Just In
- 3 min ago
துபாயில் ஷூட்டிங்.. விட்டுப் பிரிய மனமில்லாமல்.. விடை கொடுத்த கீர்த்தி சுரேஷ்.. யாருக்கு தெரியுமா?
- 21 min ago
'இப்போதைய தேவை அதுதான்..' 140 நாட்களுக்குப் பிறகு வீட்டுக்கு வரும் ராகிணி.. தந்தை மகிழ்ச்சி!
- 33 min ago
டெல்லியில் உள்ள தெருவுக்கு.. மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் பெயர்.. கவுன்சிலர் தகவல்!
- 38 min ago
லூசிஃபர் ரீமேக்.. நயன்தாரா நடிக்கிறாரா இல்லையா? என்ன சொல்கிறார் இயக்குனர் மோகன் ராஜா?
Don't Miss!
- Automobiles
ராயல்என்பீல்டு ஹிமாலயனை வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? அப்போ கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க, புதிய நிறத்தில் வாங்கிடலாம்
- News
கோவிட் தடுப்பூசி: இந்தியாவின் பலம் கண்டு ஓடிவரும் தெற்காசிய நாடுகள் - விழி பிதுங்கும் சீனா
- Sports
இந்தியாவோட மோத தயாராகும் இங்கிலாந்து அணி... பர்ஸ்ட் 2 போட்டிக்கான அணி அறிவிப்பு
- Lifestyle
வாஸ்து சாஸ்திரத்தின் படி விரைவில் திருமணமாக உங்க வீட்டில் இந்த மாற்றங்களை கண்டிப்பாக செய்யணுமாம்...!
- Finance
வாரத்தின் இறுதி நாளில் செம சர்பிரைஸ் கொடுத்த தங்கம் விலை.. இன்னும் குறையுமா? எவ்வளவு குறையும்?
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Thirumanam Serial: புருஷனையே புருஷனா நடிக்க கெஞ்சும் ஜனனியின் அவலம்!
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியலின் சந்தோஷை கல்யாணம் செய்துக்கிட்ட ஜனனி மனதால் ரொம்பவே கஷ்டப்படறா. ஆனால், யாரிடமும் இதை சொல்ல முடியவில்லை ஜனனியால்.
ஆசை ஆசையாய் ஜனனியின் அப்பா, ஜனனிக்கு, சந்தோஷுக்கும் கல்யாணம் செய்து வைக்கிறார். ஆனால், சந்தோஷ, சக்தின்னு ஒரு பெண்ணை காதலிச்சதால் அவனால், ஜனனியுடன் வாழ முடியலை, வெளிநாட்டுக்கு போயிருக்கும் சக்தி திரும்ப வருவாள். அவளுடன்தான் தான் வாழ விரும்புவதாகவும், காதலித்த அவளுக்கு துரோகம் செய்ய முடியாது என்றும் ஜனனியிடம் சந்தோஷ் சொல்றான்.
அதனால்,சந்தோஷ் ஜனனியிடம் இருவரும் டிவோர்ஸ் பண்ணிடலாம்னு சொல்ல, ஜனனிக்கு மனமில்லை என்றாலும் சரின்னு சொல்லிடறா. இப்போது ரெண்டு பேர் வீட்டுக்கும் தெரியாமல் வக்கீல் கோர்ட் என்று அலைந்துகொண்டு இருக்கிறார்கள் இருவரும்.
Agni natchathiram serial: வேணாம் வேணாம்னு தள்ளிப் போறவனை வேணும் வேணும்னு சொல்றீங்களே!

ஜனனி மருமகளாகாவே
சந்தோஷ் தவிர எல்லார் பார்வைக்கும் ஜனனி அந்த வீட்டு மருமகளாகாவே வாழ்ந்து வருகிறாள், ஜனனிக்கு சந்தோஷை ரொம்ப பிடிச்சு போகுது. ஒரு கட்டத்தில் சந்தோஷுக்கும் ஜனனியைப் பிடித்துப் போகும் சமயத்தில்தான் வெளிநாட்டில் இருந்து சக்தி வந்துடறா. எப்போதும் சந்தோஷ் தன்னுடனே இருக்க வேண்டும் என்று அடிக்கடி போன் செய்து அழைச்சுக்கறா.

ஜனனியிடமே சந்தோஷை
ஒரு நாள் ஜனனியிடமே சந்தோஷை எனக்கு சீக்கிரமே விட்டுக் குடுத்துட்டு, நீ உன் வீட்டுக்கு போயிடுன்னு சொல்ல ஜனனியும் சக்தியிடம் சரின்னு சொல்லிடறா. தங்கையின் நிச்சயதார்த்தத்தை சாக்கா வச்சு முழுசுமா அப்பா வீட்டுக்கே போயிடலாம்னு முடிவு பண்ணி கிளம்பிடறா. சந்தோஷ் என்ன என்ன என்று கேட்டும் பதிலில்லை. நடு இரவில் சக்திக்கு உடம்பு சரியில்லை என்று சந்தோஷ் அவளைப் பார்க்க கிளம்ப இருவருக்குள்ளும் சின்ன வாக்கு வாதம்.

அப்பா ஜனனி
மாப்பிள்ளை நடு ராத்திரி மகளுடன் வாக்கு வாதம் செய்து வெளியே கிளம்புவதை பார்த்த அப்பாவுக்கு இரண்டாவது முறையாக ஹார்ட் அட்டாக் வந்துருது. கண் திறந்து முதலில் பேசிய வார்த்தை ஜனனி நீ சந்தோஷமா இருக்கியா என்பதுதான். இப்போதுதான் ஜனனிக்கு புரியுது, தனது வாழ்க்கை பத்தி நினைச்சு அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமப் போச்சுன்னு. அப்பா நல்லா இருக்கணும்னா கொஞ்ச நாளைக்கு சந்தோஷை விட்டு பிரிய கூடாதுன்னு.

நீங்கள் புருஷனா
உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும்னு சொல்லி சந்தோஷை அழைச்சுக்கிட்டு போன ஜனனி, என் அப்பத்தான் எனக்கு முக்கியம். அதனால ,என் அப்பா சரியாகி நார்மலாகற வரைக்கும் எனக்கு புருஷனா நடிக்கிறீங்களான்னு கேட்கறா அழுதுகிட்டே..என்ன ஜனனி இப்படி கேட்கறீங்க. மாமாவுக்கு நல்லாகணும்னு எனக்கு மட்டும் நினைவு இருக்காதான்னு சொல்றான் சந்தோஷ்.

சக்தி ஜனனி
சக்திகிட்டே பேசறேன்..என்னையும் அவங்க கிட்ட அழைச்சுட்டு போங்கன்னு சொல்றா.ரெண்டு பேரும் சக்தியைப் பார்க்க போறாங்க. சக்தி முகம் மாறிப்போகுது. சக்திகிட்டயும், ஜனனி சந்தோஷ்கிட்ட பேசின மாதிரி சந்தோஷை கொஞ்ச நாள் விட்டுக் கொடுங்கன்னு கேட்கறா.சக்தி யோசிக்க, வேணும்னா உங்க காலில் கூட விழறேன்னு விழப்போக, சந்தோஷுக்கு கோவம் வந்துருது.. ஜனனியை தூக்கிவிட்டு, அவளது கையைப் பிடிச்சு அழைச்சுக்கிட்டு வந்துடறான்.
சக்தியின் தோழி, சந்தோஷ் கொஞ்சம் கொஞ்சமா ஜனனியின் பக்கம் சாய்வதாக சக்தியிடம் சொல்லி அவளை குழப்பி விடறா.இது அவலமாக இல்லை?