»   »  ருசி ருசியா சமைக்க கற்றுத்தரும் “கே2கே.காம்” 100வது எபிசோட்

ருசி ருசியா சமைக்க கற்றுத்தரும் “கே2கே.காம்” 100வது எபிசோட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

வித்தியாசம் என்பதை சொல்லில் மட்டும் இல்லாமல், உணவிலும், செய்முறையிலும் காட்டி மக்களின் மனதில் இடம் பிடித்திருக்கும் நிகழ்ச்சி "கே2கே.காம்" ரசிக்க ருசிக்க என்னும் சமையல் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி இல்லத்தரசிகளுடன் 100வது எபிசோடை எட்டியுள்ளது.

இந்திய மற்றும் உலக உணவு வகைகள், ஆரோக்கிய உணவுகள், இனிப்பு மற்றும் நொறுக்கு வகைகள் என விதவிதமான உணவுகளை, பெரியகருப்பன்,கலா,பிரியா ஆகிய மூவர் கூட்டணி வழங்கி வருகிறது.

சுவையான சமையல்

சுவையான சமையல்

உணவுகளின் வரலாறு ,சமையல் குறிப்புகள் மக்களால் பெரிதும் கவரப்பட்டு வருகிறது. வார நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ரகமாக பிரித்து வழங்கி வருகின்றனர்.

ஆரோக்கிய சமையல்

ஆரோக்கிய சமையல்

திங்கட்கிழமை இந்திய உணவுகள் குழந்தைகளுக்கான லஞ்ச் பாக்ஸ் உணவுகளும் செவ்வாய் மற்றும் வியாழன் அன்று ப்ரியாவின் ஆரோக்கிய சமையல் மற்றும் கலாவின் இனிப்பு, நொறுக்கல் வகைகளும் கற்றுக்கொள்ளலாம்.

உலக உணவுகள்

உலக உணவுகள்

புதன் கிழமை ஸ்ரீ பெரியகருப்பனின் உலக உணவு வகைகள் என்று சுவையான உணவுகளை சுவையாக வழங்கி வருகின்றனர்.

நேயர்களின் லைவ் சமையல்

நேயர்களின் லைவ் சமையல்

மேலும் ஒவ்வொரு வெள்ளியன்றும் நேயர்கள் பரிந்துரைக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து , அவர்களோடு தொலைபேசியில் உரையாடிக் கொண்டே, ஸ்ரீ பெரியகருப்பன் சமைப்பது கே2கே வில் உள்ள சிறப்பு அம்சமாக விளங்குகிறது.

100 வது நிகழ்ச்சி

100 வது நிகழ்ச்சி

இந்த நிகழ்ச்சி 29 ஆம் தேதியன்று 100 வது நிகழ்ச்சியை தொடுகிறது. இந்த நூறாவது நிகழ்ச்சி வழக்கத்திற்கு மாறாக சிறப்பு நிகழ்ச்சியாக இடம்பெற இருக்கிறது. புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிவரை மதியம் ஒரு மணிக்கு கே2கே ரசிக்க ருசிக்க நிகழ்ச்சியைப் பார்த்து பயன்பெறுங்கள்.

English summary
Puthuyugam presents a new dazzling cookery show 'K2K.com'. Two cooking experts in one show. Foodies Kala and Sri Periya Karuppan. On June 29th K2K touches 100th Episode.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil