கண்ணனை ஏற்கும் மூர்த்தி...முடிய போகிறதா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

சென்னை : கூட்டு குடும்பம், குடும்ப ஒற்றுமை, அண்ணன் - தம்பி பாசம் என சுவாரஸ்யமாக சென்று கொண்டிருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல், கடந்த இரண்டு வாரங்களாக சென்டிமென்ட், அழுகை என சோகமாக சென்று கொண்டிருக்கிறது.

சோகமாக சென்றாலும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பிடித்து விட்டது பாண்டியன் ஸ்டோர்ஸ். லட்சுமி அம்மாவின் மரணத்தின் போது நடத்தப்பட்ட சடங்குகள், உறவினர்களின் உணர்வுகள் ஆகியன நிஜமாக நடப்பது போன்ற உணர்வை மக்களிடம் ஏற்படுத்தியது. குறிப்பாக கண்ணன் கேரக்டரில் நடிக்கும் சரவணன் விக்ரமின் தத்ரூபமான நடிப்பு, பாராட்டுக்களை அள்ளிக் குவித்தது.

கனவில் வரும் லட்சுமி அம்மா

கனவில் வரும் லட்சுமி அம்மா

சமீபத்தில் வெளியிடப்பட்ட ப்ரோமோவின்படி, தனத்தின் கனவில் வரும் லட்சுமி அம்மா, நான் எங்கும் செல்லவில்லை. இங்கு தான் இருக்கிறேன். யாரையும் அழுக விடாமல் பார்த்துக் கொள் என ஆறுதல் கூறுகிறார். இதை வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி, அனைவரையும் தேற்றுகிறாள் தனம். இதற்கிடையில் கண்ணனுக்கும் சாப்பாடு கொடுத்து விடுகிறாள். இதை கவனித்து கேட்கும் மூர்த்தியிடம், கண்ணன் என்னுடைய மகன். அவன் சாப்பிடாமல் இருப்பதை என்னால் தாங்க முடியாது என்கிறாள்.

கண்ணனை ஏற்கும் மூர்த்தி

கண்ணனை ஏற்கும் மூர்த்தி

இதைத் தொடர்ந்து வெளியான லேட்டஸ்ட் ப்ரோமோவில், முல்லையின் அப்பா, தனத்திடம், குழந்தை பிறப்பதற்கு முன் குல தெய்வம் கோயிலுக்கு போய் பொங்கல் வைக்க வேண்டும் என சொல்கிறார். இதை மூர்த்தியிடம் சொல்லும் தனம், குடும்பத்துடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று பொங்கல் வைக்க வேண்டும். கண்ணனையும், ஐஸ்வர்யாவையும் கூப்பிடவா என கேட்கிறாள். அதற்கு மூர்த்தியும் ஓகே சொல்கிறார். மூர்த்தியின் இந்த பதில் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைக்கிறது.

Recommended Video

பிரபல சீரியலில் இருந்து விலகிய Venkat | Roja, Pandian Stores
சந்தோஷத்தில் ரசிகர்கள்

சந்தோஷத்தில் ரசிகர்கள்

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மீண்டும் ஒன்று சேர போகிற இந்த ப்ரோமோ, ரசிகர்களிடம் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக சோக காட்சிகளை மட்டுமே பார்த்து, போரடித்த ரசிகர்களுக்கு இந்த ப்ரோமோ சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளது.

முடிய போகிறதா பாண்டியன் ஸ்டோர்ஸ்

முடிய போகிறதா பாண்டியன் ஸ்டோர்ஸ்

அதே சமயம் இந்த ப்ரோமோவால் பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிய போகிறதா என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது. மூர்த்தி, கண்ணனை ஏற்றுக் கொண்ட பிறகு, தனத்திற்கு குழந்தை பிறக்கும். இதை வைத்து சில நாட்கள் ஓட்டுவார்கள். அதோடு ஒன்று சேர்ந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை காட்டி, சீரியலை முடிப்பார்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்.

அடுத்த ப்ரோமோ வந்தால் தெரியும்

அடுத்த ப்ரோமோ வந்தால் தெரியும்

சீரியல் முடிய போகிறதா அல்லது புதிதாக வேறு ஏதாவது ட்விஸ்ட் வைத்து, சீரியலை இன்னும் இழுப்பார்களா என தெரியவில்லை. எப்படி இருந்தாலும் அடுத்த ப்ரோமோ வரும் போது ரசிகர்களின் கேள்விகளுக்கு விடை கிடைத்து விடும் என்றே தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X