Jhanvi : ஜான்வியை ஏமாற்றி தோழி செய்த துரோகம்.. குழந்தையே பிறந்துடுச்சாமே.. ஷாக் ரிப்போர்ட்!

பெங்களூரு: வெள்ளிக்கிழமை ஆனாலே சின்ராசை கையில் பிடிக்க முடியாது என்பது போல், ஒரு ஆண்டின் இரண்டாம் பாதி வந்துவிட்டாலே, படங்கள் ரிலீஸ் ஆவதன் மீது ஆர்வம் இருக்கிறதோ இல்லையோ, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மீது தனி ஆர்வம் வந்துவிடுகிறது. அந்த வகையில் கன்னட பிக்பாஸில் கலந்து கொண்டுள்ள சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற ஜான்வி தனது சொந்த வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை தெரிவித்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கன்னட மக்களிடத்தில் தனது பேச்சாலும், அறிவாலும் குறுகிய காலத்தில் பிரபலமான ஜான்வி, தற்போது திரையுலகில் கால் பதித்துள்ளார். 'அதிபத்ரா' திரைப்படம் மூலம் ஏற்கனவே சினிமாவில் காலடி எடுத்து வைத்து தனது திறமையை நிரூபித்த அவருக்கு, அதன் பிறகு பெரிய வாய்ப்புகள் அமையவில்லை. தற்போது 'யுவ சர்க்கார்' என்ற ஒரு படத்தில் ஜான்வி நடித்துள்ளார். இந்தப் படம் எப்போது வெளியாகும் என்பது தெரியவில்லை என்றாலும், ஜான்வியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பலருக்கும் ஆரம்பத்திலிருந்தே ஆர்வம் உள்ளது.

Kannada Bigg Boss Contestant Jhanvi reveals ex husband married her Close friend before divorce

இதனை பிரதிபலிக்கும் வகையில், பல பேட்டிகளில் ஜான்வியிடம் அவரது திருமணம் மற்றும் விவாகரத்து குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இந்தக் கேள்விகளுக்கு ஜான்வி சோர்வடையாமல் பதிலளித்து வந்துள்ளார். தற்போது தனது விவாகரத்து விஷயத்தை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ஜான்வி, அதை துருப்புச் சீட்டாக பயன்படுத்துகிறாரா என்ற சந்தேகம் பலரிடையே எழுந்துள்ளது. காரணம், பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த முதல் நாளிலேயே, சுதீப் முன்னிலையில் தனது திருமணம் மற்றும் விவாகரத்து குறித்து ஜான்வி பேசியிருந்தார்.

விவாகரத்து: அதன்பிறகு, சக போட்டியாளர்களிடம் பேசிய ஜான்வி, "நமது பாரம்பரிய குடும்பங்களில், வெளியில் என்ன சொல்வார்களோ என்று கருதி, கணவன் மனைவியைப் பிரிந்து வாழாமல் இருக்க சிலர் முயற்சிப்பார்கள். ஆனால், ஒரு கட்டத்தில் அது நடக்காமல் போனதும், எனது குடும்பத்தினர் கூட 'இவ்வளவு நடந்த பிறகு வேண்டாம்' என்று சொல்லிவிட்டார்கள். அப்போது எங்களுக்கு இன்னும் விவாகரத்து ஆகவில்லை. ஆனால், நாங்கள் கிட்டத்தட்ட இரண்டு இரண்டரை வருடங்கள் பிரிந்து தான் இருந்தோம். ஏதாவது மாறுமா என்று நாங்கள் காத்திருந்தோம். ஆனால் எதுவும் மாறவில்லை.

Kannada Bigg Boss Contestant Jhanvi reveals ex husband married her Close friend before divorce

தோழி செய்த துரோகம்: அதன்பிறகு, அதிகாரப்பூர்வமாக விவாகரத்து நடந்தது. விவாகரத்து ஆவதற்கு முன்பே, என் முன்னாள் கணவருக்கு வேறொருவருடன் திருமணம் ஆகி, குழந்தை இருப்பதும் எனக்குத் தெரியவந்தது. அந்தப் பெண் வேறு யாருமில்லை, என் தோழிதான். இரண்டு இரண்டரை வருடங்களாக நாங்கள் பிரிந்திருந்த போது, இவையெல்லாம் நடந்துள்ளன.

அதிர்ச்சி: எனக்குத் தெரிந்ததும் அதிர்ச்சியாக இருந்தது. அவள் என் தோழி. என் கூடவே இருந்தவள். எப்படி இவர்கள் இருவருக்கும் தொடர்பு ஏற்பட்டது? திருமணம் ஆகி, குழந்தையும் இருக்கிறதா? இதையெல்லாம் பார்த்தபோது, ஒரு சினிமா கதை போல எனக்குத் தோன்றியது" என்று ஜான்வி தெரிவித்தார். கன்னட பிக்பாஸ் ரசிகர்கள் தற்போது இவரது தோழி இவருக்குச் செய்த துரோகத்தை குறித்துதான் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். அதே நேரத்தில் ஜான்வி தனது விவாகரத்து கதையைச் சொல்லி, ரசிகர்கள் மத்தியில் தனக்கான அனுதாபத்தை தேட முயற்சிக்கிறார் என்றும் பலர் கருத்து சொல்லி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X