»   »  பொங்கல் ஸ்பெஷல்... விஜய் டிவியில் இளையராஜாவின் சிறப்புப் பேட்டி!

பொங்கல் ஸ்பெஷல்... விஜய் டிவியில் இளையராஜாவின் சிறப்புப் பேட்டி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பொதுவாக பேட்டிகள் என்றாலே தவிர்த்துவிடுவார் இளையராஜா. சமய சந்தர்ப்பம் தெரியாமல் அபத்தமாக எதையாவது நிருபர்கள் கேட்க, டென்ஷனாகிவிடுவார் ராஜா.

அண்மையில் வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த இளையராஜாவிடம் ஒரு அரைவேக்காட்டு நிருபர் பீப் பற்றிக் கேட்டதும், அதைத் தொடர்ந்து எழுந்த விவாதங்களும் நினைவிருக்கலாம்.

அதற்குப் பிறகு இப்போதுதான் இளையராஜா தொலைக்காட்சிப் பேட்டிக்கு ஒப்புதல் தந்துள்ளார்.

Ilaiyaraaja Spl interview in Vijay TV

பொங்கல் அன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காஃபி வித் டிடி நிகழ்ச்சியில் இளையராஜா பங்கேற்கிறார். இது குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது விஜய் டிவி.

தாரை தப்பட்டை இளையராஜாவின் 1000-வது படம் என்பதால் அவருடைய பல நினைவலைகளை இந்த நிகழ்ச்சியில் அவர் பகிர்ந்து கொள்கிறார்.

English summary
Music Director Ilaiyaraaja will give his first interview to Vijay TV at Koffee with DD.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil