என்னது...குக் வித் கோமாளி சீசன் 3 ஷுட்டிங் நிறுத்தமா...இது தான் காரணமா?

சென்னை : விஜய் டிவியின் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று குக் வித் கோமாளி. இதன் முதல் இரண்டு சீசன்களும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து மூன்றாவது சீசன் விரைவில் துவங்கப்பட உள்ளது. இதற்கான ப்ரோமோ சமீபத்தில் வெளியிடப்பட்டது.

குக் வித் கோமாளி சீசன் 2 ல் பங்கேற்ற அஸ்வின், தர்ஷா குப்தா, புகழ், சிவாங்கி, பத்ரலட்சுமி போன்றோர் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர்கள் ஆகி விட்டனர். இவர்கள் அனைவரும் தற்போது சினிமாவில் சான்ஸ் கிடைத்து பிஸியாக நடித்து வருகிறார்கள். இதனால் மூன்றாவது சீசன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

குக், கோமாளிகள் இவங்க தான்

குக், கோமாளிகள் இவங்க தான்

மூன்றாவது சீசனிலும் சிவாங்கி, மணிமேகலை, சுனிதா, வெட்டிக்கிளி பாலா, மூக்குத்தி முருகன், கலக்க போவது யாரு புகழ் குரேஷி, சூப்பர் சிங்கர் புகழ் பரத் ஆகியோர் கோமாளிகளாக பங்கேற்க போகிறார்களாம். அதே சமயம் பின்னணி பாடகர் ஆன்டனி தாசன், நடிகர் கருணாசின் மனைவி கிரேஸ் கர்ணாஸ், நடிகரும் தயாரிப்பாளருமான மனோபாலா, சார்பட்டா பரம்பரை நடிகர் சந்தோஷ் பிரதாப், நடிகை வித்யுலேகா ராமன் ஆகியோர் குக் ஆக பங்கேற்க உள்ளனர்.

இவங்களும் இருக்காங்க

இவங்களும் இருக்காங்க

இந்த சீசனிலும் செஃப்ஸ் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் நடுவர்களாக செயல்பட உள்ளனர். சிறப்பு விருந்தினர்களாக புகழ் மற்றும் மதுரை முத்து பங்கேற்க உள்ளனராம். இந்த நிகழ்ச்சி எப்போது துவங்கப்பட உள்ளது என தேதி அறிவிக்கப்படாத நிலையில், இந்த நிகழ்ச்சிக்கான ஷுட்டிங் நடத்தப்பட்டு வந்தது.

நிறுத்தப்பட்ட ஷுட்டிங்

நிறுத்தப்பட்ட ஷுட்டிங்

முதல் கட்ட ஷுட்டிங் முடிந்து, இரண்டாம் கட்ட ஷுட்டிங் நடத்தப்பட்டு வந்த நிலையில், இரண்டாம் கட்ட ஷுட்டிங் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் விரைவில் நிகழ்ச்சி துவங்கும் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Recommended Video

Cook With Comali Season 3-ல் Pugazh இருக்காரா? இல்லையா? Chef Dhamu கொடுத்த விளக்கம்
இது தான் காரணமா

இது தான் காரணமா

எதற்காக ஷுட்டிங் நிறுத்தப்பட்டது என விசாரித்த போது, செட்டில் இருந்த பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாம். கொரோனா வேகமாக பரவி வருவதால் பாதுகாப்பு கருதி ஷுட்டிங் நிறுத்தப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X