For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஜாக்குலின் காலை.. லபக்கென்று கவ்விய ஜெல்லி மீன்.. கடிச்சிருச்சாமே!

  |

  சென்னை: கடலில் மீனிடம் கடி வாங்கிய ஜாக்லினின் லேட்டஸ்ட் வீடியோஸ் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

  அதுவும் இந்த வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் மீனுக்கு என்னாச்சு என்று தெரியவில்லையே. கண்டிப்பா அது செத்துப் போயிருக்கும் என்று போடும் மீம்ஸ்க்களும் தற்போது வேற லெவலில் பரவி வருகிறது.

  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தேன்மொழி பிஏ சீரியலில் கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருக்கும் ஜாக்குலின் ஒரு தொகுப்பாளராக சின்னத்திரையை கலக்கிக் கொண்டிருப்பவர் தான்.

  அழகு செல்லம்

  அழகு செல்லம்

  இவரது அழகான பேச்சால் பலரைக் கவர்ந்த இழுத்தாலும் இவரைப் பற்றி யார் என்னை கலாய்த்தாலும் கண்டுகொள்ளாத இவரது சிரித்த முகத்தை பார்த்து இவர் பலருக்கும் பிடித்தவராக மாறிவிட்டார். இந்த சீரியலுக்கு வருவதற்கு முன்பு இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதுவுமில்லாமல் விருது வழங்கும் நிகழ்ச்சிகளையும் இவர்தான் தொகுத்து வழங்கியிருக்கிறார்

  நல்ல கலாய்

  நல்ல கலாய்

  அந்த நிலையில் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களும் இவரை வைத்துதான் காமெடி பண்ணி கொண்டு இருப்பார்கள் .ஆனால் அதையெல்லாம் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் இவர் தனது வேலையில் தான் கவனமாக இருந்து வருவார். நம்மள பத்தி கலாய்ச்சு ஒருவர் பாப்புலர் ஆனால் அது நமக்கும் சந்தோசம்தான் என்று இவர் அசால்டாக அதை தட்டி விட்டு சென்று விடுவார் .

  அமைதி - சிரிப்பு

  அமைதி - சிரிப்பு

  வடிவேலு பாணியில் வடிவேலுவை அடித்து பலர் பிரபலமானது போலதான் இவரையும் கலாய்த்து பலர் பிரபலமாகி இருக்கிறார்கள் .ஆனாலும் இவர் அடுத்தவர்களை கலாய்ப்பது போதாது என்று இவரே இவர் கலாய்த்து கொள்வார். அதுவுமில்லாமல் இவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் சீரியலில் கூட இவரது உண்மையான கேரக்டரை போலவே இவரது கேரக்டர் இருப்பதால் அதிலும் தனது திறமையை நிரூபித்து சீரியல் மூலமாகவும் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி விட்டார்.

  இப்ப பிசி

  இப்ப பிசி

  சீரியல்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் கிடைக்கும் நேரங்களில் ஹாயாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் இவர் அதனையும் தற்போது ஒரு யூடியூப் சேனல் ஓபன் பண்ணி அதில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார் .அந்த மாதிரிதான் தற்போது இவர் கோவாவிற்கு குதூகலமாக சென்று வம்பை விலை கொடுத்து வாங்கிய ஒரு வீடியோ தான் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

  மீனிடம் கடி

  மீனிடம் கடி

  இவர் கோவாவிற்கு சென்றது முதல் ஷாப்பிங் செய்தது ஹோட்டலில் தங்கியது என அந்த வீடியோவில் அழகான மோமெண்டும் பதிவு செய்திருந்தார் .ஆனால் இறுதியாக தான் பெரிய ட்விஸ்ட் வைத்து கண்ணீரோடு வீடியோவை முடித்திருக்கிறார். கோவா போனா சூப்பராக குளியல் போட்டு கலக்கலா கவர்ச்சி உடையில் போஸ் கொடுப்பார் என்று எதிர்பார்த்த அவருடைய ரசிகர்கள் இவரை திடீரென்று ஜெல்லிமீன் இவரது காலை லபக்கென்று கவ்வியதும் அதிர்ந்து போய் விட்டார்கள்.

  பாராசூட்டில் பறந்தபடி

  பாராசூட்டில் பறந்தபடி

  அதுவும் பாராசூட்டில் பறந்தபடி தண்ணிக்குள்ளே இறங்கியதால் இந்த வீடியோவை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் ஒரு நிமிடம் ஷாக் ஆகி விட்டனர் .ஆனால் காற்றில் மீண்டும் அவர் மேலே வரும்போது அவரது காலை அந்த மீன் கவ்வி இருக்கும்போதுதான் சிலர் அச்சச்சோ என்று கூறியிருந்தனர் .ஆனால் இதனை வைத்தும் நெட்டிசன்கள் ஜாக்லினை வறுத்தெடுத்து வருகின்றனர் .

  அந்த வேதனை இருக்கே வேதனை

  அந்த வேதனை இருக்கே வேதனை

  அவர் வேதனையோடு இந்த வீடியோவின் கடைசியில் அந்த மீன் எனது காலை கடித்ததால் ரொம்ப வழியில் கஷ்டப்பட்டு கோவாவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஹோட்டல்களும் பார்களும் இருக்கிறதே தவிர பார்மசி இல்லாமல் நான் அலஞ்ஜி டேப்லெட் வாங்கி போட்டு கொண்டேன் என்று கூறியிருக்கிறார் .ஆனால் பலர் உங்களை கடிச்ச மீனுக்கு என்ன ஆச்சு செத்துப் போய் விட்டதா என்று தான் கேட்டு வருகிறார்கள்.

  English summary
  Jaqueline Lydia visits Goa and released a video on it.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X