அதிரடிக்கு தயாராகும் பாக்யா...வசமாக சிக்கும் கோபி...அடுத்த ட்விஸ்ட் இது தானா?

சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்யலட்சுமி சீரியல் அடுத்தடுத்த திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில் முக்கியமான ட்விஸ்ட் இனி மேல் தான் நடக்க போகிறதாம்.

Recommended Video

Baakiyalakshmi கிட்ட வசமாக சிக்கும் Gopi | Serial Updates with Akshu|Filmibeat Tamil

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் பாக்யலட்சுமி சீரியலும் ஒன்று. குடும்ப தலைவிகள் கொண்டாடும் சீரியலாக இது இருந்து வருகிறது. ஆரம்பத்தில் குடும்ப தலைவிகள் படும் கஷ்டங்களை சொல்லி பெண்களின் மனங்களை கவர்ந்த பாக்யலட்சுமி சீரியல், பிறகு போக போக பெண்களுக்கு தன்னம்பிக்கை கொடுப்பதாக மாறி விட்டது.

அடுத்து என்ன நடக்கும்

அடுத்து என்ன நடக்கும்

பாக்யலட்சுமி சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணம் பாக்யா கேரக்டர் மட்டுமல்ல, அவரின் கணவராக வரும் கோபி கேரக்டரும் தான். பாக்யாவின் கணவரான கோபி, பாக்யாவை ஏமாற்றி விட்டு, ராதிகாவை திருமணம் செய்ய முயற்சி செய்து வருகிறார். கோபி - ராதிகாவின் உறவு பற்றி தெரிந்த கோபியின் அப்பா ராமமூர்த்தி, பக்கவாதத்தால் பாதிக்கப்படுகிறார். இப்போது கோபி - ராதிகா கல்யாணம் நடக்குமா, கோபி சிக்குவாரா என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பாக்யா விடும் சவால்

பாக்யா விடும் சவால்

பாக்யாவின் சமையலால் பிரச்சனை மட்டுமே வருவதாக சொல்லி, அவரை சமையல் செய்யக் கூடாது என கன்டிஷனாக சொல்லி விட்டார். ஆனால் பாக்யா மீது தவறு இல்லை என நிரூபிக்கவும், அவரது சமையல் தொழிலை மீண்டும் தொடங்கவும் பாக்யாவிற்கு ஐடியா கொடுக்கிறார் எழில். இதன்படி ஒரு மணி நேரத்தில் 100 வகையான சமையல் அயிட்டங்களை செய்து காட்டுவதாக சவால் விட்டு, விளம்பரம் கொடுக்கிறார் பாக்யா.

விறுவிறுப்படையும் சீரியல்

விறுவிறுப்படையும் சீரியல்

அவர் எப்படி ஒரு மணி நேரத்தில் 100 வகையான உணவுகளை தயாரிக்கிறார் என்பதை கவர் செய்ய மீடியாக்களும் வருகின்றன. ஆனால் கோபியோ பாக்யாவால் முடியாது...முடியாது என்று சொல்கிறார். அதே சமயம் நம்பிக்கையுடன் களமிறங்கும் பாக்யா சொன்னபடியே ஒரு மணி நேரத்தில் 100 அயிட்டங்களை செய்து அசத்துகிறார். இதனால் அவரது சமையல் தொழிலும் சூடுபிடிக்க துவங்குகிறது. இது தான் இந்த வாரம் பாக்யலட்சுமி சீரியலில் நடக்க போகிறது. இதற்கான ப்ரோமோவும் வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த ட்விஸ்ட் இது தானா

அடுத்த ட்விஸ்ட் இது தானா

இதில் அடுத்து நடக்க போகும் ட்விஸ்ட் என்னவென்றால், பாக்யா, கோபியின் அறையில் தூங்கி வரும் நிலையில் இரவு நேரத்தில் கோபிக்கு போன் செய்கிறார் ராதிகா. ஆனால் கோபி நன்றாக தூங்கிக் கொண்டிருந்ததால், பாக்யா போனை எடுத்து பேசுகிறார். கோபியின் போனை எடுத்து பாக்யா பேசுவதை கேட்டு ஷாக் ஆகும் ராதிகா, அதை பாக்யாவிடமே கேட்டும் விடுகிறார். இதில் பாக்யா, ராதிகா இருவரிடமும் கோபி எப்படி சிக்க போகிறார், அதை சமாளிப்பாரா என்பது தான் இனி வர போகும் ட்விஸ்டாம்.

ஆஹா செமயா இருக்கும் போலவே

ஆஹா செமயா இருக்கும் போலவே

நடுவில் சிறிது நாட்கள் டல் அடித்த பாக்யலட்சுமி சீரியல் மீண்டும் சூடுபிடிக்க துவங்கி விட்டது. இப்போதெல்லாம் இந்த சீரியலுக்கு தான் டிஆர்பி அதிகமாக உள்ளதாம். விரைவில் மீண்டும் பாக்யலட்சுமி, பாண்டியல் ஸ்டோர்ஸ் சீரியல்களின் மகாசங்கமம் நடக்க போவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். இதனால் சீரியல் இன்னும் சுவாரஸ்யமாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X