நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியில் டக் டக்குன்னு பதில் சொல்லி ரூ.50 லட்சம் வென்ற கமல்

By Siva

சென்னை: விஜய் டிவியில் பிரகாஷ் ராஜ் நடத்தும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் கமல் ஹாசன் ரூ. 50 லட்சம் வென்றுள்ளார். அந்த பணத்தை அவர் நல்ல காரியத்திற்காக கொடுத்துள்ளார்.

விஜய் டிவியில் பிரகாஷ் ராஜ் நடத்தும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் உலக நாயகன் கமல் ஹாசன் கலந்து கொண்டார். கடந்த 23ம் தேதி ஏவிஎம் ஸ்டுடியோவில் இந்த நிகழ்ச்சி ஷூட் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சி விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்.

கௌதமியுடன் வந்த கமல்

கௌதமியுடன் வந்த கமல்

நிகழ்ச்சிக்கு கமல் ஹாசன், கௌதமியுடன் வந்திருந்தார்.

டக் டக்குன்னு பதில் சொன்ன கமல்

டக் டக்குன்னு பதில் சொன்ன கமல்

போட்டியில் பிரகாஷ் ராஜ் கேட்ட கேள்விகளில் பலவற்றுக்கு கமல் டக் டக்குன்னு பதில் அளித்தார். இதைப் பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.

ரூ.50 லட்சம் வென்ற கமல்

ரூ.50 லட்சம் வென்ற கமல்

பெரும்பாலான கேள்விகளுக்கு எளிதில் பதில் அளித்த கமல் ரூ.50 லட்சம் வென்றார்.

பெற்றால் தான் பிள்ளையா

பெற்றால் தான் பிள்ளையா

நிகழ்ச்சியில் வென்ற ரூ.50 லட்சத்தையும் புற்றுநோயாளிகளுக்காக தான் நடத்தும் பெற்றால் தான் பிள்ளையா அமைப்புக்கு அளித்துவிட்டார்.

கமல் குவிஸ் மாஸ்டராகலாம்

கமல் குவிஸ் மாஸ்டராகலாம்

கமல் பதில் அளித்த விதத்தைப் பார்த்த நிகழ்ச்சி தயாரிப்பாளர் சித்தார்த் பாசு உலக நாயகன் குவிஸ் மாஸ்டராகலாம் என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X