நாஞ்சிலுடன் நெருக்கமா இருந்துட்டே இன்னொரு ஆணுடனும் தொடர்பா? VJ வைஷு குறித்து திருநங்கை ஜாஸ்மின் ஓபன்
சென்னை: இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்தே பரபரப்பாக பேசப்படும் விஷயங்களில் ஒன்று, நாஞ்சில் விஜயன் - விஜே வைஷு விஷயம்தான். இதில் நாஞ்சில் விஜயனும் தானும் காதலித்ததாகவும் பலமுறை இருவரும் தனிமையில் நெருக்கமாக இருந்துள்ளோம் என்று எல்லாம் தெரிவித்தார் வி.ஜே. வைஷு. இப்படி இருக்கையில் இந்த பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என நாஞ்சிலும் அவரது மனைவியும் வீடியோ வெளியிட்டிருந்தார்கள்.
அதையடுத்து திருநங்கையும் சின்னத்திரை நடிகையுமான வி.ஜே. வைஷு தனது தரப்பில் இருந்து மற்றொரு வீடியோ வெளியிட்டிருந்தார். இப்படி இருக்கையில் இந்த விவகாரம் தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பேசிய திருநங்கை ஜாஸ்மின் இது தொடர்பாக ஏரோவ் தமிழ் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பல திடுக்கிடும் விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.
அதாவது, வி.ஜே. வைஷுவும் நாஞ்சில் விஜயனும் இணைந்து சில விழாக்களில் பார்ட்டிகளில் கலந்து கொண்டதை நானே பார்த்திருக்கிறேன். எனக்குத் தெரிந்த அளவில் இருவரும் பிரதர், சிஸ்டர் என்றுதான் பேசிப் பழகி வந்தார்கள். அப்படி இருக்கையில் இவர்களுக்கு இடையில் இருந்த இந்த உறவு எப்போது காதலாக அதுவும் இருவரும் உடலுறவு கொள்ளும் அளவுக்கு மாறியது என்று எனக்குத் தெரியவில்லை.

பிக் பாஸ் டார்கெட்: இந்த விஷயத்தில் நாஞ்சில் விஜயன் தரப்பில் நியாயம் இருப்பதாகத்தான் நான் நினைக்கிறேன். காரணம் வி.ஜே. வைஷு கடந்த சில ஆண்டுகளாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முயற்சிகளை எடுத்து வருகிறார். இதன் காரணமாக அவர் கடந்த சில ஆண்டுகளாக தனது பிக் பாஸ் சீசன் நெருங்கும்போது பேட்டிகள் கொடுப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இப்போது நாஞ்சில் விஜயன் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
நெருக்கமாக ஒரு புகைப்படம்: நாஞ்சில் விஜயனுடன் அவர் காதலில் இருந்தார் என்று சொல்லும் காலகட்டத்தில் அவர் மற்றொரு ஆணுடனும் காதலில் இருந்தார். அதற்கான ஆடியோ ஆதாரம் என்னிடத்தில் உள்ளது. என்று ஆடியோ ஆதாரங்களையும் போட்டுக் காட்டுகிறார். நாஞ்சில் மீது அவர் கூறும் குற்றச்சாட்டு என்ன? காதலித்தார், இருவரும் உடலுறவு வைத்துக் கொண்டோம் என்பதுதானே. ஆனால் அவர் ஆதாரமாக காட்டும் புகைப்படங்களைப் பார்த்தால் அப்படியான குற்றச்சாட்டுக்கு ஏதுவான ஆதாரமாக இல்லையே? காதல் வாழ்க்கை என்று கூறுகிறார்கள். ஆனால் அவர் ஐ லவ் யூ சொன்னது தொடர்பான ஒரு வாட்ஸ் ஆப் சாட் கூடவா இல்லை? நெருக்கமான தருணத்தில் எடுத்த ஒரு புகைப்படம் கூடவா இல்லை? தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள பிக் பாஸில் கலந்து கொள்ள தன்னை ஒரு பரபரப்புக்குரியவராக தன்னை காட்டிக் கொள்ளவே இப்படி நடந்து வருகிறார்" என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











