»   »  அனுமனுக்காக ராமராக மாறிய கிருஷ்ணர்... இது சன்டிவியின் ஜெய் ஹனுமான்

அனுமனுக்காக ராமராக மாறிய கிருஷ்ணர்... இது சன்டிவியின் ஜெய் ஹனுமான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆஞ்சநேயர் சிரஞ்சீவியாக இருக்கிறார் என்றும் ராமநாமம் ஒலிக்கும் இடங்களில் எல்லாம் அவர் எழுந்தருள்வார் என்றும் இன்றைக்கும் நம்பிக்கை உலா வருகிறது. இந்த நம்பிக்கையை உண்மையாக்கும் வகையில் டிவி சேனல்களில் ஆஞ்சநேயரைப் பற்றிய புராண தொடர்கள் அதிக அளவில் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளன.

சன் டிவியில் மகாபாரதம் தொடர் முடிவடைந்து விட்ட நிலையில் தற்போது ஜெய் ஹனுமான் என்ற புராண தொடர் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளது. இதில் ஆஞ்சநேயரின் மகிமையை பகவான் கிருஷ்ணன் எடுத்துக்கூறுவது போல கதை தொடங்குகிறது.

கிருஷ்ணன் அழைத்தும் வராத அனுமான் பகவான் ராமர் அழைக்கிறார் என்று பட்சிராஜா கருடன் வந்து கூறிய கண்களில் நீர் பெறுக துவாரகைக்கு வருகிறார். அனுமனுக்காக பகவான் கிருஷ்ணர் ராமராக உருமாறி நிற்கிறார்.

Jay Hanuman Telecast on Sun TV

ஆஞ்சநேயரைப் பற்றி பல சுவாரஸ்ய கதைகள் இருந்தாலும் சனீஸ்வரனுக்கும் ஆஞ்சநேயருக்கும் உள்ள தொடர்பை தெரிந்து கொள்வோம்.

ஆஞ்சநேயர் மூல நட்சத்திரத்தில் அவதரித்தவர். உலகில் உள்ள உயிர்கள் அனைத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்தும் அதிகாரம் பெற்ற சனீஸ்வர பகவான், ஆஞ்சநேயர் மீதும் தன் ஆதிக்கத்தை ஏழரை ஆண்டு செலுத்த வேண்டும் என்று முடிவு செய்தார்.
தன் ஜென்ம விதிப்படி தன்னை சனீஸ்வரன் பிடிக்க வரவுள்ளது ஆஞ்சநேயருக்கு தெரிந்தது.

ராம பக்தனான அனுமன், ராம பூஜையை முடித்துவிட்டு, தன் அரண்மனை வாசலுக்கு வந்து கொண்டிருந்தார். வாசலில் சனீஸ்வரன் மறைந்திருப்பதை தன் ஞானத்தால் அறிந்த, அஞ்சனை மைந்தன், அரண்மனை வாசல் வரை வாலை வளரச் செய்தார்.
ஆஞ்சநேயரின் வாலைக் கண்டதும் உற்சாகமடைந்த சனீஸ்வரன், வாலைப் பிடித்து தோளில் அமர்ந்து கொள்வோம் என்று நினைத்து வாலில் அமர்ந்து கொண்டார்.

வாலில் இருந்த சனீஸ்வரனை விரட்ட வேண்டும் என்று நினைத்த ஆஞ்சநேயர், ஸ்ரீ ராமனை நினைத்து உற்சாகமாக கீர்த்தனைகள் பாடத் தொடங்கினார். இங்கும் அங்கும் குதித்துப் பாடி தன் உற்சாகத்தை வெளிப்படுத்தினார். விண்ணையும், மண்ணையும் தன் விஸ்வரூபத்தால் அளந்த ஆஞ்சநேயரின் வலிமை நேரம் செல்லச் செல்ல கூடியது.

அதே நேரத்தில் வாலில் இருந்த சனீஸ்வரனுக்கு உடல் வலி அதிகமானது. வலி பொறுக்காத சனீஸ்வரன், ஆஞ்சநேயா, நீ எப்போது உன் ஆட்டத்தை நிறுத்துவாய் என்று கேட்டார்.

நீங்கள் என்னை ஏழரை ஆண்டுகள் பிடிக்கப்போவதாக சொன்னீர்கள். அதனால், அந்தக் காலம் வரை நான் ஸ்ரீராமனை நினைத்து துதித்து, குதித்தாடுவேன் என்றார்.

ஆஞ்சநேயரின் பதிலால் திணறிப்போன சனீஸ்வரன், சரி... உன்னை விட்டு விலகுகிறேன் என்று கூறி, வாலை விட்டு இறங்கினார்.

அப்போது சனீஸ்வரனிடம் ஆஞ்சநேயர் ஒரு வரம்கேட்டார், "உங்களது ஆட்சி மனிதர்கள் மீது இருக்கும் காலத்தில், அதீத துன்பத்தால் என்னை வந்து சரணடைபவர்களுக்கு நீங்கள் அருள் செய்ய வேண்டும். அவர்களுக்கு கடும் துன்பங்கள் கொடுக்கக்கூடாது என்று சனீஸ்வரனிடம் வேண்டினார்.

ஆஞ்சநேயர் கேட்டுக் கொண்டதற்கு சனீஸ்வர பகவான் சம்மதித்து, அருள் செய்வதாக கூறினார். அதனால், ஏழரை சனி, அஷ்டமச் சனி உட்பட சனீஸ்வர பகவானின் எந்த ஒரு பிரச்னையால் வாடும் நபர்களாக இருந்தாலும், அவர்கள் ஆஞ்சநேயரை சரணடைந்தால் துன்பங்கள் விலகி ஓடும்.

இதுபோன்ற பல சுவாரஸ்யமான கதைகள் ஆஞ்சநேயரை பற்றிய தொடரில் தெரிந்து கொள்ளலாம்.

English summary
Sun TV Telecase new devotional Serial Jai Hanuman.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil