பிக்பாஸ் சீசன் 5 தமிழ்...களமிறங்க போகும் போட்டியாளர்களின் முதல் பட்டியல் இது தானா ?
சென்னை : அதிகமான டிவி ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். தமிழில் மட்டுமல்ல இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் பிக்பாஸ் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிக் பிரதர் நிகழ்ச்சியின் மொழிபெயர்க்கப்பட்ட நிகழ்ச்சியாக இருந்தாலும், இந்தியாவில் மிகப் பெரிய வரவேற்பை இந்த நிகழ்ச்சி பெற்றுள்ளது.
பிக்பாஸ் தமிழ் முதல் சீசனில் ஆரவ்வும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகின் ராவும் வெற்றி பெற்றனர். இந்த ஆண்டு ஜனவரியில் நடந்த சீசன் 4 இறுதிப் போட்டியில் ஆரி முதல் பரிசையும், பாலாஜி இரண்டாவது பரிசையும் வென்றனர்.
கொரோனா காரணமாக பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி நடத்தப்படுமா என்ற சந்தேகம் கடந்த ஆண்டே எழுந்தது. இருந்தாலும் பல கட்டுப்பாடுகளுடனும், புதிய விதிகளுடனும் சீசன் 4 நிகழ்ச்சி வழக்கமாக துவங்கும் ஜுன் மாதத்திற்கு பதிலாக அக்டோபர் மாதம் துவங்கப்பட்டது. இந்த ஆண்டும் கொரோனா காரணமாக தாமதமாகவே நிகழ்ச்சி துவங்கப்பட உள்ளது.

அசத்தல் ப்ரோமோ
ஆனால் கொரோனா மூன்றாம் அலை எந்த நேரமும் துவங்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை, பிக்பாஸ் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியிடாமல் இருந்ததால் இந்த ஆண்டும் நிகழ்ச்சி நடக்குமா என பேச்சு எழுந்தது. ஆனால் பிக்பாஸ் சீசன் 5 துவங்க உள்ளதை உறுதி செய்யும் வகையில் சமீபத்தில் அடுத்தடுத்து 2 ப்ரோமோக்கள் வெளியிடப்பட்டது.

லோகோ வெளியீடு
முன்னதாக கலர்ஃபுல்லான புதிய லோகோவும் வெளியிடப்பட்டது. முந்தைய நான்கு சீசன்களைப் போல் இந்த சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்க உள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதோடு போட்டிகளின் விதிமுறைகளும் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மிலா முதல் போட்டியாளர்
அக்டோபர் முதல் வாரத்தில் பிக்பாஸ் சீசன் 5 துவங்கப்படலாம் என கூறப்படுவதால் போட்டியாளர்கள் பட்டியல் என பல பிரபலங்களை உள்ளடக்கி தினம் ஒரு பட்டியல் சோஷியல் மீடியாக்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகிறது. இந்நிலையில் 2 நாட்களுக்கு முன் நடிகை ஷகீலாவின் வளர்ப்பு மகள் மிலா முதல் கன்ஃபார்ம் போட்டியாளராக பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் செல்வதாக ஒரு தகவல் வெளியானது.

உறுதியான பட்டியல்
லேட்டஸ்ட் தகவலாக, பிக்பாஸ் சீசன் 5 போட்டியில் போட்டியாளர்களாக பங்கேற்க உள்ள ஏறக்குறைய உறுதியாகி விட்ட பிரபலங்கள் சிலரின் பெயர்கள் வெளியாகி உள்ளது. தற்போது வெளியாகி உள்ள பட்டியலில் மிலா, சந்தோஷ் பிரதாப், பவானி ரெட்டி, பிரதைனி சர்வா, கோபிநாத் ரவி, சூசன் ஜார்ஜ் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

விரைவில் அறிவிப்பு
இவர்கள் அனைவரும் தெரிந்த முகங்கள் தான் என சிலரும், இவர்களில் யாரும் தமிழ் இல்லையா எனவும் கருத்து கூறி வருகின்றனர். சூசன் மற்றும் மிலா கண்டிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் உறுதியான போட்டியாளர்கள் என கூறப்படுகிறது. அதனால் விரைவில் அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவங்களும் இருக்காங்களா
பிக்பாஸ் 5 சீசனில் லட்சுமி ராமகிருஷ்ணன், ரம்யா கிருஷ்ணன், வடிவுக்கரசி, குக் வித் கோமாளி கனி, சுனிதா, பாபா பாஸ்கர் உள்ளிட்டோரும் போட்டியாளர்களாக பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் லட்சுமி ராமகிருஷ்ணன் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

என் பெயரை பயன்படுத்தாதீங்க
ட்விட்டரில் லட்சுமி ராமகிருஷ்ணன் தனது பதிவில், சமீபத்தில் வெளியான பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் பெயரில் எனது பெயரும் இருப்பதை பார்த்தேன். இது அதிர்ச்சியாக உள்ளது. நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. அதனால் இனி பிக்பாஸ் போட்டியாளர்கள் பட்டியலில் யாரும் எனது பெயரை பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











