Bigg Boss: மூட்டை முடிச்சை கட்டிய கலையரசன்.. அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சென்னை: அக்டோபர் 5ந் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது. சர்ச்சைக்கு பஞ்சமே இல்லாத வகையில் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கும் நிலைகள், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ள போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் எட்டை தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதியே, பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி வருகிறார். ஆனால், இந்த சீசன் ஆரம்பித்த நாளிலிருந்தே, அதிகமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அதற்கு காரணம் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்திருக்கும் போட்டியாளர்கள் தான். அகோரி கலையரசன், பலூன் அக்கா அரோரா, வாட்டர் மிலன் திவாகர் போன்றவர்களால், இந்த நிகழ்ச்சியின் பெயர கேட்டுவிட்டது என பலர் திட்டி தீர்த்து வருகின்றனர்.

Bigg Boss Kalaiyarasan
Photo Credit:

பிக் பாஸ் சீசன் 9: இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிற்குள் ஏகப்பட்ட பஞ்சாயத்துகள் நடந்தாலும், டாஸ் சிறப்பாக இருந்தது என்று சொல்லாம். அதாவது, நிகழ்ச்சியி, ஒப்பனை பொருட்கள், சமையல் பொருட்கள் என அனைத்தையும் எடுத்துக்கொண்ட பிக் பாஸ். போட்டியாளர்களுக்கு ஒவ்வொரு போட்டியாக வைத்து சமையல் பொருட்களையும், ஒப்பனை பொருட்களையும் வழங்கினார். இதில், மிகவும் மோசமாக விளையாடிய போட்டியாளராக, இருவரை தேர்வு செய்யப்பட்டனர். அதில், திவாகர் மற்றும் கலையரசன் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் இருவரும் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

வெளியேறிய போட்டியாளர்: இருவது போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில், என்னால் இந்த வீட்டில் இருக்க முடியாது என நந்தினி தானாக வீட்டில் இருந்து வெளியேறினார். அதைத்தொடர்ந்து பிரவீன் காந்தி, அப்சரா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதற்கு அடுத்து இந்த வாரம் குறைந்த வாக்குகளை பெற்ற கலையரசன் வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை பார்த்த நெட்டிசன், அவர் வீட்டிற்குள் இருந்து எதுவும் செய்யவில்லை என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த வீட்டில் அவர் 27நாட்கள் இருந்துள்ளார். அவருக்கு நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் பேசிய இருக்கும் நிலையில் 27அவருக்கு 4 லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது வைல்டு கார்டு போட்டியாளர்களாக பிரஜன் அவரின் மனைவி சான்ரா, அமீர் ராகவ் மற்றும் திவ்ய கணேஷ் ஆகியோர் வீட்டுக்குள் வர உள்ளனர். இதனால், ஆட்டம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X