twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Ayudha ezhuthu serial: மனசை கொடுத்துட்டு மனுஷன் யாருன்னு கேட்கறியேம்மா?!

    |

    சென்னை:விஜய் டிவியின் ஆயுத எழுத்து சீரியல், ஒரு சப் கலெக்டருக்கும், அந்த ஊர் காளி அம்மாவுக்குமான போட்டி கதை என்று கூட சொல்லலாம். இந்த காளி அம்மாவின் மகன் சக்தி, சப் கலெக்டர் வந்த அன்றே பழக்கமாகி விடறான்.

    காளி அம்மா என்றால் ,அந்த ஊருக்கு அவங்க காளி அம்மன் மாதிரி. எதை செய்தாலும் இவர்களை கேட்டுட்டுத்தான் அந்த ஊர் மக்கள் அதை செய்வார்கள்.இப்படிப்பட்ட பயத்தை மக்களுக்கு காமிக்கறவங்க இந்த காளி அம்மாள்.

    காளி அம்மாள் வாக்கு கடவுளைச் சொன்ன வாக்கு மாதிரின்னு அடிக்கடி சொல்லகிட்டு அடியாளோடு சுத்தறவங்க காளி அம்மாள். இவங்களுக்கு பிள்ளையாகப் பிறந்த சக்தியை சப்கலெக்டர் இந்திராவுக்கு பிடிச்சுப்போகுது.

    கெட்டப் காளி அம்மாள்

    கெட்டப் காளி அம்மாள்

    புது கெட்டப்பில் காளி அம்மாள் கதாபாத்திரத்தை நன்றாகவே வடிவமைச்சு இருக்காங்க.புடவைக் கட்டும் பெரிய பொட்டும், குங்குமமும் என்று நல்ல கெத்துதான். உட்காரும் ஸ்டைல் என்று, நடிகை ரம்யா கிருஷ்ணன் நடை உடை பாவனைகளை காப்பி அடித்து இருக்கிறார்கள். எல்லாமே அப்படித்தான் நடக்குது, இதில் மட்டும் குற்றம் சொன்னால் திருந்திவிடப் போகிறார்களா என்ன?

    இந்திரா சக்தி

    இந்திரா சக்தி

    இந்திரா சப்கலெக்டர்...இவள் காளி அம்மாள் இருக்கும் கிராமத்தில்தான் தங்கவும் பணிகளைப் பார்க்கவும் போகிறாளாம். அதனால், கிராமத்துக்குள் போக, அங்கு ஜீப்புடன் நின்றிருந்த சக்தியை கூப்பிடுகிறாள். வாடகை வண்டிதான் என்று நினைத்துக்கொண்டு. அவனும் அதையே மெயிட்டெயின் செய்து எப்படி மேடம் வாடகை வண்டின்னு கண்டு பிடிச்சு கூப்பிடேங்கன்னு கேட்கறான். கிராமத்தின் உள்ளே போக ஜீப்தானே வசதியா இருக்கும்.அதை வச்சுதான் கண்டு பிடிச்சேன்னு சொல்றா.

    கலெக்டர்னு சக்திக்கு

    கலெக்டர்னு சக்திக்கு

    காளி அம்மாளின் மகன் சக்திக்கு இந்திரா சப்கலெக்டர்னு தெரியும். அதை மறைத்து இந்திராவுடன் பழகுகிறான் சக்தி.வீட்டில் வந்து அண்ணியிடமும் தான் சப்கலெக்டரை காதலிப்பதாக சொல்கிறான்.ஆனால், இவள் சக்தி யார்னு தெரிஞ்சுக்காமலே நட்புடன் பழகறா. ஒரு நாள் காளி அம்மாள் பற்றிய வேலையில் மூழ்கி இருக்கிறாள்.அந்த நேரத்தில் அப்பா அம்மா ஊரில் இருந்து வருகிறார்கள்,அவர்களை ரிஸீவ் செய்துக் கொள்ள வேண்டும் என்பதை மறந்து விடுகிறாள்.

    இந்திரா சக்தி

    இந்திரா சக்தி

    இந்திராவின் அப்பா அம்மாவை, சக்தி ரயில்வே ஸ்டேஷன் சென்று அழைத்து வந்துவிடுகிறான். ரொம்ப நன்றி, என்னை காப்பாற்றியதற்கு என்று ஆங்கிலத்தில் சொல்கிறாள் இந்திரா. இவனுக்கு ஒண்ணும்புரியலை என்றாலும் மகிழ்ச்சி. ஆமாம், உங்களுக்கு எப்படி அவங்க வர்றது தெரியும்னு கேட்க, அன்னிக்கு போன்லேபேசிக்கிட்டு இருந்தீங்கன்னு இவன் சொல்ல, ஓட்டுக்கு கேப்பது தப்பில்லைன்னு இவள் கேட்க, நாலு பேருக்கு நல்லது செய்யனும்னா எதுவும் தப்பில்லைங்கன்னு அவன் சொல்ல ரொமான்ஸ் ஆறாக ஓடுது.

    சக்தி சென்றவுடன், இவள் தனது பிஏவை அழைச்சு, இவரு யாருன்னு கேட்கறா...என்னத்தை சொல்ல? மனசை கொடுத்துட்டு, மனுஷன் யாருன்னு கேட்டால் எப்படி?

    English summary
    Vijay TV's Armed ayudha ezhuthu Serial can be said to be a rivalry story for a sub collector and his mother Kali. Shakti, the son of Kali's mother, became accustomed to the same day as the Sub Collector.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X