Don't Miss!
- Finance
ஏடிஎம் மோசடிகளில் இருந்து தப்பிக்க வேண்டுமா? இதை நீங்கள் கண்டிப்பாக செய்ய வேண்டும்!
- Technology
Jio பயனர்களுக்கு இனி Netflix இலவசம்: ஆக்டிவேட் செய்வது எப்படி?
- News
ரெட் அலர்ட்.. வெள்ள நீரில் மிதக்கும் மும்பை... கொட்டி தீர்த்த கனமழை.. கோவாவிலும் மழையால் மக்கள் அவதி
- Automobiles
பெட்ரோல், டீசல் வண்டிகளை பயன்படுத்த விரைவில் தடை... கால் டாக்சி ஓட்டுபவர்களுக்கு வருகிறது புதிய ஆப்பு!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசரமாக முக்கிய முடிவை எடுக்க வேண்டாம்...
- Sports
6 ஆண்டுகளுக்கு பிறகு கோலிக்கு சோகம்.. டெஸ்ட் தர வரிசையில் பண்ட் பாய்ச்சல்
- Travel
ஆசியாவிலேயே தூய்மையான கிராமம் – மேகாலயாவில் உள்ள மவ்லின்னாங்கின் சுற்றுலாத் தலங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
யாரு அந்த ராக்ஸ்டார்.. பள்ளி விழாவிற்காக மாணவர்களின் வேற லெவல் திட்டம்.. ஓகே சொல்லும் மலர் டீச்சர்!
சென்னை : 90 கிட்ஸ்களின் பேவரைட் சீரியல்களில் ஒன்றாக தற்போது வரையில் உள்ளது விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் தொடர்.
13 ஆண்டுகளுக்கு முன்பு ஒளிபரப்பான இந்தத் தொடரில் ஜோ, ராகவி, சங்கவி, பாண்டி, உன்னி, ரிஷி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
இவர்களில் பலர் அடுத்தக்கட்டங்களில் சினிமாவிலும் நடித்து சிறப்பான வரவேற்பை பெற்றனர்.
யானையை பார்த்து பயந்த நயன்தாரா.. தயங்கிய விக்னேஷ் சிவன்.. கடைசியில் செம காமெடி!

கனா காணும் காலங்கள் தொடர்
விஜய் டிவியின் சீரியல்கள் தொடர்ந்து பல ஆண்டுகளை கடந்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருபவை. கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சேனலில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடர் தற்போது வரை ரசிகர்களின் விருப்பத்திற்குரிய தொடராக காணப்படுகின்றன. குறிப்பாக 90 கிட்ஸ்கள் வெறித்தனமாக பார்த்த தொடர்களில் இதுவும் ஒன்று.

அடுத்த லெவலுக்கு நகர்ந்த நடிகர்கள்
இந்தத் தொடரில் நடித்த ஜோ, ராகவி, சங்கவி, பாண்டி, உன்னி, ரிஷி உள்ளிட்டவர்கள் இந்தத் தொடரின்மூலம் அடுத்தக்கட்டங்களுக்கு தங்களை உயர்த்திக் கொண்டனர். பிளாக் பாண்டி என்று அழைக்கப்பட்ட பாண்டி இந்த சீரியலுக்கு பிறகு அங்காடித் தெரு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

ரசிகர்களை கட்டிப்போட்ட தொடர்
ராகவி கேரக்டரில் நடித்த தீபா தென்றல் சீரியலில் முக்கியமான கேரக்டரில் நடித்தார். இதேபோல இம்ரான் திரைத்துறையில் 3 படங்களுக்கு மேல் சிறப்பான கதாபாத்தரங்களில் நடித்து புகழ்பெற்றார். இந்தத் தொடர் அந்த அளவிற்கு ஏராளமான ரசிகர்களை கட்டிப் போட்டது. தற்போதும் இந்தத் தொடர் ஒளிப்பரப்பானால் கண்டிப்பாக சிறப்பான வெற்றியை பெறும்.

ரசிகர்கள் உற்சாகம்
இந்தத் தொடரின் மூலம் தங்களது பள்ளிக் காலங்களுக்கே ரசிகர்கள் சென்றனர். ஸ்கூல், லேப், ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசியரியர் என இந்தத் தொடரில் வரும் அனைத்துமே பசுமை மாறாமல் ரசிகர்கள் நினைவில் காணப்படுகிறது. இந்தத் தொடருடன் சேர்த்து 4 சீசன்கள் வெளியான போதிலும் முதல் சீசன் கொடுத்த உற்சாகத்தை ரசிகர்கள் மறக்காமல் உள்ளனர்.

வெப் தொடர்
இந்நிலையில் தற்போது இந்தத் தொடர் மீண்டும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெப் தொடராக ஒளிபரப்பாகி வருகிறது. தீபிகா வெங்கடாசலம், ராஜா, வெற்றி, பிரபு அரவிந்த், தேஜா வெங்டேஷ் ஆகிய புதுமுக நடிகர்கள் மாணவர்களாக நடித்து வருகின்றனர். நடிகர் ராஜேஷ் பள்ளியின் நிறுவனர் சக்திவேலாக நடித்து வருகிறார். ராஜ்மோகன் பிடி மாஸ்டராக நடித்துள்ளார்.

மாணவர்கள் திட்டம்
இந்நிலையில் பள்ளியின் விழாவிற்காக மாணவர்கள் அனைவரும் சிறப்பான பல ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் ராக்ஸ்டாராக திரைத்துறையில் கலக்கிவரும் அசோக் தங்களது பள்ளியின் முன்னாள் மாணவர் என்ற விஷயம் தெரியவருகிறது.

ஆசிரியர்கள் பிளான்
இப்போது அவரை தங்களது பள்ளி விழாவிற்கு அழைப்பது, அதையொட்டி தங்களது பள்ளியை சமூக வலைதளங்களில் பிரபலப்படுத்துவது என்று மாணவர்கள் திட்டமிட்டு ஆசிரியர்கள் மலர் மற்றும் ஜெர்ரி ஆகியோரிடம் கூறுகின்றனர். அவர்களும் அசோக்கை பள்ளி விழாவிற்கு அழைப்பது குறித்து திட்டம் தீட்டுகின்றனர்.

ரசிகர்கள் உற்சாகம்
ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த கனா காணும் காலங்கள் தொடர் தற்போது காலத்திற்கேற்க வெப் தொடராக ஒளிபரப்பாகி வருகிறது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருவதால் மிஸ் செய்த எபிசோட்களையும் நினைத்த நேரத்தில் பார்த்துக் கொள்ளும் வசதி உள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.