»   »  ஆன்டிரியா உதடு அடையாளம் தெரியலையே கமலுக்கு! சிம்ப்ளி குஷ்பு சுவாரஸ்யங்கள்

ஆன்டிரியா உதடு அடையாளம் தெரியலையே கமலுக்கு! சிம்ப்ளி குஷ்பு சுவாரஸ்யங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கமலுக்கும் நடிகைகளின் உதடுகளுக்கும் அத்தனை பொருத்தம். இன்னமும் ரொமான்ஸ் லிப்லாக் சீன்களில் கமல்ஹாசனைப் போல அத்தனை இயல்பாக யாரும் நடிப்பதில்லை. அதனால்தானோ என்னவோ ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடிகை குஷ்பு தனது சிம்ப்ளி குஷ்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசனிடம் நடிகைகளின் உதடுகளை காட்டி அடையாளம் கூறச் சொன்னார்.

பல படங்களில் ஏராளமான நடிகைகளின் உதடுகளுக்கு முத்தம் கொடுத்து நடித்துள்ள கமல், ஆன்டிரியாவின் உதடுகளை அடையாளம் காட்டும்போது தடுமாறித்தான் போனார்.

கமல் குஷ்பு

கமல் குஷ்பு

கமல்ஹாசனுடன் குஷ்பு சில படங்களில் நடித்திருக்கிறார். மைக்கேல் மதனகாமராஜன், சிங்கார வேலன், ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் அந்த ரம்பம்பம்... பாடல் ரசிகர்களால் மறக்கமுடியாதது.

டூயட் ஆடிய கமல்

டூயட் ஆடிய கமல்

சினிமாவில் குஷ்பு உடன் டூயட் ஆடிய கமல் சிம்ப்ளி குஷ்பு நிகழ்ச்சியிலும் ரம்பம்பம் பாடலுக்கு அதே ஸ்டைலில் டூயட் ஆடி அசத்தினார்.

உதடுகள் அடையாளம்

உதடுகள் அடையாளம்

கலாய்ப்புகள் சந்தோசமான கேள்விகள் என போன நிகழ்ச்சியில் நடிகைகள் வசுந்தராதாஸ், ராணி முகர்ஜி, கவுதமி என பலரது உதடுகளை மட்டும் காண்பித்து அடையாளம் காட்டச் சொன்னார் குஷ்பு.

ரொம்ப நாள் ஆயிருச்சே

ரொம்ப நாள் ஆயிருச்சே

ஜாலியான கமெண்டுகளுடன் பலரது உதடுகளை சரியாக அடையாளம் சொன்னார் கமல், சிலரது உதடுகளைப் பார்த்து யாருது? பார்த்து ரொம்ப நாள் ஆயிருச்சே என்று கமெண்ட் அடித்தார்.

ஆன்டிரியாவை தெரியலையே

ஆன்டிரியாவை தெரியலையே

நடிகை ஆன்ரியாவின் உதடு வந்த போது தெரியலையே என்றதுதாம் கொஞ்சம் யோசிக்க வைத்தது. நம்புங்க ரசிகர்களே நம்புங்க.

என்னிலும் சிறப்பானவன்

என்னிலும் சிறப்பானவன்

நாளைய நடிகன் என்னிலும் சிறப்பானவனாக வரவேண்டும் என்பதுதான் என் ஆசை இந்த நிஜத்தை நான் புரிந்து கொள்ளவில்லை என்றால் என் கலை வளராது. இந்த நிஜத்தை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால் கலையே வளராது என்றார் கமல்.

கமலாக நடிக்க சிரமம்

நடிப்பதில் சிரமமான கதாபத்திரம் எது என்று குஷ்பு கேட்டதற்கு, நான் கமல்ஹாசனாக நடிக்கத்தான் சிரமப்படுகிறேன் என்றார். நீங்கள் என்னைப் பற்றி ஏதேதோ நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அதை ஏமாற்றாதபடி கமல்ஹாசனாக நடிப்பதற்கு சிரமப்படுகிறேன் என்றார்.

English summary
Actor Kamal Hassan participate Simply Kushboo program with Kushboo on Zee Tamil TV Saturday night 8 PM.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil