twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சேனல்களை திருட்டுத்தனமாக பயன்படுத்தியதில் சட்டப்படி நடவடிக்கை- இந்தியாகாஸ்ட் அதிரடி !

    |

    மும்பை : TV18 மற்றும் வயாகாம்18 சேனல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள இந்தியாகாஸ்ட் நிறுவனம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

    இந்தியாகாஸ்ட், அதன் திருட்டு ஒழிப்புக்கான முகமை காமக்யாவின் வழியாக ராஜஸ்தானின் பிவாடி பகுதிகளில் செயல்படுகிற அவர்களது ஆபரேட்டர்கள் உட்பட நர்னால் கேபிள் சர்வீசஸ் அண்டு ஃபவுலாட் கேபிள் நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கு எதிராக வெவ்வேறு காவல் நிலையங்களில் FIR பதிவுசெய்திருக்கிறது.

    விஸ்வரூபம் எடுத்த போதைப் பொருள் விவகாரம்: ராணா டகுபதியையும் ரவி தேஜாவையும் வறுத்தெடுத்த போலீசார்! விஸ்வரூபம் எடுத்த போதைப் பொருள் விவகாரம்: ராணா டகுபதியையும் ரவி தேஜாவையும் வறுத்தெடுத்த போலீசார்!

    தொடர்ந்து நீடிக்கிற திருட்டு செயல்பாடு பிரச்சனைக்கு எதிரான ஒரு தொடர்ச்சியான யுத்தத்தில் TV18 பிராட்காஸ்ட் லிமிடெட் மற்றும் வயாகாம்18 மீடியா பிரைவேட் லிமிடெட்-க்கு சொந்தமான பல்வேறு செயல்தளங்களிலான உள்ளடக்க சொத்து நிறுவனமான இந்தியாகாஸ்ட், இப்பகுதிகளில் TV18 மற்றும் வயாகாம்18 சேனல்களை அனுமதியின்றி மற்றும் சட்டவிரோதமாக ஒளிபரப்பிய குற்றத்திற்காக புகாரை தாக்கல் செய்திருக்கிறது..

    தகுந்த நடவடிக்கை

    தகுந்த நடவடிக்கை

    புகார்களை ஏற்றுக்கொண்ட காவல்துறை அதிகாரிகள் ,இப்புகாரின் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் வெவ்வேறு இடங்களில் ஆறுக்கும் அதிகமான இடங்களில் சோதனைகளை நடத்தினர். அனுமதி பெறாத பகுதிகளில் பொதுமக்களின் நுகர்வுக்காக பல்வேறு சேனல்களின் சிக்னல்களை மறுஒளிபரப்பு செய்வதற்கு பயன்படுத்தப்படும் டிரான்ஸ்மிட்டர்கள் மற்றும் நோடுகள் போன்ற சாதனங்களையும் காவல்துறையினர் கைப்பற்றியிருக்கின்றனர். இப்புகாரைத் தொடர்ந்து இவ்விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நான்கு நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு ஜாமின் மறுக்கப்பட்ட நிலையில் 5 நாட்களுக்கு நீதிமன்ற காவலுக்கு அவர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

    பாதிக்கும் நிறுவனம்

    பாதிக்கும் நிறுவனம்

    இந்நிகழ்வு குறித்து விளக்கமளித்த இந்தியாகாஸ்ட்-ன் செய்திதொடர்பாளர் கூறியதாவது: "ஒளிபரப்பு திருட்டை தடுப்பதற்கும், ஒழிப்பதற்குமான இந்த செயல்முயற்சியில் விரைவான மற்றும் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்ததற்கான பிவாடி காவல்துறை அதிகாரிகளுக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். ஒளிபரப்புக்கான உள்ளடக்க திருட்டு என்பது ஊடக தொழில்துறைக்கு தொடர்ந்து அதிகரித்துவரும் கவலையளிக்கும் ஒரு பிரச்சனையாக இருக்கிறது. ஏனெனில், ஒளிபரப்பு நிறுவனத்தின் வருவாயை இது நேரடியாக பாதிக்கிறது .

    பல வழக்குகள்

    பல வழக்குகள்

    தங்களது ஒளிபரப்பு உள்ளடக்கம் மற்றும் சேனல்கள் திருட்டுத்தனமாக பயன்படுத்தப்படும் பிரச்சனையை தடுப்பதிலும் மற்றும் அதற்கு தீர்வு காண்பதிலும் TV18 பிராட்காஸ்ட் மற்றும் வயாகாம்18 நிறுவனம் செய்து வருகிறது.. THOP TV என்பதற்கு எதிராக மகாராஷ்ட்ரா மாநில சைபர் செல் பிரிவில் முதல் தகவல் அறிக்கையை வயாகாம்18 பதிவுசெய்திருந்தது. தள்ளுபடி செய்யப்பட்ட விலைகளில் திருடப்பட்ட ஒளிபரப்பு மற்றும் OTT உள்ளடக்க நிகழ்ச்சிகளை இலட்சக்கணக்கான ஆன்லைன் பார்வையாளர்களுக்கு THOP TV வழங்கிவருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் THOP TV-ன் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அலுவலரை கைது செய்திருக்கிறது.

    டிஜிட்டல் விநியோகம்

    டிஜிட்டல் விநியோகம்

    இந்தியாகாஸ்ட் நிறுவனம், அதன் அனைத்து குழும நிறுவனங்களின் சேனல்கள் மற்றும் உள்ளடக்கத்திற்காக இந்தியாவில் வினியோகம், பணியமர்த்தல் சேவைகள், உலகளவில் சேனல் வினியோகம் மற்றும் விளம்பர விற்பனை, டிஜிட்டல் ஊடக வினியோகம் மற்றும் உள்ளடக்க உரிமைக்குழு செயலாற்றல் ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறது.

    இந்தியாகாஸ்ட் நிறுவனம்

    இந்தியாகாஸ்ட் நிறுவனம்

    TV18 பிராட்காஸ்ட் லிமிடெட் மற்றும் வயாகாம்18 மீடியா பிரைவேட் லிமிடெட் ஆகிய இரு நிறுவனங்களுக்கு இணையான ஒரு கூட்டு நிறுவனமாக இந்தியாகாஸ்ட் செயல்படுகிறது. இந்தியாவின் முதல் பன்முக செயல்தள 'உள்ளடக்க சொத்து நிதியாக்கல்' நிறுவனமான இது, அதன் அனைத்து குழும நிறுவனங்களின் சேனல்கள் மற்றும் உள்ளடக்கத்திற்காக இந்தியாவில் வினியோகம், பணியமர்த்தல் சேவைகள், உலகளவில் சேனல் வினியோகம் மற்றும் விளம்பர விற்பனை, டிஜிட்டல் ஊடக வினியோகம் மற்றும் உள்ளடக்க உரிமைக்குழு செயலாற்றல் ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறது.

    பல நாடுகள் உள்ளடக்கம்

    பல நாடுகள் உள்ளடக்கம்

    இந்தியாகாஸ்ட் மொத்தத்தில் 61+ சேனல்களை வினியோகம் செய்துவருகிறது. பொது பொழுதுபோக்கு, குழந்தைகளுக்கான சேனல்கள், செய்திகள், இசை, இன்ஃபோடெயின்மென்ட் திரைப்படங்கள் ஆகியவை உட்பட பல்வேறு வகையினங்களில் இந்தியாவில் 15+ ஹெச்டி சேனல்களும் இத்தொகுப்பில் உள்ளடங்கும். சர்வதேச அளவில், 80க்கும் அதிகமான நாடுகளில் ஒளிபரப்பாகிற 10-க்கும் அதிகமான சேனல்களின் அணிவரிசையையும் இந்தியாகாஸ்ட் கொண்டிருக்கிறது. பல்வேறு பிரிவுகளில் 15000க்கும் அதிகமான மணிநேரங்களுக்கு நிகழ்ச்சிகளை கொண்டிருக்கும் இந்தியாகாஸ்ட், 20க்கும் அதிகமான மொழிகளில் கிட்டத்தட்ட 100 நாடுகளில் இந்த உள்ளடக்கத்தை உரிமையின்கீழ் ஒளிபரப்பும் செயல்பாட்டையும் செய்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Indiacast warns fake usage of TV18 and Viacom 8 channels
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X