கணவரால் தேவயானிக்கு பல கோடி கடன்.. ராஜகுமாரால் மொத்த பணமும் பேச்சு.. பிரபலம் சொன்ன தகவல்!

சென்னை: நடிகை தேவயானியின் கணவர், ராஜகுமாரன், 'இமயா நேச்சுரல்ஸ்' என்ற பெயரில் 100 சதவீதம் இயற்கை முறையில் அழகுசாதனப் பொருட்களை உருவாக்கி விற்பனை செய்து வருகிறார். அண்மையில், யூடியுப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தேவயானிக்கு தான் என் சப்போட் 100 நூறு சதவீதம் தேவை, எனக்கு அவங்க சப்போட் தேவையில்லை, அவங்களால் எனக்கு என்ன சப்போட் பண்ண முடியும். என்னுடைய வேலைக்கு அவங்களால் எந்த சப்போட்டும் பண்ண முடியாது என்று பேசி இருந்தார்

இதுகுறித்து, மூத்த பத்திரிக்கையாளர் வெங்கடேஷ் Madras Wing சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், ராஜகுமாரன் சொல்லும் ஹைலைட்டான காமெடியை இதுதான், என்னை நம்பி தான் தேவயானி இருக்கிறார். தேவயானியை நம்பி நான் இல்லை என்று சொல்வதை கேட்கும் போது, என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இதை காமெடியாக தான் எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழ் சினிமாவில் மிகவும் அழகான நடிகை தேவயானி, அழகுக்கேற்ற பண்பும் கொண்டவராக தான் தேவயானி இருக்கிறார்.

devayani rajakumaran
Photo Credit:

நடிகை தேவயானி: சூர்யவம்சம் திரைப்படம் தேவயானிக்காக ஓடிய திரைப்படம். அந்த திரைப்படத்தில் தான் உதவி இயக்குநராக இருந்தார் ராஜகுமாரன். அவர் செட்டில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார், அந்த நேரத்தில் தான் ராஜகுமாரன், அடிக்கடி தேவயானியிடம் பேசிக்கொண்டே இருப்பார். இதைப்பார்த்த தேவயானி அம்மா, இயக்குநர் விக்ரமிடம் தேவையில்லாமல் பேசிக்கொண்டே இருக்கிறார் என சொல்லிவிட, இயக்குநர் விக்ரம், ராஜகுமாரனை அழைத்து தேவையில்லாமல் பேசக்கூடாது என்று கூறியுள்ளார்.

காதல் திருமணம்: அதன் பிறகு தான் ராஜகுமாரனுக்கு படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அது அருமையான திரைகதை என்பதால் இதில், தேவயானி ஹீரோயினாக நடித்தால் நன்றாக இருக்கும் என தேவயானிடம் கதையை கூறுகிறார், அந்த கதை தேவயானிக்கு பிடித்து விட அந்த படத்தில் நடித்தார். நீ வருவாய் என திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதன் பின் மீண்டும் விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற படத்தை இயக்கினார். அந்த படத்தை, ராஜகுமாரன் தேவயானிக்காகவே எடுத்தார் ஆனால், படம் ஓடவே இல்லை. இதையடுத்துத்தான், தேவயானிக்கு ராஜகுமாரன் மீது காதல் வருகிறது. இந்த காதலுக்கு ஒட்டுமொத்த குடும்பமும் எதிர்ப்பு தெரிவிக்க, வேறு வழியே இல்லாமல் வீட்டை விட்டு ஓடி வந்து திருமணம் செய்து கொண்டார்.

கடன் சுமை: திருமணத்திற்கு பிறகு ராஜகுமாரனின் படம் எதுவும் வெளியே வராததால், காதலுடன் என்ற படத்தை முரளியை வைத்து எடுக்கிறார். மிகவும் ரிஸ்க் எடுத்து, வெளியில் கடனை வாங்கி அந்த படத்தை எடுத்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை. இதனால், மிகப்பெரிய கடன் சுமை தேவயானின் மீது விழுந்தது படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை. மொத்த கடன் சுமையும் தேவயானி மீது விழுந்ததால் வேறு வழியே இல்லாமல் சீரியலில் நடித்தார். கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் நடிக்க ஆரம்பித்தார். ராஜகுமாரனுக்கும் படங்களை இயக்குவதற்கான வாய்ப்பு வராததால் ஒட்டுமொத்த கடனையும் தேவயானி தான் அடைந்தார்.

ஏகப்பட்ட நஷ்டம்: அதோடு மட்டுமல்லாமல் ராஜகுமாரன், நான் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று அடம் பிடித்து திருமதி தமிழ் என்ற படத்தை சொந்த செலவில் எடுத்தார். இதன் மூலமாக தேவயானிக்கு ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டது. தற்போது வரைக்கும் அந்த குடும்பத்தை நன்றாக எடுத்து செல்வது தேவயானி தான் என பத்திரிக்கையாளர் வெங்கடேஷ் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X