்
சன்டிவியில் சிவசக்தி தொடரில் தன்னுடன் நடித்த ஸ்ரீ யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் இசையமைப்பாளர் (சங்கர்) கணேசின் மகன்தான் ஸ்ரீ. இவரும் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து வருகிறார்.
காதலை சொன்ன ஷமீத
சிவசக்தி தொடரில் நடிக்கும் போதே பிடித்துவிட்டது. நான்தான் முதலில் காதலை சொன்னேன். கல்யாணம் பண்ணிக்கிறயா என்று அவர் கேட்டார். உடனே ஓகே சொல்லிட்டேன்.
சமைக்க பிடிக்கும்
சீரியலில் நடித்தாலும் நன்றாக காரசாரமாக சமைப்பாராம் ஷமீதா. தன்னுடைய காரசாரமான சமையல் கணவர் ஸ்ரீக்கு பிடிக்குமாம்.
வில்லியாக நடிக்க ஆசை
தனக்கு கோபம் அதிகம் வரும் என்று கூறும் ஷமீதா, விரைவில் சின்னத்திரையிலோ, வெள்ளித்திரையிலோ அழகான வில்லியாக நடிக்க ஆசை என்கிறார்.