மாதம்பட்டிக்கு நான் உயிர் கொடுத்தேன்.. அவர் என் வாழ்க்கையில் விளையாடிட்டு போய்ட்டாரு.. கிரிசில்டா ட்வீட்!
சென்னை: நடிகர் மற்றும் சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இத்தனைக்கும் மாதம்பட்டி தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலே இரண்டாவது திருமணம் செய்து கொண்டது குறித்த பேச்சு வேகமாக பரவியது.
இது இப்படி இருக்க, தான் 6 மாதங்கள் கர்ப்பமாக இருப்பதாக கிரிசல்டா தெரிவித்தது மேலும் அதிர்ச்சியை கொடுத்தது. மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கிவிட்டு, திருமணம் செய்துவிட்டு தற்போது தொடர்பை முற்றிலும் துண்டித்து விட்டார் என்று சமூக வலைதளங்களில் கூறியது மட்டும் இல்லாமல், சென்னை ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளித்தார். மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் எக்ஸ் பக்கத்தை டேக் செய்து, அப்பா எனக்கும் எனது குழந்தைக்கும் நியாயம் பெற்றுத் தாருங்கள் என்று பதிவிட்டிருந்தார்.

நெருக்கமான புகைப்படங்கள் - வீடியோ: இப்படி இருக்கையில் அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. முதலில் தங்களது திருமண புகைப்படங்களை பகிர்ந்த ஜாய் கிரிசில்டா அப்போது தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்தார். அதன் பின்னர் மாதம்பட்டி ரங்கராஜ் தனக்கு மிகவும் பிரியமாக அனுப்பிய வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்தார். இதைப் பார்த்ததும் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி. மேலும் அந்த வீடியோவுக்கு ஜாய் கிரிசல்டா " தன் குழந்தையை சுமந்த பெண்ணை ஏமாற்றக் கூடிய ஒரு ஆண் யாரையும் ஏமாற்றுவான்" என்று கேப்ஷன் இட்டிருந்தார். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

வாழ்க்கையில் விளையாடிய மாதம்பட்டி: ஜாய் கிரிசில்டா தனது சமூக வலைதள பக்கங்கள் மூலம் தனது தரப்பு நியாயத்தை எடுத்துக் கூறிக் கொண்டே உள்ளார். ஆனால் மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் இருந்தோ அவரது மனைவி தரப்பில் இருந்தோ எந்த விதமான பதிலும் இல்லாமல் உள்ளது. இப்படி இருக்கையில் மாதம்பட்டி ரங்கராஜ் உடன் தான் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை ஜாய் கிரிசில்டா பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. இந்த புகைப்படங்களுக்கு அவர் இட்டுள்ள கேப்ஷன் இணையவாசிகள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, "அவள் உயிர் கொடுத்தது ஒரு உறவுக்காக... அவன் ஆட பார்த்தது ஒரு விளையாட்டுக்காக." என்று பதிவிட்டுள்ளார். இவரது பதிவு ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. மேலும் அவருக்கு ஆதரவாகவும் இணையவாசிகள் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











