»   »  நீங்க நல்லவரா.. கெட்டவரா... வெள்ளிக்கிழமை பாருங்க!

நீங்க நல்லவரா.. கெட்டவரா... வெள்ளிக்கிழமை பாருங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாபநாசம் படம் பார்த்த பாதிப்பிலிருந்து இன்னும் பாதிப் பேர் விலகவே இல்லை. கமல் பேச்சாகத்தான் உள்ளது எங்கெங்கும். இப்படிப்பட்ட கமல் ரசிகர்களுக்கு இந்த வாரம் முழுவதும் சில அருமையான கமல் படங்களைப் பார்க்கும் வாய்ப்பை டிவி கொடுத்துள்ளது.

சன் டிவியில் இந்த வாரம் கமல் வாரமாம். இன்று முதல் வெள்ளி வரை சூப்பர் ஹிட் கமல் படங்களைக் கையில் எடுத்து வைத்துள்ளனர்.

இரவு 11 மணிக்கு போடப்படும் இந்தப் பட வரிசையில் இந்த வாரம் கமல்ஹாசன் வாரம்.

ஜப்பானில் கல்யாணராமன்

ஜப்பானில் கல்யாணராமன்

இன்று இரவு ஜப்பானில் கல்யாண ராமன். கல்யாண ராமன் சூப்பர் ஹிட் படத்தின் 2வது பாகம் இது. முதல் பாகம் போல ஆஹாவென இது ஓடவில்லை. என்றாலும் காமெடிக்காக பார்க்கலாம். ராதா இந்தப் படத்தில் கொள்ளை அழகாக இருப்பார்!

வாழ்வே மாயம்

வாழ்வே மாயம்

அழகிய ஸ்ரீதேவி, அம்சமான அம்பிகா, அதிரடி ஸ்ரீபிரியா, ஸ்டைலிஷ் மனோரமா என நிறைய சீனியர்கள் நிரம்பிய வசந்தமாளிகையின் காப்பி வாழ்வே மாயம். கங்கை அமரனின் இன்னிசையில் உருவான இந்தப் படம் நாளை இரவு 11 மணிக்கு.

காக்கிச் சட்டை

காக்கிச் சட்டை

கமல்ஹாசன் இந்தப் படத்தைப் பற்றி நிறையவே கேலி செய்திருப்பார். இப்படிப்பட்ட படங்களிலும் நான் நடிக்க வேண்டி வந்தது என்று கூட கூறியிருப்பார். ஆனால் படத்தில் கமல் கலக்கியிருப்பார். அதே போல சத்யராஜ் வில்லத்தனத்தில் புதிய ஸ்டைலை புகுத்திய படம். ஜனரஞ்சகமான கலகலப்புப் படம் காக்கிச்சட்டை. அம்பிகா ரொம்ப அழகு இந்தப் படத்தில்!

16 வயதினிலே

16 வயதினிலே

கமல்ஹாசன், ரஜினிகாந்த் என்ற இரு பெரும் இமயங்களை ஜஸ்ட் லைக் தட் நடிக்க வைத்திருப்பார் பாரதிராஜா. கூடவே ஸ்ரீதேவி. முப்பெரும் கலக்கல் நடிப்பைக் கொடுத்த இப்படம் இசையால் சிறந்த பட வரிசையிலும் இணைந்தது. இசைஞானியின் தேன் மதுர இசை. பாரதிராஜாவின் அழகிய இயக்கம்.. கமல் ரசிகர்கள் மட்டுமல்ல, திரை ரசிகர்களும் ரசித்து வியந்த படம் இது.

நாயகன்

நாயகன்

தென் பாண்டிச் சீமையிலேயே தேரோடும் வீதியிலே... பாட்டைக் கேட்டோரை அழ வைத்த படம். டான் பட வரிசையில் புதிய பரிமாணத்தைக் கொடுத்த படம். கமல்ஹாசனுக்கு மிக முக்கியமான படம். சிறந்த நடிகராக 2வது முறையாக கமலுக்கு விருது பெற்றுத் தந்த படம். இசையில் பின்னியிருப்பார் ராஜா. இந்தப் படத்தின் பல வசனங்கள், டிரெண்ட் செட்டாக மாறி வரலாறு படைத்தவை.

மறக்க முடியாத இந்த கமல்ஹாசன் படங்களை பார்த்து மகிழுங்கள்.

English summary
Sun TV is all set to telecast the super hit movies of Kamal Haasan this week.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil