Bigg Boss 3 இன்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது இவர் தானாம்
சென்னை: இன்று இரவு பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து யார் வெளியேறப் போகிறார் என்பது தெரிந்துவிட்டது.
பிக் பாஸ் 3 நிகழ்ச்சி துவங்கி இன்றுடன் இரண்டு வாரம் ஆகின்றது. இந்நிலையில் ஒரு போட்டியாளரை இன்று வெளியேற்றுவார்கள். அந்த போட்டியாளர் குறித்த ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் ஹாஸன் வழக்கம் போன்று சஸ்பென்ஸ் வைத்து பேசுகிறார்.
கமல்
ப்ரொமோ வீடியோவில் கமல் ஹாஸன் தன் கையில் உள்ள கார்டில் இருக்கும் பெயரை பார்வையாளர்களிடம் காட்டிவிட்டு போட்டியாளர்களை பார்த்து உங்களுக்கும் காட்டட்டுமா என்று கேட்கிறார். அபிராமி முகத்தில் ஈயாடவில்லை. சாக்ஷி எதையோ பறிகொடுத்தது போன்று அமர்ந்திருக்கிறார்.
பாத்திமா பாபு
பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து இன்று இரவு வெளியேறப் போகும் போட்டியாளர் பாத்திமா பாபு என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள் நெட்டிசன்கள். 'மக்களாகிய நாம் வெளியேற்றப் போகும் அந்த போட்டியாளர் யார்??' என்று தலைப்பு போட்டு ப்ரொமோ வீடியோ வெளியிட்டுள்ளதை பார்த்து நெட்டிசன்கள் கடுப்பாகியுள்ளனர். மக்கள் பேச்சையே இந்த பிக் பாஸ் கேட்பது இல்லை என்பதால் நெட்டிசன்கள் கோபம் அடைந்துள்ளனர்.
சாக்ஷி
பார்வையாளர்கள் சாக்ஷி வெளியேற்றப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். தற்போது தான் கவின், சாக்ஷி இடையே காதல் உருவாகியிருப்பது போன்று காட்டியுள்ளனர். அந்த காதலை பில்ட்அப் செய்து இன்னும் பல வாரத்திற்கு ஓட்டலாம். அப்படி இருக்கும் போது சாக்ஷியை எப்படி வெளியேற்றுவார் பிக் பாஸ்? என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
மக்கள்
ஏதோ மக்கள் சொல்வதை அப்படியே கேட்டு போட்டியாளரை வெளியேற்றுவது போன்று நடிக்கிறார் பிக் பாஸ். அவர் முதல் சீசனில் இருந்தே மக்களின் ஓட்டுகளை டம்மியாக்கிவிட்டு அவர் இஷ்டத்திற்கு தான் போட்டியாளரை வெளியே அனுப்புகிறார். முதல் சீசனில் சொல்லத் துவங்கிய பொய்யை இன்னும் சொல்லிக் கொண்டிருக்கிறார் பிக் பாஸ். மக்கள், மக்கள் என்று சொல்வதை முதலில் நிறுத்துங்க பிக் பாஸ் என்கிறார்கள் பார்வையாளர்கள்.


Click it and Unblock the Notifications











