»   »  சுதந்திர தினத்திற்கு பெப்பர்ஸ் டிவியில் என்ன ஸ்பெஷல் தெரியுமா?

சுதந்திர தினத்திற்கு பெப்பர்ஸ் டிவியில் என்ன ஸ்பெஷல் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பெப்பர்ஸ் டிவியில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. தேசபக்தி பாடல்களும், மாணவர்கள் கொண்டாடும் சுதந்திர தினம் பற்றிய நிகழ்ச்சியும் ஒளிபரப்பாக உள்ளது.

நடிகைகள் பேட்டி, சினிமா ஆகிய நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் தேசபக்தியைப் பற்றிய பல நிகழ்ச்சிகள் பெப்பர்ஸ் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று பிறந்தவர்கள் இந்த நேரடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு செல்போன் பரிசு பெறலாம். சுதந்திர தின வினா விடை நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

தேசபக்திப்பாடல்கள்

தேசபக்திப்பாடல்கள்

புகழ் பெற்ற மூன்று பின்னணி பாடகர்கள் ஹிரண்யா சிங்கப்பூர் ,பத்மா ஷங்கர் மற்றும் ஜனனி ஆகஸ்ட் 15 அன்று காலை 9.00 மணிக்கு தேசபக்திப்பாடல்கள் பாடி மகிழ்விக்கின்றனர் .

மிலிட்டரி கிராமம்

மிலிட்டரி கிராமம்

வேலூர் அருகில் உள்ளது ராணுவப்பேட்டை. இங்கு வசிக்கும் அனைவருமே ராணுவத்தில் பணிபுரிபவர்கள். அந்த கிராமத்துக்கு சென்று ராணுவத்தில் வேலை பார்த்தவர்கள், பார்ப்பர்கள், பார்க்க போகிறவர்களுடன் ஒரு நேரடி சந்திப்பு. காலை 9 30 மணிக்கு ஒளிபரப்பாகிறது .

மாணவர்களுடன் சுதந்திர தினம்

மாணவர்களுடன் சுதந்திர தினம்

சென்னை கொளத்தூரிலுள்ள ஒரு பள்ளியில் மாணவிகளிடையே சுதந்திர விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி பேண்டு வாத்தியங்களுடன் சுதந்திர தினத்தை மிகப்பெரிய விழாவாக்கி மாணவிகளின் திறமை போட்டி ,கொடியேற்றம் நடத்தப்பட்டு மாணவர்களுடன் கலக்கல் கொண்டாட்டம் நடைபெறும் இந்நிகழ்ச்சி காலை 10.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

சுதந்திர கானா

சுதந்திர கானா

வழக்கமாக நடைபெறும் கானப்பேட்டை நிகழ்ச்சி போல் அல்லாமல் கான கவி ,கான அருள் அசத்தும் சுதந்திர கான நிகழ்ச்சி காலை 11.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

காந்தியின் கனவு மக்கள் மனது

காந்தியின் கனவு மக்கள் மனது

ஒரு பெண் நள்ளிரவில் எப்போது தனியாக சென்றாலோ அன்று தான் உண்மையான சுதந்திரம் என காந்தியின் உண்மையான கனவு இன்றைய காலகட்டத்தில் சாத்தியமா ?என்று பொதுமக்களிடையே கருத்து கேட்கப்படும் நிகழ்ச்சி காலை 11.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

மை பெப்பெர்ஸ் மை பர்த்டே

மை பெப்பெர்ஸ் மை பர்த்டே

ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று பிறந்தவர்கள் இந்த நேரடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு செல்போன் பரிசு பெறலாம்.தொகுப்பாளர் ராஜிவ் உரையாடும் இந்நிகழ்ச்சி தொடர்ந்து நான்கு வருடங்களாக பெப்பெர்ஸ் டிவி உயர்ந்த செல்போன் பரிசு அளிக்கிறது .

சுதந்திர தின வினா விடை

சுதந்திர தின வினா விடை

கொஞ்சம் யோசிங்க பாஸ் சுதந்திர தின வினா விடை நிகழ்ச்சி 1 மணிக்கு ஒளிபரப்பாகும். மீண்டும் ஒரு காதல் கதை திரைப்படக்குழு நேர்காணல் - பகல் 1 30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

English summary
Independece day Special program on Peppers TV.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil