சிக்கலில் மாதம்பட்டி ரங்கராஜ்.. ஆதாரங்களை ஒப்படைத்த கிரிசல்ட்டா.. அடுத்து என்ன கைதா?
சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசல்ட்டாவின் பிரச்னை கடந்த சில வாரங்களாகவே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதில் மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால், ஜாய் கிரிசல்ட்டா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தது. மேலும், தான் கர்ப்பமாக இருக்கிறார் என்றும் தனது கர்ப்பத்திற்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் காரணம் என்றும், தனது குழந்தைக்கு அவர் பதில் சொல்ல வேண்டும் என்றும் புகாருக்கு பின்னர், செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இது மட்டும் இல்லாமல் மாதம்பட்டி ரங்கராஜ் உடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வீடியோக்கள், அதுவும் நெருக்கமான புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் தனக்கு மட்டும் அனுப்பிய பர்ஷனலான வீடியோக்கள் ஆகியவற்றைப் பகிர்ந்தும் வருகிறார். இது நாளுக்கு நாள் மதம்பட்டி ரங்கராஜ் விவகாரத்தை பூதாகரமாக மாற்றி வருகிறது. நெட்டிசன்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இணையத்தில் பதிவிட தொடங்கி விட்டார்கள். குறிப்பாக ஜாய் கிரிசல்ட்டாதான் தொடர்ந்து புலம்பிக் கொண்டு இருக்கிறார், ஆனால் மாதம்பட்டி ரங்கராஜ் எந்தவிதமான சலனமும் இல்லாமல், பார்ட்டி, ஃபங்ஷன் என செம ஜாலியாக இருக்கிறாரே என்று பதிவிட்டு வந்தார்கள். இன்னும் சொல்லப்போனால் மாதம்பட்டி ரங்கராஜ் அப்படித்தான் இருந்து வருகிறார்.

மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் இருந்து, ஜாய் கிரிசல்ட்டா ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கும் போது, சமூக வலைதளங்களில் பதிவிடும் போது ரங்கராஜ் என்று பதிவிட வேண்டும் என்றும், தன்னைப் பற்றி அவதூறான கருத்துக்களை பரப்ப தடை விதிக்க வேண்டும் என்றும், ஜாய் கிரிசல்ட்டாவால் கடந்த 15 நாட்களில் ரூபாய் 12.5 கோடிகள் வரை தனது கேட்டரிங் நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இப்படியான நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரை அடுத்து, விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆதாரங்கள்: இதில் இன்று அதாவது, செப்டம்பர் 22ஆம் தேதி, பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவு துணை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணையில் ஜாய் கிரிசல்ட்டா கலந்து கொண்டார். இந்த விசாரணை சுமார் நான்கு மணி நேரம் நடைபெற்றுள்ளது. இந்த விசாரணையின் போது ஜாய் கிரிசல்ட்டா தரப்பில் இருந்து, நூற்றுக்கும் மேற்பட்ட ஆவணங்களும் புகைப்படங்களும் வீடியோக்களும் ஆதாரங்களாக கொடுக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே திருமணம்: தற்போது சின்னத்திரை வட்டாரத்திலும் சினிமா வட்டாரத்திலும் ஜாய் கிரிசல்ட்டாவை, பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவு ஆணையர் விசாரித்தது தொடர்பான பேச்சுக்கள் தான் அதிகம் பேசப்படுகிறது. பலரும் மாதம்பட்டி ரங்கராஜ் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறி வருகிறார்கள். மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்கனவே திருமணம் ஆனவர். இது மட்டும் இல்லாமல் இரண்டு குழந்தைகளுக்கு தகப்பனும் கூட.
கைதாக வாய்ப்பா?: இப்படி இருக்கும்போது தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலே இரண்டாவது திருமணம் செய்து கொண்டதே சட்டப்படி தவறு. இப்படி இருக்கும்போது அவரை கைது செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக பலரும் பேசி வருகிரார்கள். மாதம்பட்டியை கூடிய சீக்கிரமே விசாரணைக்கு அழைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரிடம் விசாரணை நடத்திய பின்னர் இந்த வழக்கு அடுத்த கட்டத்திற்கு நகரும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











