பிரசவ வலியில் துடிக்கும் தனம்... தூக்கிக் கொண்டு ஓடும் கண்ணன் வெளியான பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ
சென்னை : விஜய் டிவி.,யில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் டிஆர்பி ரேட்டிங்கில் கடும் போட்டி நடப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா சீரியல்கள் இடையே தான். இந்த இரண்டு சீரியல்களும் சமீப காலமாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றன.
குடும்ப கதை, யதார்த்தமாக கதைக்களம், கூட்டுக் குடும்ப ஒற்றுமை, அண்ணன் - தம்பி பாசத்தை சொல்வதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்கள் மிக அதிகம். கண்ணன் - ஐஸ்வர்யா திருமணம், லட்சுமி அம்மாவின் மரணம் ஆகியவற்றால் இந்த சீரியலில் சென்டிமென்ட் கொஞ்சம் தூக்கலாகவே இருந்து வருகிறது.

எதிர்வீட்டிற்கு குடி வரும் கண்ணன்
மறுபடியும் வழக்கமாக கதையாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சென்று கொண்டிருக்கும் போது, புதிய ட்விஸ்டாக, கண்ணன் - ஐஸ்வர்யா பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டிற்கு எதிர் வீட்டில் குடி வருகிறார்கள். எதிர்வீட்டில் இருந்து கொண்டு அண்ணன் பைக்கை துடைப்பது என கண்ணன் சென்டிமென்ட்டை காட்டினாலும், மூர்த்தி உள்ளிட்ட அனைவரையும் ஜாடையாக பேசி நக்கல் செய்து ரசிக்க வைக்கிறார் ஐஸ்வர்யா.

ரசிகர்கள் ஆர்வம்
எதிர்வீட்டில் இருந்தால் முகத்தை பார்த்துக் கொள்ள முடியும் என கண்ணன், ஐஸ்வர்யாவிடம் சொல்கிறான். அதே வார்த்தையை தனமும், முல்லை மற்றும் மீனாவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறாள். இதனால் கண்ணனை மூர்த்தி உள்ளிட்ட குடும்பத்தினர்கள் மறுபடியும் சேர்த்துக் கொள்வார்களா என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

பிரசவ வலியில் துடிக்கும் தனம்
இந்நிலையில் இன்றைய எபிசோடிற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில், வீட்டில் மூர்த்தி, கதிர், ஜீவா யாரும் இல்லாத சமயத்தில் தனத்திற்கு பிரசவ வலி வருகிறது. தனத்தின் அம்மாவும், தனமும் என்ன செய்வதென தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது தனத்தின் அலறல் சத்தம் கேட்டு, எதிர் வீட்டில் இருந்து கண்ணனும், ஐஸ்வர்யாவும் ஓடி வருகிறார்கள்.

தூக்கி செல்லும் கண்ணன்
தனத்தை ஹாஷ்பிடல் கூட்டிச் செல்ல வண்டி வர தாமதமாகிறது. இதற்கிடையில் தனம் வலியால் துடிப்பதை தாங்க முடியாத கண்ணன், தனத்தை தானே கையில் தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்க்கிறான். இந்த ப்ரோமோ ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இதனால் கண்ணனை மீண்டும் மூர்த்தி மன்னித்து ஏற்றுக் கொள்வார், பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் ஒன்று சேர போகிறதா என ரசிகர்கள் ஆர்வமாக கேட்டு வருகிறார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிய போகிறதா
குடும்ப ஒன்று சேர போகிறது என்றால், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிய போகிறதா, அப்படியானால் குடும்பத்தை பிரிக்க வேண்டும் என்ற கஸ்தூரியின் திட்டம் பனாலா என நெட்டிசன்கள் கமெண்ட் செய்துள்ளனர். இன்னும் சிலர் அடுத்து என்ன ட்விஸ்ட் வைத்து, கதையை இன்னும் இழுக்க போகிறார்களோ என கூறி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











