»   »  இறுதிச்சுற்று படத்தைக் கைப்பற்றிய ஜெயா டிவி

இறுதிச்சுற்று படத்தைக் கைப்பற்றிய ஜெயா டிவி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மாதவன் நடித்துள்ள இறுதிச்சுற்று படத்தின் சேட்டிலைட் உரிமையை ஜெயாடிவி கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாதவன், ரித்திகா நடித்த படம் இறுதிச்சுற்று. கடந்த மாதம் வெளியான இந்த படம் ரசிகர்களிடமும், திரைப்பட விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டை பெற்றதோடு வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.


ஒரு பெண் இயக்குனர் துணிச்சலாக பாக்ஸிங் துறையில் உள்ள பாலியல் அத்துமீறல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறார், கச்சிதமான திரைக்கதை என்று பாராட்டப்பட்டது.


Jaya TV buys satellite rights for Irudhi Suttru

இறுதிச்சுற்று படத்தை தெலுங்கிலும் சுதா இயக்குகிறார். வெங்கடேஷ் நடிக்க ரித்திகா சிங் தமிழில் செய்த அதே வேடத்தை தெலுங்கிலும் செய்கிறார். ரித்திகா சிங் உண்மையில் ஒரு பாக்ஸர் என்பதும் இறுதிச்சுற்றுக்கு கூடுதல் பலமாக அமைந்தது.


உண்மையில் இறுதிச்சுற்று படத்தின் கதை கற்பனை அல்ல. சுதா தனது கற்பனையில் எழுதியதும் அல்ல. அது தமிழகத்தைச் சேர்ந்த துளசி ஹெலன் என்ற பெண்ணின் கதை. இவர் பல போட்டிகளில் ரித்திகா சிங்கையே தோற்கடித்துள்ளார்.


விளையாட்டுதுறையில் நிலவும் பாலியல் சுரண்டலை கேள்விகேட்டதால் பல போட்டிகளில் இவர் கலந்து கொள்ள முடியாமல் போனதுடன், இன்னும் வெளிச்சத்துக்கு வராமல் உள்ளார்.


இறுதிச்சுற்று படத்தை எடுக்கும் முன் சுதா துளசியை சந்தித்து அவரது கதையை கேட்டுள்ளார். பிறகு அதே கதையை ரித்திகா சிங்கை வைத்து எடுத்துள்ளார்.
உண்மையில் ரித்திகா சிங்கை பல போட்டிகளில் தோற்கடித்த துளசியின் கதையிது.


இறுதிச்சுற்று படத்தின் வெற்றிக்கு பிறகு இந்த படத்தில் சேட்டிலைட் உரிமைத்தைப் பெற பல டிவி சேனல்கள் போட்டி போட்டன. சன்டிவி, விஜய் டிவி ஆகிய சேனல்கள் பல கோடி ரூபாய் வரை பேரம் பேசிய நிலையில் இறுதிச்சுற்று படத்தை சத்தமில்லாம் கைப்பற்றியுள்ளது ஜெயா டிவி.


சமீபத்தில் வெளியான பல புதிய படங்களில் சேட்டிலைட் உரிமைகளை ஜெயாடிவி கைப்பற்றியுள்ளது. பாகுபலி, என்னையறிந்தால், புலி உள்ளிட்ட பல படங்களை தன் வசம் வைத்துள்ள ஜெயா டிவி தற்போது, மாதவனின் இறுதிச்சுற்று படத்தையும் கைப்பற்றியுள்ளது.

English summary
Director Sudha Kongara's Irudhi Suttru might be still running successfully in theatres, but Jaya TV has already acquired the satellite rights for the film. The film is a bilingual (Saala Khadoos) and features Madhavan and Ritika Singh playing the lead. We hear that the channel has bought the film for a whopping amount.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil