விஜய் டிவி.,யில் இந்த வார வீக் என்ட் ஸ்பெஷல்...கனா காணும் காலங்கள் ரீயூனியன்

சென்னை : வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் புதிது புதிதாக, தனித்துவமான, வித்தியாசமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. மக்களை கவருவதற்காக ஞாயிற்றுக்கிழமைகளில் ஸ்பெஷல் நிகழ்ச்சிகள் வழங்கப்படுகிறது.

அந்த வகையில் இந்த வார வீக் என்ட் ஸ்பெஷல் நிகழ்ச்சியாக ஜுலை 18 அன்று பகல் 3 மணிக்கு, கனா காணும் காலங்கள் ரீ யூனியன் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட உள்ளது. முற்றிலும் புதுமுகங்களைக் கொண்டு உருவாக்கிய இந்த சீரியல் தான் பல இளம் நடிகர்களை வெளி உலகிற்கு அடையாளம் காட்டியது.

விஜய் டிவி சீரியல் கனா காணும் காலங்கள்

விஜய் டிவி சீரியல் கனா காணும் காலங்கள்

2006 ல் விஜய் டிவி.,யில் ஒளிபரப்பப்பட்ட தொடர் தான் கனா காணும் காலங்கள். பள்ளி செல்லும் மாணவர்களை வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரியல், பலரின் ஃபேவரைட் ஷோ. பிறகு இந்த சீரியலின் அடுத்தடுத்த பாகங்கள் எடுக்கப்பட்டு, அவைகளும் வரவேற்பை பெற்றன.

திறமைகளை அடையாளம் காட்டிய சீரியல்

திறமைகளை அடையாளம் காட்டிய சீரியல்

கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்தவர்களின் திறமைகள் அடையாளம் காணப்பட்டு, மற்ற சேனல்களிலும், சீரியல்களில் நடிக்க அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. பலருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் கிடைத்தது.

விஜய் டிவி.,யில் ரீயூனியன்

விஜய் டிவி.,யில் ரீயூனியன்

தற்போது இந்த சீரியலில் நடித்தவர்களின் ரீயூனியன் நிகழ்ச்சி விஜய் டிவி.,யில் நடைபெற உள்ளது. பல ஆண்டுகளுக்கு பின் இதில் நடித்தவர்கள் ஒன்றிணைந்து தங்களின் இனிமையான அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உள்ளனர்.

இவங்கெல்லாம் வராங்க

இவங்கெல்லாம் வராங்க

இதில் ஸ்கூல் பேட்ச் பசங்க இர்ஃபான், பிளாக் பாண்டி, ஐயப்பன் உன்னி, மைக்கேல், கிரன், பிரபு, புலி, டாம், ரவி, மோனிகா, ஸ்ரீராம் கிஷன் ஆகியோரும் காலேஜ் பாட்ச் 3 டீமில் இருந்து விஷ்ணு, ரமேஷ் திலக், சாய் பிரமோதிகா, பால சரவணன், நிஷா கணேஷ், ஃபிராங்க் அழகப்பன், கணேஷ் சரவணன், வாசு, பாலா, ஜாக்குலின், ஹரி பிரியா, ஸ்வேதா, லட்டு வித்யா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

இவங்களும் இருக்காங்க

இவங்களும் இருக்காங்க

காலேஜ் பாட்ச் 4 டீமில் இருந்து வெற்றி, ரியோ ராஜ், ராஜு, சாய் காயத்ரி, பிரிட்டோ, அஷ்ரிகா, மணி, வைஷாலி, அபி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகை ரேகா மற்றும் பிடி மாஸ்டர் அன்பு கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிகழ்ச்சியை தீபக் மற்றும் நக்ஷத்திரா தொகுத்து வழங்க உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X