Don't Miss!
- Sports
தோனியிடம் இனி கற்க ஒன்றுமே இல்லை.. ஹோட்டல் விட்டு ஹோட்டல் அழைகிறோம்.. ஹர்திக் பாண்டியா பேச்சு
- News
"எப்படி இத சாப்பிடறாங்க.." சைவம் சாப்பிடறவங்கள பார்த்தாலே எனக்கு பாவமா இருக்கும்.. ரஜினிகாந்த் கலகல
- Lifestyle
Today Rasi Palan 27 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் பணம் திருடு போக வாய்ப்புள்ளதால் உஷார்...
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
ஃபேமிலி அருமை தெரியனும்னா...சர்வைவருக்கு பின் இந்திரஜா போட்ட முதல் போஸ்ட்
சென்னை : ஜீ தமிழ் சேனலில் செப்டம்பர் 12 ம் தேதி முதல் சர்வைவர் தமிழ் ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாகி வருகிறது. சினிமா பிரபலங்கள் பலர் பங்கேற்று வரும் இந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜுன் வழிநடத்தி வருகிறார்.
மிக விறுவிறுப்பாக, புது புது ட்விஸ்ட், போட்டிகளுடன் சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நேற்று நடைபெற்ற போட்டியில் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா ஷங்கர் எலிமினேட் ஆனார். இதன் மூலம் பார்வதி நிகழ்ச்சிக்குள் ரீஎன்ட்ரி ஆகி உள்ளார்.
சர்வவைர் தமிழ்...எலிமினேட் ஆன ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா

முதல் பதிவு
நிகழ்ச்சியில் இருந்து வெளியறே்றப்பட்ட இந்திரா, இன்று இன்ஸ்டாகிராமில் தனது முதல் பதிவை, சர்வைவரில் தான் பங்கேற்ற ஃபோட்டோக்களுடன் பகிர்ந்துள்ளார். உணர்ச்சிகரமான இவரின் பதிவை ஏராளமானவர்கள் லைக் செய்து வருகின்றனர். நேற்று இந்திரஜா எலிமினேட் ஆன போதும் பலர் அவரை, சிங்கப் பெண்ணே என பாராட்டி கமெண்ட் செய்திருந்தனர்.

நன்றி மக்களே
இந்திரஜா தனது பதிவில், சர்வைவர் பயணத்தில் எனக்கு நீங்கள் அளித்த அன்பிற்கும் ஆதரவிற்கும் ரொம்ப நன்றி மக்களே. நீங்கள் இல்லாமல் என்னால் இதை செய்திருக்க முடியாது. ஜீ தமிழ் சர்வைவர் டீமுக்கு எனது மிகப் பெரிய நன்றி. இந்த வாய்ப்பை எனக்கு தந்த குழுவினருக்கும் நன்றி. என்னை நன்றாக வழி நடத்திய அர்ஜுன் சாருக்கும் நன்றி.

போட்டியாளர்களுக்கு நன்றி
எனது சக போட்டியாளர்கள் அனைவருக்கும் அடி மனதில் இருந்து நன்றி சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் தான் எனக்கு எனது ப்ளஸ் மற்றும் மைனசை கற்றுக் கொடுத்தீர்கள். என்னை அக்கறையுடனும் பார்த்துக் கொண்டீர்கள். எப்போதும் என் மீது நம்பிக்கை வைத்து என் உடன் இருக்கும் என் குடும்பத்தினருக்கு எனது அன்பான நன்றி.

ஃபேமிலி அருமை தெரியனுமா
நான் இருக்கும் வரை ஒவ்வொரு மில்லி செகண்டும் உங்கள் அனைவரையும் நேசித்துக் கொண்டே இருப்பேன். ஃபேமிலியோட அருமை தெரியனும்னா சர்வைவர் ஷோ போய்ட்டு வாங்க என குறிப்பிட்டுள்ளார் இந்திரஜா. அவர் சிறப்பாக விளையாடிதற்காக பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். நீ சிறப்பாக விளையாடி இருக்கிறாய். நீ உனது 200 சதவீதம் பங்களிப்பை கொடுத்திருக்கிறாய். நீ இதுவரை வந்ததே வெற்றி பெற்றதற்கு சமம் என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

குவியும் பாராட்டுக்கள்
ஏற்கனவே விஜய் நடித்த பிகில் படத்தில் பாண்டியம்மா ரோலில் நடித்து மிகவும் பிரபலமாகி விட்டார் இந்திரஜா. இந்நிலையில் தற்போது சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதால் இந்திரஜா கவனிக்கப்படும் ஸ்டார் ஆகி விட்டார்.