»   »  குஷ்பு, பாக்யராஜை கடத்திய கட்டப்பா, கபாலி: இது ஜீ டிவியின் ஜூனியர் சூப்பர் ஸ்டார்...

குஷ்பு, பாக்யராஜை கடத்திய கட்டப்பா, கபாலி: இது ஜீ டிவியின் ஜூனியர் சூப்பர் ஸ்டார்...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கட்டப்பாவும், கபாலியும் கைகோர்த்து வந்து நடிகை குஷ்புவையும், இயக்குநர் பாக்கியராஜையும் கடத்தி கொண்டு போய் நடனமாடச் சொன்னால் எப்படி இருக்கும்? இது என்ன கலாட்டா என்று யோசிக்கிறீர்களா? இது கலாட்டா அல்ல நிஜமாகவே அப்படி ஒரு சம்பவம் ஜீ தமிழ் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியான ஜூனியர் சூப்பர் ஸ்டாருக்காக நடந்தது.

இன்றைக்கு சிறுவர்களை வைத்து நடன நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. புதிதாக ஜீ தமிழ் டிவியில் குழந்தைகளுக்கான அனைவரையும் கவரக்கூடிய ரியாலிடி ஷோவாக வருகிறது ஜூனியர் சூப்பர் ஸ்டார்.

இந்த ரியாலிடி ஷோவின் வாயிலாக விரைவில் நமது வீட்டுக் குழந்தைகளின் நடிப்பு திறமைகளை வெளிப்படுத்த உரிய இடமாக ஜீ தமிழ் சேனல் அமைந்துள்ளது.

ஜூனியர் சூப்பர் ஸ்டார்

ஜூனியர் சூப்பர் ஸ்டார்

குழந்தைகளில் உள்ளே மறைந்திருக்கும் நடிப்பு திறமைகளை கண்டுபிடித்து வெளிக்கொண்டுவரும் நிகழ்ச்சிதான் ஜூனியர் சூப்பர் ஸ்டார். 4 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் இதில் பங்கேற்கலாம். இதற்கான தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இனி ஜூனியர் சூப்பர் ஸ்டார்களை ஆகஸ்ட் 6 முதல் நமது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணலாம்.

கபாலி, கட்டப்பா

இந்த ரியாலிட்டி ஷோவில் குட்டி குழந்தைகள் கட்டப்பாவாகவும், கபாலி, சந்திரமுகி, சரோஜா தேவி என பல வித வேடங்களில் வந்து தங்களின் நடிப்புத் திறமையை வெளிப்படுத்த உள்ளனர்.

கடத்தல் நாடகம்

கடத்தல் நாடகம்

இந்த நிகழ்ச்சிக்கான புரோமோசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. நடுவர்களாக குஷ்பு,பாக்யராஜ், தொகுப்பாளினி அர்ச்சனா பங்கேற்க அவர்களை கடத்திக் கொண்டு போய் நடனமாட விடுவது போல் அமைத்துள்ளனர்.

அர்ச்சனா - பாக்யராஜ்

அர்ச்சனா - பாக்யராஜ்

நீண்ட நாட்களுக்குப் பிறகு சின்னத்திரையில் நடனமாடியுள்ளார் இயக்குநர் கே. பாக்யராஜ். சின்னத்திரை தொகுப்பாளினி அர்ச்சனா உடன் டூயட் நடனம் ஆடியுள்ளா அர்ச்சனா. இந்த ஜோடி கூட நல்லாத்தான் இருக்குப்பா.

நான் திரும்ப வறேன்

ஜீ தமிழ் டிவியில் சிம்ப்ளி குஷ்பு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ள குஷ்பு, அரசியலில் பிஸியானதால் நிகழ்ச்சி தொகுப்புக்கு கொஞ்சம் பிரேக் விட்டிருந்தார். இப்போது நடுவராக ஜீ தமிழ் டிவிக்கு வருகிறார். நான் திரும்ப வறேன் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் குஷ்பு.
ஜூனியர் சூப்பர் ஸ்டார் ஆகஸ்ட் 6 முதல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Actress Khushbu is set to make her comeback on the small screen with a new show 'Junior Superstars' on Zee Tamil. Khushbu, Bhagyaraj and television host Archana being the judges.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil