»   »  என்னது இது சின்னப்புள்ளத்தனமா?: பிக் பாஸில் கோபப்பட்டு நடையை கட்டிய கமல்

என்னது இது சின்னப்புள்ளத்தனமா?: பிக் பாஸில் கோபப்பட்டு நடையை கட்டிய கமல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் மீது கோபப்பட்டு நடையை கட்டினார் கமல் ஹாஸன்.

பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் கமல் ஹாஸன் முன்பு மட்டும் தான் சமத்துப் பிள்ளைகளாக இருக்கிறார்கள். இந்நிலையில் அவர்களின் பித்தலாட்டத்தை பார்த்து கமல் ஹாஸன் கோபம் அடைந்தார்.

இனி போட்டியாளர்களுடன் பேச மாட்டேன் என்றும் கூறினார்.

கமல்

கமல்

கமல் பேசுவது கேட்கவில்லை என்று ஹவுஸ் மேட்ஸ் தெரிவித்தனர். சவுண்டு கேட்கலையா, நான் உங்கள மாதிரி அதை கழற்றி வைக்கவில்லையே என்று ஹவுஸ்மேட்ஸை பார்த்து நக்கலாக கேட்டார் கமல்.

கண்டிப்பு

கண்டிப்பு

பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களின் ஒழுங்கிண்மையை பார்த்து கமல் கோபப்பட்டு அவர்களை கண்டித்தார். தான் வேலை செய்யாமல் இருப்பதை விட அடுத்தவர்களையும் வேலை செய்யவிடாமல் செய்வது இது என்ன ஒத்துழையாமை இயக்கமா? அதுக்கு இங்க வரலையே என்றார் கமல்.

மைக்

மைக்

மைக்கை பொத்திக்கிட்டு ரகசியம் பேசினால் உங்களை கேட்க முடியாது என்று நினைக்கிறீர்களா? என்ன சிறு பிள்ளைத்தனமாக விளையாட்டு அது. அப்படித்தான் தூங்குவேன் என்றால் ஒத்துக்கிட்டு தானே வந்தீங்க என்று கமல் கண்டித்தார்.

புரியவில்லை

புரியவில்லை

நீங்க ஏன் இப்படி பண்றீங்கனு எனக்கு புரியவில்லை. சினிமாவில் நடிச்சாலும் இப்படித் தான் இருப்பீங்க. பாதியில் கோபித்துக் கொண்டு லன்சுக்கு பின் வர மாட்டீங்க இல்லையா? என்று கமல் கோபமாக பேசினார்.

சினிமா

சினிமா

சினிமா ஷூட்டிங்கில் பாதியில் போய்விடுவீர்களா, காலையில் வச்ச குர்மா சரியில்லை என்பீர்களா?. பிக் பாஸுன்னு ஒருத்தரை வச்சு பேச வச்சிருக்கோம். அவரை அவமரியாதை செய்ய நீங்க என்ன ஸ்கூல் பிள்ளைங்களா? என்று கேட்டார் கமல்.

மாட்டேன்

மாட்டேன்


நானும் உங்களிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். ப்ரியமா சொல்லிப் பார்த்தேன். இப்படி பண்ணலாம், அப்படி பண்ணலாம்னு சிரிச்சு சிரிச்சு பேசிப் பார்த்தேன். எல்லாருமே என் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று நினைத்து தான் பேசினேன். அது நடக்கவில்லை என்பது தெரிகிறது.
இனி உங்களுடன் பேச விரும்பவில்லை என்று கூறி நடையை கட்டினார் கமல்.

சமரசம்

சமரசம்

பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் கமலிடமும், பிக் பாஸிடமும் மன்னிப்பு கேட்டனர். இனி இப்படி செய்ய மாட்டோம் என்றனர். ஆனால் கமல் கேட்பதாக இல்லை. புது போட்டியாளர்களிடம் மட்டுமே பேசுவேன் என்றார்.

English summary
Kamal Haasan gets angry and refused to talk with the inmates of the Big Boss house after finding out their childish acts.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil