»   »  இலங்கை, திருச்செந்தூரில் வளரும் ‘காக்க காக்க' தொடர்!

இலங்கை, திருச்செந்தூரில் வளரும் ‘காக்க காக்க' தொடர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அசுரன் சூரபத்மனை அழிப்பதற்காக தன் முழு சக்தியையும் ஒரு வேலுக்குள் அடக்கி, அதை தன் மகன் முருகனுக்கு வழங்குகிறார் அன்னை பார்வதி. முருகப் பெருமானின் கையிலிருந்த அந்த வேலுக்குப் பின்னால் யாருக்கும் தெரியாத, பல மர்மங்கள் கொண்ட சுவாரசியமான கதைகள். அந்த கதைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் மெகா தொடர்தான் 'காக்க காக்க'.

இந்த மெகா தொடர் ராஜ் டி.வி.யில் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

Kakka Kakka serial shot in Srilanka

இத் தொடரை டி.ஐ.பிலிம் கார்ப்பரேஷன் தயாரிக்கிறது. திங்கட் கிழமையிலிருந்து சனிக்கிழமை வரை மாலை 6.30 மணிக்கு இத்தொடர் ஒளிப்பாகிறது.

தீபா, சூஸன், கமல், ஜீவா ரவி, எஸ்.வி.எஸ். குமார், அகில், கிஷன் ஆகியோர் இதில் நடிக்கிறார்கள்.

Kakka Kakka serial shot in Srilanka

ஒளிப்பதிவு : கோபால்

கதை, திரைக்கதை, வசனம் : ஜெய் கிருஷ்ணன்

டைட்டில் பாடல் இசை: ஹரி கிருஷ்ணன்.

டைட்டில் பாடலைப் பாடியிருப்பவர் : நித்யஸ்ரீ மகாதேவன்.

Kakka Kakka serial shot in Srilanka

அஜய் கிருஷ்ணா தயாரித்திருக்கும் இத்தொடரின் இயக்குநர் அழகர். இவர் விஜய் டி.வி.யில் ஒளிப்பரப்பான 'சரவணன் மீனாட்சி' வெற்றித் தொடரை இயக்கியவர்.

திருச்செந்தூர், இலங்கையில் உள்ள கதிர்காமம், கொழும்பு ஆகிய இடங்களில் இத்தொடரின் படப்பிடிப்பு நடைபெற்றது.

English summary
Kakka Kakka mega serial has been shot at Srilanka and Tiruchendur.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X