»   »  தெறி, 24, கபாலி, இருமுகன் அத்தனையும் அள்ளிய ஜெயா டிவி

தெறி, 24, கபாலி, இருமுகன் அத்தனையும் அள்ளிய ஜெயா டிவி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்யின் தெறி மற்றும் விரைவில் வெளிவரவிருக்கும் ரஜினியின் கபாலி படங்களின் சேட்டிலைட் உரிமையை பிரபல ஜெயா டிவி நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யாவின் 24 மற்றும் விக்ரமின் இரு முகன் ஆகிய படங்களின் சேட்டிலைட் உரிமையை ஜெயா டிவி தான் கைப்பற்றியுள்ளதாக சேனல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெறி, கபாலி ஆகிய இரு படங்களையும் வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார்.

ஜெயாடிவியில் புதுப்படங்கள்

ஜெயாடிவியில் புதுப்படங்கள்

கடந்த 5 ஆண்டுகளாகவே ஜெயா டிவியில் அதிக அளவில் புத்தம் புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அதுவும் பிரபல நடிகர்கள் நடித்த படங்களின் உரிமையை போட்டி போட்டு பெற்று ஒளிபரப்புகிறது ஜெயா டிவி.

விஜய் - அஜீத்

விஜய் - அஜீத்

விஜய் நடித்த கத்தி அஜீத் நடித்த ஆரம்பம், விக்ரம் நடித்த ஐ, ராஜமௌலியின் பாகுபலி, ரஜினியின் கோச்சடையான், லிங்கா ஆகிய பல படங்களை ஜெயா டிவியே கைப்பற்றியது.

லிங்காவிற்கு பெரும் தொகை

லிங்காவிற்கு பெரும் தொகை

லிங்கா படத்தை வாங்க சன் டிவி பெரும் முயற்சி மேற்கொண்டது. ரூ 28 கோடி வரை விலை பேசினார்கள். இந்த நிலையில் ரூ 32 கோடி கொடுத்து லிங்காவின் தொலைக்காட்சி உரிமையைப் பெற்றது ஜெயா டிவி

சேனல் போட்டி

சேனல் போட்டி

தாணு தயாரித்த தெறி, கபாலி ஆகிய இரு படங்களையும் ஜெயா டிவி கைப்பற்றியுள்ளது. அதே போல சூர்யாவின் 24 விக்ரம் நடித்த இருமுகன் ஆகிய படங்களையும் கைப்பற்றியுள்ளது ஜெயா டிவி. எல்லாம் டிஆர்பி ரேட்டிங்கிற்காகத்தான். இனி விசேச விடுமுறை நாட்களில் உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக என்று ஜெயா ஹெச்டி டிவியில் கபாலி படத்தை பார்க்கலாம்.

English summary
Jaya TV acquires the TV rights of Rajinikanth, Radhika Apte's film
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil