அவனுங்களா? இன்னும் தனியாதான் இருக்காணுங்களா?..டேய் உங்களுக்கு கல்யாணமே ஆகாதுடா..சாபம் விட்ட கோபிநாத்

சென்னை: நீயா நானா நிகழ்ச்சியில் காதலில் நான் ஒரு ராசியில்லா ராஜா பாய்ஸ் மற்றும் கேர்ல்ஸ் என்கிற தலைப்பில் சுவையான நிகழ்ச்சி நடந்தது.

தங்களுக்கு காதல் நிறைவேறாதது குறித்து வருத்ததுடன் பல இளைஞர்கள் சொல்ல அவர்களுக்கு பெண்கள் பதிலடி கொடுக்க நிகழ்ச்சி சுவாரஸ்யமாக நகர்ந்தது.

அந்தஸ்து, வழக்கமான பழைய காதல் டெக்னிக், போரடிக்கும் இளைஞர்கள் என பலவித விஷயங்கள் இதில் வெளிவந்தன.

 நுணுக்கமான உளவியல் சிக்கல்களை அலசும் நிகழ்ச்சி

நுணுக்கமான உளவியல் சிக்கல்களை அலசும் நிகழ்ச்சி

நீயா நானா நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக நடத்தும் சப்ஜக்ட் பொதுமக்களை பெரிதும் கவர்ந்து வருகிறது. இது உணர்வுப்பூர்வமான நுணுக்கமான மனித உறவுகளுக்குள் வரும் உளவியல் சிக்கல்களை அணுகுவதுதான் இந்த நிகழ்ச்சியின் சிறப்பாக உள்ளது. அதனால் மட்டுமே இது வெற்றியை சுவைக்கிறது பலராலும் பேசப்படுகிறது. இந்நிலையில் இன்று ராசியில்லாத ராஜாக்கள் இளம் தலைமுறையினர் மனதில் உள்ளதை பேசியது.

 நாங்க ஏன் ராசியில்லாத ராஜாவா இருக்கோம்?

நாங்க ஏன் ராசியில்லாத ராஜாவா இருக்கோம்?


இந்நிகழ்ச்சியில் பேசிய இளைஞர்கள் தான் ஏன் ராசியில்லாத ராஜாவாக இருக்கிறோம் என்பதை விளக்கிச் சொன்னார்கள். பலரும் பெண்களிடம் பல்பு வாங்கினார்கள். சார் பாட்டு பாடறேன்னு சொல்லி எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறான் சார் என்று ஒரு பெண் கூறினார். அதுவாவது பரவாயில்ல சார் அந்த காலத்து ஸ்டைலில் கவிதை எல்லாம் எழுதி வைத்து காதலை சொன்னால் யார் சார் ஏற்றுக்கொள்வார் என்று ஒரு பெண் சொன்னார். அதில் ஒரு பெண் சொன்னது முக்கியமான ஒன்று இவன் என்ன சொல்ல வருகிறான், என்ன முடிவில் இருக்கிறான் என்னை காதலிக்கிறானா என்பதைக்கூட உறுதியா சொல்ல கூட இவர்களால் முடியவில்லை என குற்றம் சாட்டினார்.

 ரெஸ்டாரண்ட்ல சாப்பிட்ட பின் பில்லை ஷேர் பண்ண சொல்லி கேட்ட காதலன்

ரெஸ்டாரண்ட்ல சாப்பிட்ட பின் பில்லை ஷேர் பண்ண சொல்லி கேட்ட காதலன்

ஒரு பெண் சொன்னது மிக வினோதமாக இருந்தது. 1000 ரூபாய்க்கு ரெஸ்டாரெண்டில் சாப்பிட்டுவிட்டு ஆளுக்கு 500 ரூபாய் ஷேர் பண்ணிக்கலாம் என்று சொல்லும் ஆணை எப்படி நம்ப முடியும் என்று கேட்டார். இன்னொரு பெண் சார் அப்பா கிட்ட காசு வாங்கிட்டு பெட்ரோல் போட்டுகிட்டு வர்றவனை எதை நம்பி காதலிப்பது என்று கேட்டார். அப்ப ஒரு பெண் சொன்ன தகவல் சுவாரஸ்யமாக இருந்தது. சார் ஒரு பையன் என் தோழியை காதலிக்கிறான், அவள் பிறந்த நாளுக்கு பரிசு என் மூலம் கொடுத்தனுப்பினான் என்ன பரிசு தெரியுமான்னு நைட்டி வாங்கி கொடுக்கிறான் சார் என்று சொன்னார்.

 நைட்டி பாய்ஸின் அட்ராசிட்டி.. இப்ப அந்த நைட்டி எங்கேம்மா?-கோபிநாத்

நைட்டி பாய்ஸின் அட்ராசிட்டி.. இப்ப அந்த நைட்டி எங்கேம்மா?-கோபிநாத்

கோபிநாத் "யாரு அந்த நைட்டி பாய்ஸா(முன்னர் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட இரண்டு இளைஞர்கள்), அவனுங்களுக்கு இன்னும் தனியாதான் இருக்கானுங்களா"ன்னு கேட்க ஆமாம் சார் அவங்களேதான் நைட்டியைப்போய் என் தோழிகிட்ட கொடுத்ததால அவள் கோபமாயிட்டான்னு சொன்னார். உடனே கோபிநாத் கேமராவ பார்த்து "டேய் உங்க ரெண்டுபேருக்கும் எப்பவுமே கல்யாணம் ஆகாதுடா"ன்னு சிரித்தப்படி சாபம் விட்டார். சரிம்மா இப்ப அந்த நைட்டி எங்கன்னு கோபிநாத் கேட்க இப்ப நான் அதை யூஸ் பண்ணிகிட்டிருக்கேன் சார்னு சிரித்தப்படி அந்தப்பெண் சொன்னார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X