»   »  உலக நாயகனையே கண்கலங்க வைத்த ஓவியா!

உலக நாயகனையே கண்கலங்க வைத்த ஓவியா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியா குறித்து சினேகன் கூறிய கருத்துகளை கேட்ட கமலும் கண்கலங்கிவிட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 40 நாள்களாக ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் அழுக்காச்சி சீரியல்களை மக்கள் மூட்டை கட்டி வைத்து விட்டனர்.

இதற்கு காரணம் நிகழ்ச்சியின் தரம் அல்ல. அதில் பங்கேற்ற நடிகை ஓவியாவின் குணம் என்றால் அதை மறுப்பதற்கில்லை.

 மக்கள் மனதை கவர்ந்தார்

மக்கள் மனதை கவர்ந்தார்

தனது குழந்தைத் தனமான பேச்சு, வெகுளித்தனமான ஆட்டம், நறுக் பேச்சு, நேர்மையான செயல்பாடு உள்ளிட்டவற்றால் மக்கள் மனங்களையும், இளசுகளையும் கொள்ளை கொண்டவர் ஓவியா.

 மனஉளைச்சல்

மனஉளைச்சல்

சக போட்டியாளர் ஆரவ் தன்னை காதலிப்பதாக நினைத்த ஓவியா, அவர் நட்பாக பழகியதாக கூறியவுடன் மனம் உடைந்தார். மேலும் கடந்த 2 வாரங்களாக பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் ஓவியாவை தனிமைப்படுத்தி வந்தனர். அவரை வெறுத்து ஒதுக்கி வந்தனர்.

 தற்கொலை முயற்சி

தற்கொலை முயற்சி

இதனால் கடந்த வெள்ளிக்கிழமை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான ஓவியா வீட்டை விட்டு வெளியேற விரும்பினார். இதைத் தொடர்ந்து பிக்பாஸிடம் கேமரா மூலம் தெரிவித்து நடவடிக்கை எடுக்காததால் நீச்சல் குளத்தில் மூழ்கி தற்கொலை முயற்சி செய்தார்.

 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்

இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் இருந்து நேற்று வெளியேறினார் ஓவியா. அதன்பின்னர் கமலுடன் பேசியபோது ரசிகர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லுமாறு அறிவுறுத்தினர். எனினும் அதை கேட்காமல் அவர் வெளியேறி விட்டார். இதனால் வீட்டில் நடப்பது குறித்து அத்தனை ரூம்மேட்ஸ்களிடமும் கமல் தனித்தனியாக விசாரணை நடத்த தொடங்கினார்.

 ப்ரோமோவில் கண் கலங்கிய கமல்

ப்ரோமோவில் கண் கலங்கிய கமல்

நேற்று வெளியான ப்ரோமோவில் சினேகனிடம் ஓவியா குறித்து கேட்டபோது, ஓவியா இப்படி ஆவார் என்று எனக்கு ஆரம்பத்திலேயே தெரிந்திருந்தால், நான் சத்தியமாக ஓவியா பக்கம் நின்றிருப்பேன். ஏனெனில் அவள் இதுவரை பொய் கூறியது இல்லை. எதையும் ஈசியாக எடுத்துக் கொள்வார் என ஓவியாவைப் பற்றி பேசிக் கொண்டிருந்த பொழுது சினேகன் அழ ஆரம்பித்தார். அதைப் பார்த்த கமல்ஹாசனுக்கும், கண்ணில் கண்ணீர் வர ஆரம்பித்தது.

English summary
Kamal Hassan asks all room mates of BB about Oviya after she was out. While Snehan describing about Oviya, he shed tears. After that Kamal too did that.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X